12th Tamil Refresher Course Unit 10 Answer key
Topic 10 வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக
12th Tamil Refresher Course Answer key Topic 10 வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக, 12th Tamil Refresher Course Answer key Topic 10, Tamil Refresher Course Answer key Topic 10 வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books, Day Planner, 12th Refresher Course Answers.
12th Tamil Refresher Course Answer key Topic 10 வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக
12th Tamil Refresher Course Unit 10 Answer key
- 12th Tamil Refresher Course Answer key
- தலைப்பு 10
- Class: 12 | வகுப்பு - 12
- Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் | 2021 - 2022
- Topic : 10 வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக
- தலைப்பு : 10 வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக
மதிப்பீடு
Question 1. வல்லினம் மிகும் சொற்கள் எவை?
- க , ச , த , ப முன் வல்லினம் மிகும்.
Question 2.
வல்லினம் மிகும் இடங்கள் இரண்டு கூறி அதற்கான எடுத்துக்காட்டுகள் தருக.
- அந்த , இந்த என்பதற்குப் பின் வல்லினம் மிகும் . ( சுட்டுப்பெயரடை )
சான்று :
- அந்த + கடை = அந்தக்கடை
- இந்த + சொல் = இந்தச்சொல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வலி மிகும்.
- சான்று : வாடா + பூ = வாடாப்பூ
Question 3.
வல்லினம் மிகா இடங்கள் எவை? சான்று தருக.
- வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
சான்று:
- திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்
- குடி + தண்ணீர் = குடிதண்ணீர்
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
சான்று :
- செடி + கொடி = செடிகொடி
- இரவு + பகல் = இரவு பகல்
நல்ல, இன்ன, இன்றைய போன்ற பெயரடைகளின் பின்னும் படித்த, எழுதாத போன்ற பெயரெச்சங்களின் பின்னும் ஒற்று மிகாது.
சான்று :
- நல்ல + கதை நல்ல கதை
- இன்ன + பெயர் = இன்ன பெயர்
- படித்த + புத்தகம் = படித்த புத்தகம்
மென் தொடர்க் குற்றியலுகரத்தில் வலி மிகாது.
சான்று :
- பகிர்ந்து + கொண்டான் = பகிர்ந்து கொண்டான்
- வந்து + சென்றான் வந்து சென்றான்
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
சான்று :
- மருந்து + கடை = மருந்து கடை (மருந்தைக் கடை )
- தயிர் + கடை = தயிர் கடை ( தயிரைக் கடை )
செய்த என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகாது.
சான்று :
- செய்த + போது = செய்தபோது
- சொன்ன + படி = சொன்னபடி
0 Comments:
Post a Comment