> 12th Tamil Refresher Course Unit 5 Answer key ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil Refresher Course Unit 5 Answer key

12th Tamil Refresher Course Unit 5 Answer key 

Topic 5 | 

12th Tamil Refresher Course unit  5 - திணை 

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் -  5 - திணை 

12th Tamil Refresher Course Answer key

12th Tamil Refresher Course Answer key   தலைப்பு  5 - திணை 

  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  5 - திணை 
  • கற்றல் விளைவுகள் , 
  • கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 
  • மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.
  • தலைப்பு  : 5 திணை 

 மதிப்பீடு 

Question 1. 

திணை என்றால் என்ன? அவற்றின் வகைகள் ?

  • திணை என்றால் ஒழுக்கம் அல்லது இனம் என்று பொருள். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திணையின் அடிப்படையில் பகுக்க முடியும்.

  •  திணையைச் சொல் பாகுபாடு முறையில் 2 வகையாகப் பிரிக்கலாம், இதனைக் கீழ் வகுப்பில் படித்து இருப்பீர்கள். அவை

  1. உயர்திணை, 
  2. அஃறிணை.

மக்கள் தேவர் நரகர் உயர்திணை

மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை

-(நன்னூல் -261)

திணை பொருள் பாகுபாடு முறையில் 2 வகையாகப் பிரிக்கலாம்

  1. அகத்திணை (வாழ்வியல்)
  2. புறத்திணை (உலகியல்)

அகத்திணை ( வாழ்வியல்):

1. குறிஞ்சி 

2. முல்லை 

3. மருதம் 

4. நெய்தல் 

5. பாலை 

6. கைக்கிளை 

7. பெருந்திணை

புறத்திணை (உலகியல்):

1. வெட்சி 

2. கரந்தை 

3. வஞ்சி 

4. காஞ்சி 

5. நொச்சி 

6. உழிஞை

7. தும்பை

8. வாகை 

9. பாடாண்  

10. பொதுவியல் 

11. கைக்கிளை 

12. பெருந்திணை

தொல்காப்பியம் குறிப்பிடும் திணைகள் -7

புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் திணைகள் - 12

 புறநானூற்றில் பாடப்பட்டுள்ள புறத்திணைகள் - 11 (உழிஞை நீங்கலாக)

Question 2. 

தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை? அவை யாவை?

  • தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் 7.

அவை , 

  1. வெட்சி 
  2. வஞ்சி 
  3. உழிஞை 
  4. தும்பை
  5. வாகை 
  6. காஞ்சி 
  7. பாடாண் 

Question 3.

புறநானூறு குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை ? அவை யாவை?

  • புறநானூறு குறிப்பிடும் புறத்திணைகள் 11.

அவை , 

  1. வெட்சி 
  2. கரந்தை 
  3. வஞ்சி 
  4. காஞ்சி 
  5. நொச்சி
  6. தும்பை 
  7. வாகை 
  8. பாடாண் 
  9. பொதுவியல் 
  10. கைக்கிளை
  11. பெருந்திணை

Share:

0 Comments:

Post a Comment