12th Tamil Refresher Course unit 6 Answer key
12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் - 6. துறை - வினாக்களும் விடைகளும்
12th Tamil Refresher Course Unit 5 Answer key
- 12th Tamil Refresher Course Answer key
- தலைப்பு 5 - துறை
- Class: 12 | வகுப்பு - 12
- Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் | 2021 - 2022
- Topic : 6 துறை
- கற்றல் விளைவுகள் ,
- கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள்
- மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.
- தலைப்பு : 6 துறை
மதிப்பீடு
Question 1.
துறை என்றால் என்ன?
- ' துறை ' என்பது ஒரு சிறிய பிரிவு அல்லது பகுப்பு .
- திணையின் உட்பிரிவு 'துறை ' எனலாம்.
- மக்கள் வாழ்க்கைக்கு உரிய நெறி எனவும் கூறலாம்.
Question 2.
பொருண்மொழிக்காஞ்சித் துறையைச் சான்றுடன் விளக்கிக் கூறுக.
பொருண்மொழிக் காஞ்சித்துறை
துறை விளக்கம்
- மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண் மொழிக்காஞ்சித் துறையாகும்.
சான்று
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்
(புறம் - கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி)
சான்று விளக்கம்
- தமக்காக உழைக்காமல் பிறர்க்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள், தனித்து உண்ண மாட்டார்கள், பழிக்கு அஞ்சுவர் வெறுத்தல், சோம்பல் இன்றிச் செயல்படுவார்கள்.
- புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பர், பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவர். எதற்கும் மனம் தளராதவர்கள். இத்தகைய சிறப்புடையோர் இருப்பதால்தான் இவ்வுலம் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது.
துறை பொருத்தம்
- புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பர், பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளார் என்று மக்களுக்கு நன்மை செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித் துறைக்குப் பொருந்தி வருகிறது.
0 Comments:
Post a Comment