> 12th Tamil Refresher Course Unit 7 Answer key ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil Refresher Course Unit 7 Answer key

12th Tamil Refresher Course Unit 7 Answer key 

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021-2022 , கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் -  7. அணி இலக்கணம் - வினாக்களும் விடைகளும்

12th Tamil Refresher Course Unit 7 Answer key 

  • 12th Tamil Refresher Course Answer key   
  • தலைப்பு  7 அணி இலக்கணம் 
  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic :  7 அணி இலக்கணம் 
  • கற்றல் விளைவுகள் , 
  • கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 
  • மதிப்பீடு வினாக்களும் , விடைகளும்.
  • தலைப்பு  : 7 அணி இலக்கணம் 


 மதிப்பீடு 

Question 1. 

அணி இலக்கணம் கூறும் நூல்களை எழுதுக?

அணி இலக்கணம் மட்டும் கூறும் நூல்கள்.

  • தண்டியலங்காரம் 
  • மாறனரங்காரம் 
  • குவலயானந்தம் 

அணி இலக்கணத்தையும் கூறும் நூல்கள்

  • தொல்காப்பியம் 
  • வீரசோழியம்
  • இலக்கண விளக்கம்
  • தொன்னூல் விளக்கம்
  • முத்துவீரியம் போன்றவை ஆகும்

Question 2.

 உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.

உவமை அணி

  • உவமானம் ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைய, இடையில் உவமஉருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.


சான்று

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு ,

விளக்கம்

  •  புடமிடச் சுடுகையில் ஒளிவிடும் பொன்போலத் தவம் இருப்பவரைத் துன்பம் வருத்த வருத்த ஞானம் மெருகேரும்.


உவமானம் : சுடச்சுடரும் பொன்

உவமேயம்: துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

உவம உருபு : போல்

  • இக்குறட்பாவில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவை வெளிப்படையாகப் பயின்று வந்துள்ளதால் உவமை அணி ஆயிற்று.

Question 3. 

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் 

பார்த்தாக்கப் பக்கு விடும் 

- இக்குறட்பாவில் பயின்றுள்ள அணியை விளக்குக

உருவக அணி

  •  உவமையின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றிக்கூறுவது உருவக அணியாகும்.
  • உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி எனப்படும்.

சான்று

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்த்தாக்கப் பக்கு விடும்.

விளக்கம்

  •  இக்குறட்பாவில், பிறரிடம் இரந்து வாழ்வது பாதுகாப்பற்ற தோணியாகவும், கொடை வழங்காதது பாறையாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இது உருவக அணி ஆயிற்று.

Topic 7 | அணி இலக்கணம் 

12th Tamil Refresher Course Answer key  Topic 7 அணி இலக்கணம் , 12th Standard Refresher Course Answer key, 12th Tamil  7 அணி இலக்கணம், 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.


Share:

0 Comments:

Post a Comment