> 7th Social Science Term 2 Solution | Lesson.7 ஊடகமும் ஜனநாயகமும் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

7th Social Science Term 2 Solution | Lesson.7 ஊடகமும் ஜனநாயகமும்

7th Social Science Term 2 Solution | Lesson.7 ஊடகமும் ஜனநாயகமும்

Lesson.7 ஊடகமும் ஜனநாயகமும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?

  1. வானொலி
  2. தொலைக்காட்சி
  3. செய்தித்தாள்
  4. இணையதளம்

விடை :3. செய்தித்தாள்

2. கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது

  1. இதழ்கள்
  2. அறிக்கைகள்
  3. நாளிதழ்கள்
  4. வானொலி

விடை :4. வானொலி

3. உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்

  1. தட்டச்சு
  2. தொலைக்காட்சி
  3. தொலைப்பேசி
  4. இவற்றில் எதுவும் இல்லை

விடை :2. தொலைக்காட்சி

4. வெகுஜன ஊடகம் என்பது

  1. வானொலி
  2. தொலைக்காட்சி
  3. அ மற்றும் ஆ
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : 3.அ மற்றும் ஆ

5. ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

  1. நிறைய பணம் ஈட்ட
  2. நிறுவனத்தை ஊக்கப்படுத்த
  3. நடுநிலையான தகவலை தருவதற்கு
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : 3.நடுநிலையான தகவலை தருவதற்கு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது

விடை : வெகுஜன ஊடகம்

2. சட்டமன்றத்தின் ஒவ்வொரு தனிமனிதனும் _______________ ஆகும்

விடை : வெளிப்பாடு

3. அச்சு இயந்திரம் _______________என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது

விடை : ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்

4. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு _______________ ஆகும்.

விடை : நெறிமுறை

5. இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் ___________________

விடை : அகில இந்திய வானொலி (அகாசவானி)

III. பொருத்துக

1. குறு அளவிலான ஊடகம்- கூகுள் இணையம்

2. சமூக ஊடகம் -சுவரொட்டிகள்

3. அச்சு ஊடகம்- கருத்தரங்கு

4. இணைய ஊடகம் -திரைப்படங்கள்

5. ஒலிபரப்பு ஊடகம்- முகநூல்

விடை : 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – ஈ

IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை (√) டிக் செய்யவும்

4. கூற்று : அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.

காரணம் : பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.

  1. கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
  2. கூற்று சரி, கூற்றிற்கான விளக்கம் சரியல்ல
  3. கூற்று சரி, விளக்கம் தவறு
  4. கூற்று மற்றும் விளக்கம் தவறு

விடை : 1.கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது

2. தவறான ஒன்றை கண்டுபிடிக்க

  1. செய்தித்தாள்கள்
  2. நாளிதழ்கள்
  3. அறிக்கைகள்
  4. கீச்சகம்
  5. சுவரொட்டிகள்

விடை :4. கீச்சகம்

3. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்

அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்

ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும்

இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது

ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது

  1. அ, ஆ மற்றும் இ சரி
  2. அ, ஆ மற்றும் ஈ சரி
  3. ஆ, இ மற்றும் சரி
  4. அ, ஆ மற்றும் ஈ சரி

விடை : 1.அ, ஆ மற்றும் இ சரி

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

1. ஊடகம் என்றால் என்ன?

  • ஊடகம் என்பது ஓருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய சாதனமாகும். ஊடகம் என்பது அச்சு, ஒலி, ஒளி என அனைத்துவகை பரப்பு சாதனங்களையும் உள்ளடக்கியதே ஆகும்.

2. உள்ளூர் ஊடகத்தின் முக்கியத்துவம் யாவை?

  • பொதுவாக ஊடகம் என்பது தேசிய மற்றும் உலக செய்திகளை அளிப்பதாகும். உள்ளூர் ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவதாகும்.

3. ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் நிரூபிக்கவும்

  • சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுகிறது.
  • ஊடகம் மற்ற மூன்று துறை செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது.
  • இந்த நான்காவது தூண் நாட்டின் தொலைதூர பகுதிகளில் வாழும் அனைத்து மக்களும் நாட்டின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது.
  • உண்மையில் ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகம் என்பது தகவல்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக முக்கிய சாதனமாக செயல்படுகிறது.

4. ஊடகத்தின் ஏதாவது இரண்டு பொறுப்புகளைக் கூறுக

  • ஊடகம் என்பது அவற்றின் செயல்பாடுகள் மற்றும் எழுத்தின் மூலமும் பிரதிபலிக்க வேண்டும்.
  • எளிதில் உணர்வுகளை தூண்டக்கூடிய தேவையற்ற செய்திகளை தவிர்க்கவேண்டும்.

VII. பின்வரும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்

1. ஊடகத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

  • குறுகிய தொடர்பு ஊடகம்
  • கேபிள் தொலைக்காட்சி
  • நேரடி அஞ்சல்
  • கருத்தரங்கு
  • தொலைத்தொடர்பு ஊடகம்
  • திரைப்படங்கள்
  • தொலைக்காட்சி
  • வானொலி
  • அச்சு ஊடகம்
  • செய்தித்தாள்கள்
  • இதழ்கள்
  • பத்திரிக்கைகள் புத்தகங்கள்,
  • சுவரொட்டிகள்
  • அறிக்கைகள்
  • இணைய ஊடகம்
  • கூகுள் இணைய தளங்கள்
  • வலைப்பதிவுகள்
  • சமூக ஊடகம்
  • கீச்சகம்
  • முகநூல்
  • புலனம்/கட்செவி அஞ்சல்
  • படவரி

2. ஜனநாயகத்தில் ஊடகம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது?

  • ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும்.
  • நமது ஜனநாயக சமுதாயத்தில் ஊடகம் பொதுமக்களின் கருத்துக்களை செயல்படுத்தும் உந்து சக்தியாகும்.
  • இது ஜனநாயகத்தின் மதிப்புகளை பலப்படுத்துகிறது. இது மக்களுக்கு அறிவையும், வலிமையும் அளிக்கிறது.
  • மேலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வையும், ஏற்படுத்துகிகிறது.
  • அரசின் வெளிப்படைத்தன்மையும், அவற்றின் பொறுப்பினையும் உறுதி செய்கிறது. ஊடகம் அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச்செல்கிறது.
  • இதன் மூலம் அரசின் செயல்பாடுகளையும் மக்களின் அன்றாட நிகழ்வுகளையும் குடிமக்கள் அறிந்து கொள்கிறார்கள்.
  • இது நடப்பு செய்திகளை பற்றிய விவாதத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஒரே பிரச்சினைகளுக்குப் பல்வேறு கருத்துக்களை பெறமுடிகிறது.
  • ஊடகமானது மக்களுக்கு அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை நினைவூட்டுகிறது. இது கிராமப்புற மக்களுக்கு கல்வி அளிக்கிறது.
  • பாராளுமன்றம் மற்றும் ஜனநாயகம் ஆகிய இரண்டும் ஊடகத்தின் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே வலிமை அடையும். ஊடகம் அறிக்கைகள் அளிப்பது மட்டுமல்லாது அரசிற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது.
  • மேலும் ஊடகம் அரசாங்கத்தை கண்காணிக்கும் பணியையும் செய்கிறது. ஊடகம் இல்லாத ஜனநாயகம் என்பது சக்கரம் இல்லாத வாகனத்திற்கு ஒப்பாகும் .

3. ஊடகத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை?

  • ஊடகம் மக்களை விழிப்போடு இருக்கச்செய்கிறது.
  • மேலும் சமூக மாற்றத்திற்கான மிக முக்கிய சாதனமாகவும் இருக்கிறது .
  • ஊடகம் உலகின் அன்றாட நிகழ்வுகளை மட்டுமல்லாமல் ஒரு அரசின் பலம் மற்றும் பலவீனத்தை வெளிக்கொண்டு வருகிறது.
  • தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை மக்களிடம் விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
  • அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் தேசிய மற்றும் பன்னாட்டு செய்திகளை ஒளிபரப்பரப்புகின்றன.
  • ஊடகம் மக்களிடையே ஒரு பொதுவான கருத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. (ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் மக்களின் பொதுக்கருத்து) இது சமகாலத்தின் சக்தி வாய்ந்த கருவியாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
  • இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த பார்வை மற்றும் புரிதலில் ­பொதுமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மக்களுக்கு சமூகத்தில் நடைபெறுகின்ற முக்கியபிரச்சனைகளை பற்றிய கருத்துக்களை ­தெரிவிக்க அச்சு ஊடகங்களும், மின்னனு ஊடகங்களும் உதவுகின்றன.

Share:

0 Comments:

Post a Comment