> 7th Social Science Term 2 Solution | Lesson.6 மாநில அரசு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

7th Social Science Term 2 Solution | Lesson.6 மாநில அரசு

7th Social Science Term 2 Solution | Lesson.6 மாநில அரசு

Lesson.6 மாநில அரசு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது

  1. 18 வயது
  2. 21 வயது
  3. 25 வயது
  4. 30 வயது

விடை :3. 25 வயது

2. இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை

  1. 26
  2. 27
  3. 28
  4. 29

விடை : 4.29

3. மாநில அரசு என்பது

  1. மாநில அரசின் துறைகள்
  2. சட்ட மன்றம்
  3. அ) மற்றும் ஆ)
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை :3.  அ) மற்றும் ஆ)

4. மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்

  1. குடியரசுத் தலைவர்
  2. பிரதமர்
  3. ஆளுநர்
  4. முதலமைச்சர்

விடை :3. ஆளுநர்

5. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்

  1. குடியரசுத் தலைவர்
  2. பிரதமர்
  3. ஆளுநர்
  4. தேர்தல் ஆணையர்

விடை : 3.ஆளுநர்

6. முதலமைச்சர் என்பவர்

  1. பெரும்பான்மை கட்சியின் தலைவர்
  2. எதிர்க்கட்சி தலைவர்
  3. அ மற்றும் ஆ
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை :1. பெரும்பான்மை கட்சியின் தலைவர்

7. மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்

  1. மேயர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்
  2. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி
  3. கிராமம், நகரம், மாநிலம்
  4. சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை

விடை : 4.சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________________ ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்

விடை : இந்திய குடியரசுத் தலைவர்

2. சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ___________________ ஆக நியமிக்கப்படுகிறார்

விடை : முதலமைச்சர்

3. மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ___________________

விடை : உயர் நீதிமன்றம்

4. ச.ம.உ என்பதன் விரிவாக்கம் ___________________

விடை : சட்டமன்ற உறுப்பினர்

5. ஒரு குறிப்பிட்ட பகுதியைசேர்ந்த அனைத்து வாக்காளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் ___________________ ஆவார்

விடை : சட்டமன்ற உறுப்பினர்

6. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை சாராதவராக இருப்பின் ___________________ என்று அழைக்கப்படுவர்.

விடை : எதிர்கட்சியினர்

III. பொருத்துக

1. சட்டமன்ற உறுப்பினர்கள்- தலைமைச் செயலகம்

2. ஆளுநர்- 7

3. முதலமைச்சர் -மாநிலத்தின் தலைவர்

4. யூனியன் பிரதேசங்கள்- சட்டமன்றம்

5. புனித ஜார்ஜ் கோட்டை -பெரும்பான்மை கட்சித் தலைவர்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – ஆ, 5 – அ

IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை (√) டிக் செய்யவும்

1. கீழ்காணும் வாக்கியங்களில் தவறானவை

  1. ஆளுநராக இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
  2. 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
  3. நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும்
  4. இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது

விடை :2. 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்

2. கீழ்காணும் வாக்கியங்கள் சரியா தவறா என்பதை ஆராய்க

  1. அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்
  2. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சாராத அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்
  3. சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல

விடை : 3.சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல

3. ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு

  1. இரு முதலமைச்சர்களை கொண்ட சட்டமன்றம்
  2. ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம்
  3. மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்
  4. கவர்னரை தலைவராகவும் சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட அவை

விடை : 3.மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்

4. கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது

காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

  1. கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
  2. கூற்று சரி, கூற்றிற்கான விளக்கம் சரியல்ல
  3. கூற்று சரி, விளக்கம் தவறு
  4. கூற்று மற்றும் விளக்கம் தவறு

விடை : 1.கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

1. மாநில ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?

  • 35 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
  • வாழ்வில் சிறந்த நிலையில் இருக்கவேண்டும். இவை மட்டுமல்ல, எவ்வித வருவாய் தரும் எந்த ஒரு அரச பதவியிலும் இருக்கக்கூடாது.

2. எதிர்க்கட்சியினர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

  • ஆளும் கட்சியைச் சேராத வேறு பல கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியினர் என அழைக்கப்படுவர்.

3. லோக் அதாலத் பற்றி எழுதுக.

  • லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். லோக் அதாலத்களுக்கு சட்ட சேவை அதிகாரிகள் சட்டம், 1987 இன் கீழ் சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. லோக்” என்பது மக்களையும் ‘அதாலத்” என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும்.

4. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் யார்?

  • ஆளுநர், பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக நியமிப்பார். ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசித்துத் தம் கட்சியின் உறுப்பினர்களை கொண்டு அமைச்சரவையை (மந்திரி சபையை) உருவாக்குவார். அந்த அமைச்சரவை, மாநிலத்தில் ஐந்தாண்டு ஆட்சிபுரியும்.

VII. பின்வரும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்

1. ஆளுநரின் அதிகாரத்தை விவரிக்கவும்?

  • மாநிலச் சட்டமன்றத்தின்/ ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக ஆளுநர் செயல்படுகிறார்.
  • இவர், மாநிலச் நிருவாகத்துறையின் தலைவராகவும் மகத்தான அதிகாரங்களை உடையவராகவும் திகழ்கிறார்.
  • மாநில அரசாங்கத்தின் அனைத்துச் நிருவாகத்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறுகின்றன.
  • மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் அவர் இருக்கிறார்.
  • மாநில சட்டத்துறையால் இயற்றப்படுகிற அனைத்துச் சட்டமுன் வரைவுகளும் (மசோதாக்களும்) அவரின் ஒப்புதலுக்குப் பின்னரே சட்டமாகின்றன.
  • மாநிலத் தலைமை வழக்குரைஞர், மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர், அரசுப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் போன்றோரையும் ஆளுநரே நியமிக்கிறார்

2. சட்டமன்ற உறுப்பினர் என்பவர் யார்?

  • சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிறோம்.
  • சட்டமன்ற உறுப்பினர்களையாரும் நியமிப்பதில்லை. அவர்கள், பொதுத் தேர்தல்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

3. முதலமைச்சர் மற்றும் காபினெட் அமைச்சர்களின் பணிகள் யாவை?

  • மாநில நிருவாகத்துறையின் உண்மையான தலைவராக முதலமைச்சர் செயல்படுகிறார்.
  • மக்களின் நலனுக்கானத் திட்டங்களையும் கொள்கைகளையும் முதலமைச்சர் வகுக்கிறார்.
  • முதலமைச்சர், தனது அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார்.
  • அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநிலச் சட்டசபைக்குப் பொறுப்புடையவர்களாக உள்ளனர்.
  • அவர்கள் அனைவரும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றனர்

Share:

0 Comments:

Post a Comment