> TNSCERT Online test Emis (Exams.tnschools.gov.in) - Direct Link ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TNSCERT Online test Emis (Exams.tnschools.gov.in) - Direct Link

TNSCERT Online test Emis (Exams.tnschools.gov.in) - Direct Link - Basic Quiz

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும். கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கவும். பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரைகளின்படி, 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் Hi Tech lab மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கற்றல் விளைவுகளின் அடிப்படையில், Basic Quiz நடத்த திட்டமிட்டுள்ளது.

Basic quiz exams.TN schools.gov.in Login செய்து தேர்வு எழுதும் முறை - Click here

தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் ஒரு Reading comprehension சார்ந்து 5 பலவுள் தெரிவு வினாக்களும், 5 இலக்கணம் மற்றும் மொழி அறிவு சார்ந்த பலவுள் தெரிவு வினாக்களும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலிருந்து 10 பலவுள் தெரிவு வினாக்களும் Basic Quiz - ல் கேட்கப்படும்.

அனைத்து தலைமை ஆசிரியர்களும் இந்த Basic Quiz, 18.09.2021 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் Hi Tech lab-ல் உள்ள கணினிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு குழுவினருக்கும், மாணவர் EMIS Log in மற்றும் password ஆகியவற்றை பயன்படுத்தி 1 மணி 30 நிமிடம் கால அவகாசம் அளித்து நடத்திட வேண்டும். மேலும் இச் செயல்பாட்டினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குழு மாணவர்களும் Basic Quiz முடித்தபின் உடனுக்குடன் அடுத்தடுத்த குழு மாணவர்களை அமரவைத்து அனைத்து மாணவர்களும்

EMIS மற்றும் Hi-Tech lab-ல் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த வழிகாட்டுதல்கள்:

இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட கீழ்க்கண்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

1. மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2. அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்தி பள்ளியில் பயிலும் மாணவர்களை தேவைக்கேற்ப அமரவைத்து தேர்வை நடத்த வேண்டும். அனைத்து மாணவர்களையும் இணைய வழியாக தேர்வில் பங்கெடுப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.

3. பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி / Tab எண்ணிக்கைகு ஏற்ப மாணவ மாணவியரை தேர்வில் ஈடுபடுத்த வேண்டும். தேர்வு நேரம் 90 நிமிடம் முடியும் வரை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 4. ஒரு மாணவர் தேர்வு முடித்த பின்பு தொடர்ந்து அடுத்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கலாம். 5. காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்ந்து வினாத்தாள் Live ஆக இருக்கும்.

6. அனுமதிக்கப்பட்ட வினாத்தாள் ஒரு நாள் முழுவதும் Live ஆக இருப்பதால், ஒரு மாணவர் எப்போது தொடங்கினாலும் 90 நிமிடத்திற்குள் முடிக்கும்படியாக இருத்தல் வேண்டும்.

7. தேர்வு நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Log in செய்தல், Online refesh செய்தல் போன்ற Technical உதவி மட்டுமே செய்ய வேண்டும். வினா விடை சார்ந்து எந்த உதவியும் செய்யக் கூடாது

8. பள்ளிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய கணினி வளங்கள் 

  1. Hi-Tech Lab
  2. Hi-Tech Lab வருவதற்கு முன்னர் இருந்த Computer Lab
  3. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட Laptop.
  4. CSR activity மூலம் பெறப்பட்ட கணினிகள் மேல்நிலைப் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடி கணினிகள்
  5. அதே வளாகத்தில் உள்ள பள்ளிகளில் இருக்கும் கணினிகள் CRC, BRC களில் உள்ள System / Laptop .
  6. பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள tab
  7. ஆசிரியர்களின் Laptop

10. இந்த தேர்வில் எதிர்கொள்ளும் சவால்களை EMIS Team தரும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி உரிய முறையில் சரி செய்ய வேண்டும் அல்லது உரிய அலுவலகத்திற்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

11. இணைய இணைப்பு (internet), மின்சாரம் ஆகியன தடையில்லாமல் இருக்க தகுந்த
முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

12. Basic Quiz தேர்வினை http://exams.tnschools.gov.in URL மூலம் நடத்தவேண்டும்.

13. அந்த இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID-ஐ login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு password மாணவர்களின் EMIS ID-ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும். உதாரணமாக - ஒரு மாணவரின் EMIS ID 3390xxxx0400018 எனில், அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான Login ID, அதில் இறுதியாகவுள்ள 0018-வுடன் "@" symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2006 எனில் அந்த மாணவரின் password 0018@2006 ஆகும்.


Login ID : 3390xx0400018

PWD : 0018@2006

14. Login செய்து உள்நுழைந்தவுடன் தேர்விற்கான வினாத்தாளில் ஒவ்வொரு வினாவாக திரையில் தோன்றும். 15. மாணவரின் EMIS ID, பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாணவரின் திறன் அடையாள அட்டையில் (ID Card) உள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
Share:

0 Comments:

Post a Comment