> 10th Social Science Refresher Course Answer key Topic 13 மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th Social Science Refresher Course Answer key Topic 13 மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்

10th Social Science Refresher Course Answer key Topic 13 

மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்

  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • பாடம்  13. மறுமலர்ச்சி காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்

மதிப்பீடு

சரியான விடையை எடுத்து எழுதுக

1. கீழ்க்கண்டவற்றில் யார் மனிதநேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்

அ) லியனார்டோ டாவின்சி

ஆ) பிரான்சிஸ்கோ பெட்ராக்

இ) எராஸ்மஸ்

ஈ ) தாமஸ் மூர்

  • விடை : ஆ ) பிரான்சிஸ்கோ பெட்ராக்

2. வில்லியம் ஹார்வியின் கண்டுபிடிப்பு

அ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

ஆ) பூமியே பிரபஞ்சத்தின்மையம்

இ) புவியீர்ப்பு விசை

ஈ) ரத்தத்தின் சுழற்சி

  • விடை : ஈ ) ரத்தத்தின் சுழற்சி

3. பூமத்திய ரேகையை கடந்த முதல்மாலுமி

அ) மாலுமி ஹென்றி

ஆ) லோபோகோன்சல்வ்ஸ்

இ) பார்த்தலோமியோ டயஸ்

ஈ) கொலம்பஸ்

  • விடை : ஆ ) லோபோகோன்சல்வ்ஸ்

4.பசிபிக் பெருங்கடல் எனபெயரிட்டவர்

அ) கொலம்பஸ்

ஆ) அமெரிகோவெஸ்புகி

இ) பெர்டினாண்ட் மெக்கலன்

ஈ) வாஸ்கோடகாமா

  • விடை : இ ) பெர்டினாண்ட் மெக்கலன்

5. அமெரிக்க கண்டம் யாரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது ?

அ) ஹெர்னான்டோகார்ட்ஸ்

ஆ) வாஸ்கோடகாமா

இ) கொலம்பஸ்

ஈ) அமெரிகோவெஸ்புகி

  • விடை : ஈ ) ஆமெரிகோ வெஸ்புகி

விடையளி

1. அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

  • மறுமலர்ச்சிக்கு தூண்டுகோலாய் அமைந்தன.
  • நவீனமயமாதலை வேகப்படுத்தியது.
  • தாலமியின் ' ஜியாகரபி ' என்ற நூல்  பல பிரதிகள் அச்சிடப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டன.
  • புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான அறிவு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது.

2. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்ட வழித் தடங்களை குறிப்பிடுக.

  • (பார்த்தலோமியோ டயஸ், வாஸ்கோடகாமா,கொலம்பஸ் ,பெர்டினாண்ட் மெக்கலன்)

3. தொடக்ககால அச்சு இயந்திரத்திற்கும் நவீனகால அச்சு இயந்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகளை அறிக.

தொடக்ககால அச்சு இயந்திரம்

  • மரச்சட்டத்தில் எழுத்துருக்களைச் செதுக்கி அதை மையால் அமிழ்த்தி காகிதத்தில் அச்சு எடுத்தனர்.
  • ஒரு புத்தகத்திற்குப் பயன்படுத்திய சட்டத்தை மற்ற புத்தகத்திற்குப் பயன்படுத்த முடியாது.
  • மிகவும் அரிதாக இருந்தது.
  • அதிக நேரம் எடுத்தது.
  • தரம் நன்றாக இல்லை.
  • நவீனகால அச்சு இயந்திரம்
  • இரும்பு சட்டம் பயன்படுத்தப்பட்டது.
  • எழுத்துளை மற்ற புத்தகங்களுக்குப் பயன்படுத்த முடியும்.
  • எளிதாகக் கிடைக்கப்பெற்றது
  • ஒரு நிமிடத்திற்கு சுமார் 70 பக்கங்கள் வரை விரைவாக எடுக்கலாம்.
  • புதிய மின்னணு கருவிகளை உபயோகிப்பதன் மூலம் வண்ணமயமாக விரும்பியபடி பிரதிகள் அச்சிடலாம்.

Share:

0 Comments:

Post a Comment