> 10th std Tamil refresher Course Unit 5 Answer key ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th std Tamil refresher Course Unit 5 Answer key

10th std Tamil refresher Course Unit 5 Answer key 

பயன்பாட்டு இலக்கணம்-எச்சம்

10th std Tamil refresher Course Unit 5 Answer key - Click her

எச்சம் என்றால் என்ன என்பதைக் காண்பதற்கு முன்பாக, வினைமுற்று என்றால் என்ன என்பதை அறிவோம். பொருள் முடிவு பெற்றுவரும் வினைச்சொல், வினைமுற்று எனப்படும்.

  • (எ.கா.) எழுதினான்

இவ்வினைமுற்று, முழுமையான பொருளைத் தருகிறது.

எச்சம்

முற்றுப்பெறாத வினைச்சொல் எச்சம் ஆகும். பொருள் முடிவு பெறாத

வினைச்சொல், பெயரையோ வினையையோ கொண்டு முடியுமானால் அது எச்சவினை எனப்படும்.

  • (எ.கா.) 'படித்த'

படித்த என்னும் இவ்வினையானது, யார், எப்போது, எதை என்பன போன்ற

வினாக்களுக்கு விடையின்றி அமைந்துள்ளது. இவ்வாறு முற்றுப்பெறாமல் அமைந்துள்ள வினை, எச்சவினை எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.

பெயரெச்சம்

பெயரைக் கொண்டு முடியும் எச்சம், பெயரெச்சம் எனப்படும்.

  • (எ.கா.) படித்த பள்ளி.

1. தெரிநிலைப் பெயரெச்சம்

செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப்பெயரெச்சம் எனப்படும்.

  • (எ.கா.) எழுதிய கடிதம்

இத்தொடரில் எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும், இறந்த

காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

2. குறிப்புப்பெயரெச்சம்

செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

(எ.கா.) சிறிய கடிதம்

இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல் செயலையோ, காலத்தையோ காட்டவில்லை. சிறிய என்னும் பண்பினைமட்டும் காட்டுகிறது.

வினையெச்சம்

வினையைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும்.

  • (எ.கா.) படித்து முடித்தான். எழுதி மகிழ்ந்தான்.

1. தெரிநிலை வினையெச்சம்

செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம்,தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

  • (எ.கா) எழுதி வந்தான்.

இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

2. குறிப்பு வினையெச்சம்

காலத்தைவெளிப்படையாகக் காட்டாமல் பண்பினைமட்டும் குறிப்பால் உணர்த்தும்  வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

(எ.கா.) மெல்ல வந்தான்.

இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல், காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.

முற்றெச்சம்

ஒரு வினைமுற்று, எச்சப்பொருளைத் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

(எ.கா.) வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.

இத்தொடரில் படித்தனள் என்ற சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தந்து மகிழ்ந்தாள் என்னும் மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது.

Share:

0 Comments:

Post a Comment