> 1st – 8th வகுப்புகளுக்கு Nov.8 முதல் பள்ளிகள் திறப்பு? கல்வித்துறை ஆலோசனை ~ Kalvikavi - Educational Website - Question Paper

1st – 8th வகுப்புகளுக்கு Nov.8 முதல் பள்ளிகள் திறப்பு? கல்வித்துறை ஆலோசனை

1st – 8th வகுப்புகளுக்கு Nov.8 முதல் பள்ளிகள் திறப்பு? கல்வித்துறை ஆலோசனை..

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் நவ-8 ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்ய அம்மாநில பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வருகிறது. தற்போது தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் செப்-1 ம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு இதுவரை நல்லமுறையில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி மாநிலத்திலும் செப்-1 ம் தேதி 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நவ-1 ம் தேதி 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளிகள் திறக்கவிருப்பதால் மாணவர்களுக்கு பயிற்சிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தை பின்பற்றி வருகின்ற புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வருகிறது.

இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். மக்களின் குழப்பத்தை போக்கும் வகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் சமீபத்தில் தமிழகத்தை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும். மேலும் இதுகுறித்து முதலமைச்சர் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியிட்டுள்ளார். 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு பள்ளிகள் திறக்க எவ்வித தடையும் இல்லை என்று மாநில கல்வித்துறை அரசுக்கு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், நவம்பர் 1 ம் தேதி விடுதலை நாள், 2 ம் தேதி கல்லறை நாள் மற்றும் 4 ம் தேதி தீபாவளி என்பதனால் பள்ளி நவம்பர் 8ம் தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் 1 நாள் விட்டு 1 நாள் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் குறைந்த நேரத்தில் அதிக பாடங்களை நடத்தி முழுமையாக தேர்வுக்கு தயார் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. அதனால் மாணவர்களுக்கு முழுநேர வகுப்பு தொடரவும், தினசரி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலை புதுச்சேரி மாநிலத்திலும் நிலவி வருவதால் புதுச்சேரி அரசும் அதற்கு அனுமதி வழங்குமாறு அம்மாநில ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். புதுச்சேரி அரசு ஆசிரியர்களின் இந்த கோரிக்கையை ஏற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts