> 8th Science Basic Quiz 2 Answer key - Tamil Medium - விசையும் அழுத்தமும் ~ Kalvikavi - Educational Website - Question Paper

8th Science Basic Quiz 2 Answer key - Tamil Medium - விசையும் அழுத்தமும்

8th Science Basic Quiz 2 Answer key - Tamil Medium - விசையும் அழுத்தமும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. வளிமண்டலஅழுத்தத்தின் SIஅலகு யாது?

அ. நியூட்டன் / மீட்டர்

ஆ. பாஸ்கல்

இ. mm/ Hg 

ஈ. amu

2. பாதரசமானியைக் கண்டறிந்தவர் யார்?

அ. நியூட்டன்

ஆ. பாஸ்கல்

இ. டாரிசெல்லி

ஈ. ஆர்க்கிமிடிஸ்

3. SIஅலகுமுறையில் ஒரு வளிமண்டலஅழுத்தம் என்பது யாது?

அ. 100000 நியூட்டன்

ஆ. 100000 பாஸ்கல்

இ. 100000 ns/m2

ஈ. 100000 m/s

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.:

4. ஒரு பொருள் மிதப்பதை தீர்மானிப்பது ________ 

Answer : மேல் நோக்கு விசை

5. விசையால் செலுத்தப்படும் அழுத்தம் விசையின் எண்மதிப்பையும், அது செயல்படுத்தப்படும்______ சார்ந்து இருக்கும்.வெளிப்புற அழுத்தம

Answer : தொடு பரப்பையும்

III. சுருக்கமாக விடையளி :

6. கீழ்காணும் படம் எந்தவிதியை விளக்குகிறது. 


Answer : 

  • பாஸ்கல் விதி ( மூடிய அமைப்பில் ஓய்வு நிலையில் உள்ள திரவத்தின் எந்தவொரு புள்ளியிலும் அளிக்கப்படும் அழுத்தமானது அத்திரவத்தின் அனைத்துப் புள்ளிகளுக்கும் சமமாக பகிரந்தளிக்கப்படும் என்று பாஸ்கல் விதி கூறுகிறது.)

7. உனது தந்தை எப்பொழுது ஊருக்கு சென்றாலும் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள பெட்டியை எடுத்துச் செல்வதற்கு காரணம் யாது எனநீஅறிந்ததுண்டா? 

Answer : 

  • உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருக்கும்.

8. கோடாரி, சுத்தியல், துளையிடும் கருவி ஆகியவை உள்ளன. இவற்றில் மரம் வெட்டுவதற்கு நீ எதை தேர்ந்தெடுப்பாய்? காரணம்கூறு.

Answer :

  • கோடாரி. காரணம் : மிகச்சிறிய பரப்பினையும், அதிக அழுத்தத்தினையும் கொண்டுள்ளது.

9. மாதவன் தனது ஊரில் உள்ள குளத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரையை சென்றடைய காற்று நிரப்பிய ரப்பர் டியூப் பயன்படுத்துகிறான். இங்கு செயல்படும் தத்துவம் யாது ?

Answer :

  • மிதப்பு விசை (ஆர்க்கிமிடிஸ் தத்துவம்)

10. மதுரையிலுள்ள மாலினியின் வீட்டில் 2 நிமிடத்தில் நூடுல்ஸ் சமைக்கப்படுகிறது.

அதே நூடுல்ஸ் கொடைக்கானலில் உள்ள அவளது தோழி நளினியின் வீட்டில் சமைப்பதற்கு ஐந்து நிமிடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது ஏன்?

Answer : 

  • உயரமான இடங்களில் வளிமண்டல அழுத்தம் குறைவாக இருப்பதால் பொருளின் கொதிநிலையும் குறைவாக இருக்கும்.

11. ராமு தரையில் குறுக்கே ஒரு கனமான கல்லை நகர்த்த முயற்சிக்கிறான். அதை க நர்த்த அவரது தந்தை அவருக்கு உருளை கம்பிகளைக் கொடுத்தார். காரணம் சொல்லுங்கள்.

Answer : 

  • உருளும் உராய்வு விசை குறைவு. எனவே உராய்வைக் குறைக்க முடியும்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts