8th Std Social Science History | Lesson 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை| Book back Answers
Lesson 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
அ.சுஜா-உத்– தெளலா
ஆ.சிராஜ்- உத் – தெளலா
இ.மீர்காசிம்
ஈ.திப்பு சுல்தான்
விடை : ஆ.சிராஜ்- உத் – தெளலா
2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
அ.1757
ஆ.1764
இ.1765
ஈ.1775
விடை : அ.1757
3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
அ.அலகாபாத் உடன்படிக்கை
ஆ.கர்நாடக உடன்படிக்கை
இ.அலிநகர் உடன்படிக்கை
ஈ.பாரிசு உடன்படிக்கை
விடை : அ.அலகாபாத் உடன்படிக்கை
4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி ____________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அ.முதல்
ஆ.இரண்டாம்
இ.மூன்றாம்
ஈ.ஏதுமில்லை
விடை : இரண்டாம்
5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ____________
அ.1756
ஆ.1761
இ.1763
ஈ.1764
விடை : ஆ.1761
6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது
அ.பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
ஆ.ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
இ.ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
ஈ.திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
விடை : இ.ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்_____
அ.இராபர் கிளைவ்
ஆ.வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ.காரன்வாலிஸ்
ஈ.வெல்லெஸ்லி
விடை : இ.காரன்வாலிஸ்
8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்__________
அ.இரண்டாம் பாஜிராவ்
ஆ.தெளலத்ராவ் சிந்தியா
இ.ஷாம்பாஜி போன்ஸ்லே
ஈ.ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
விடை : அ.இரண்டாம் பாஜிராவ்
9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா____
அ.பாலாஜி விஸ்வநாத்
ஆ.இரண்டாம் பாஜிராவ்
இ.பாலாஜி பாஜிராவ்
ஈ.பாஜிராவ்
விடை : ஆ.இரண்டாம் பாஜிராவ்
10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?
அ.அயோத்தி
ஆ.ஹைதராபாத்
இ.உதய்பூர்
ஈ.குவாலியர்
விடை : ஆ.ஹைதராபாத்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு _______
விடை : 1757
2. சிராஜ் உத் – தெளலாவின் தலைமை படைத் தளபதி ___________
விடை : மிர் ஜாபர்
3. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் ____________
விடை :கர்நாடக மற்றும் ஹைதராபாத் வாரிசுரிமை பிரச்சனை
4. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____
விடை :டல்ஹெளசி பிரபு
5. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________
விடை : வெல்லெஸ்சி பிரபு
6. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
விடை : மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
7. 1800ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ____
விடை : வெல்லெஸ்சி பிரபு
III.பொருத்துக
1. அய் – லா – சப்பேல் உடன்படிக்கை -முதல் ஆங்கிலேய மைசூர் போர்
2. சால்பை உடன்படிக்கை -முதல் கர்நாடகப் போர்
3. பாரிசு உடன்படிக்கை -மூன்றாம் கர்நாடகப் போர்
4. ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை -முதல் மராத்திய போர்
5. மெட்ராஸ் உடன்படிக்கை -மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – இ, 4 – உ, 5 – அ
IV. சரியா, தவறா?
1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ்- உத் – தெளலா வங்காளத்தின் அரியணை ஏறினார்
விடை : சரி
2. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்
விடை : தவறு
3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.
விடை : தவறு
4. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
விடை : சரி
5. காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.
விடை : சரி
V. கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
- அடையாறு போர் – 1748
- ஆம்பூர் போர் – 1754
- வந்தவாசிப் போர் – 1760
- ஆற்காட்டுப் போர் – 1749
விடை : வந்தவாசிப் போர் – 1760
VI. பின்வரும் வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வரிகளில் விடையளி.
1. இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.
- சிராஜ்-உத்-தெளலாவின் படை வீரர்கள் 146 ஆங்கிலேயர்களை சிறைப்பிடித்து கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் காற்று புகாத ஒரு சிறிய இருட்டறையில் ஓர் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்.
- மறுநாள் காலை அறையை திறந்தபோது அவர்களுள் 123 பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். இது வரலாற்றில் ’இருட்டறை துயரச் சம்பவம்’ என்றழைக்கப்படுகிறது.
2. பிளாசிப் போருக்குபின் ஆங்கிலேயர்கள் பெற்ற சலுகைகள் யாவை?
- பிளாசிப் போர் வெற்றி ஆங்கிலேயரது அரசியல் அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கிவைத்தது மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு அவர்களது ஆதிக்கத்தை நீடிக்கவும் செய்தது.
3. பக்சார் போருக்கான காரணங்களை குறிப்பிடுக
- தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டார்.
- ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட அவர் அயோத்திக்கு தப்பி ஓடி அடைக்கலம் புகுந்து அங்கு சுஜா-உத்-தெளலா மற்றும் இரண்டாம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கி போரில் இறங்கினார்.
4. முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் யாவை?
- ஹைதர் அலியின் வளர்ச்சி, அவர் பிரெஞ்சுக்காரர்களிடம் கொண்டிருந்த நட்புறவு ஆகியன ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.
- ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள், ஹைதராபாத் நிசாம், ஆங்கிலேயர்கள் இணைந்து முக்கூட்டணியை ஏற்படுத்தினர்.
5. மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை?
- இப்போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டது மற்றும் பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
- பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் பெரும்பாலான பகுதிகள் பம்பாய் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன.
- தோற்கடிக்கப்பட்ட போன்ஸ்லே மற்றும் ஹோல்கரின், மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
- மராத்தியரின் கடைசி பேஷ்வாவான இரண்டாம் பாஜிராவிற்கு வருடாந்திர ஓய்வூதியம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
6. துணைப்படைத் திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக
- ஹைதரபாத்
- தஞ்சாவூர்
- அயோத்தி
- பேஷ்வா
- போன்ஸ்லே
- குவாலியர்
- இந்தூர்
- ஜெய்பூர்
- உதய்பூர்
- ஜோத்பூர்
Long answer no this guide in history 2nd lesson today my social exam iam reading epdi
ReplyDeleteVignesh
ReplyDelete