> 8th Social science Lesson 3 - History கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Book Answers Guide ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8th Social science Lesson 3 - History கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Book Answers Guide

8th Std Social Science History | Lesson 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்| Book back Answers

Lesson 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?

அ. மகல்வாரி முறை

ஆ. இரயத்துவாரி முறை

இ. ஜமீன்தாரி முறை

ஈ .இவற்றில் எதுவுமில்லை

விடை : ஈ .இவற்றில் எதுவுமில்லை

2. எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

அ.ஹேஸ்டிங்ஸ் பிரபு

ஆ.காரன்வாலிஸ் பிரபு

இ.வெல்லெஸ்லி பிரபு

ஈ .மிண்டோ பிரபு

விடை : ஆ. காரன்வாலிஸ் பிரபு

3. மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?

அ.வீடு

ஆ.நிலம்

இ.கிராமம்

ஈ .அரண்மனை

விடை : இ.கிராமம்

4. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?

அ.மகாராஷ்டிரா

ஆ.மதராஸ்

இ.வங்காளம்

ஈ .பஞ்சாப்

விடை : ஈ .பஞ்சாப்

5. கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ.ஹேஸ்டிங்ஸ் பிரபு

ஆ.காரன்வாலிஸ் பிரபு

இ.வெல்லெஸ்லி பிரபு

ஈ .வில்லியம் பெண்டிங் பிரபு

விடை : ஈ .வில்லியம் பெண்டிங் பிரபு

6. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?

அ.பம்பாய்

ஆ.மதராஸ்

இ.வங்காளம்

ஈ .இவற்றில் எதுவுமில்லை

விடை : இ.வங்காளம்

7. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?

அ.மகாத்மா காந்தி

ஆ.கேசப் சந்திர ராய்

இ.திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்

ஈ .சர்தார் வல்லபாய் பட்டேல்

விடை :இ. திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்

8. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?

அ.சர்தார் வல்லபாய் பட்டேல்

ஆ.மகாத்மா காந்தி

இ.திகம்பர் பிஸ்வாஸ்

ஈ .கேசப் சந்திர ராய்

விடை : அ.சர்தார் வல்லபாய் பட்டேல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  _________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.

விடை : மகால்வாரி முறை

2. மகல்வாரி முறை _________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம்.

விடை : ஹோலட் மெகன்சி

3. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி _______ல் நடைபெற்றது.

விடை : வங்காளத்தில்

4. மாப்ளா கலகம் _________ல் நடைபெற்றது.

விடை : கேரளாவில்

5. ’சம்பரான் விவசாயச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு _________

விடை : 1918

III.பொருத்துக
1. நிரந்தர நிலவரி திட்டம்மதராஸ்
2. மகல்வாரி முறைஇண்டிகோவிவசாயிகளின் துயரம்
3. இரயத்துவாரி முறைவடமேற்கு மாகாணம்
4. நீல் தர்பன்வங்காளம்
5. சந்தால் கலகம்முதல் விவசாயிகள் கிளர்ச்சி

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ, 5 – உ

IV. சரியா, தவறா?

1. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்

விடை : சரி

2. இரயத்துவாரி முறை, தாமன் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

விடை : சரி

3. குஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது

விடை : தவறு

4. “பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” 1918ல் நிறைவேற்றப்பட்டது.

விடை : தவறு

V. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்யவும்

1. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.

அ. இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆ . ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.

இ . விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

ஈ . இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

விடை : விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.

2. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?

அ. சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.

ஆ . நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

இ .தக்காண கலகம் 1873 ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.

ஈ .மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.

விடை : நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

VI. பின்வரும் வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வரிகளில் விடையளி.

1. நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.

  • ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
  • விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக ஜமீன்தார்கள் செயல்பட்டனர்.

2. இரயத்துவாரி முறையின் சிறப்புக் கூறுகள் யாவை?

  • வருவாய் ஒப்பந்தம் நேரடியாக விவசாயிகளுடன் செய்துகொள்ளப்பட்டது.
  • நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
  • அரசு, விளைச்சலில் 45 லிருந்து 50 சதவீதம் வரை வரியாக நிர்ணயம் செய்தது.

3. மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.

  • கிராமத் தலைவர், சலுகைகளை தமது சொந்த விருப்பங்களின் அடிப்படையில் தவறாகப் பயன்படுத்தினார்.
  • இம்முறையானது விவசாயிகளுக்கு இலாபகரமானதாக இல்லை.
  • இம்முறையானது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக இருந்தது. மேலும் இது கிராமத்தின் உயர் வகுப்பினருக்கு இலாபகரமானதாக அமைந்தது.

4. 1859-60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?

  • விவசாயிகளுக்கு மிகவும் தீமை தரும் வகையில் இண்டிகோவை வளர்ப்பதற்கு குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தினர்.
  • மேலும் குத்தகை விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் அவுரியை தங்களுக்கு குறைந்த விலைக்கு விற்கும்படியும், வற்புறுத்தப்பட்டனர்.

5. சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?

  • சம்பரான் விவசாயிகளின் பிரச்சினையை அறிந்து கொண்ட மகாத்மா காந்தி அவர்களுக்கு உதவ முன்வந்தார்.
  • அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, மகாத்மா காந்தியை அக்குழுவின் ஓர் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
  • விவசாயிகளின் குறைகள் விசாரிக்கப்பட்டு இறுதியில், மே, 1918ல் “சம்பரான் விவசாயச் சட்டம்” நிறைவேற்றப்பட்டது.

6. பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.

  • 1928ல் 30 சதவீதம் அளவிற்கு அரசு நிலவருவாயை உயர்த்தியது அதனால், பர்தோலி (குஜராத்) விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
  • மேலும் விவசாயிகள், உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து பிப்ரவரி 12, 1928ல் வரிகொடா இயக்கத்தைத் தொடங்கினர்.
  • இதில் பல பெண்களும் கலந்து கொண்டனர்.
Share:

0 Comments:

Post a Comment