8th std Tamil Basic quiz 11 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 11 Tamil)
- எட்டாம் வகுப்பு - தமிழ்
- வினாடி வினா (Basic Quiz) - 11 -
- இயல் - 3
- கற்கண்டு - எச்சம்
1. கீழ்க்காணும் சொற்களிலுள்ள இறுதி எழுத்தை நீக்கி பெயரெச்சச் சொற்களை உருவாக்குக.
வ. எண் வினைமுற்று பெயரெச்சம்
எ.கா. சென்றது சென்ற
1) வந்தது வந்த
2) கூறியது கூறிய
3) வாழ்ந்தது வாழ்ந்த
4) வளர்ந்தது வளர்ந்த
2. கீழ்க்காணும் பெயரெச்சச் சொற்களைக்கொண்டு வினையெச்சச் சொற்களை உருவாக்குக.
வ. எண் பெயரெச்சம் வினையெச்சம்
எ.கா. சென்ற சென்று
1) வந்த வந்து
2) கண்ட கண்டு
3) வாழ்ந்த வாழ்ந்து
4) வளர்ந்த வளர்ந்து
3. குறிப்புப் பெயரெச்சத்தைத் தெரிநிலைப் பெயரெச்சமாக மாற்றுக.
அ) அழகிய பள்ளி - புகழ் பெற்ற பள்ளி
ஆ) அழகிய ஓவியம் - வரைந்த ஓவியம்
4. குறிப்பு வினையெச்சத்தைத் தெரிநிலை வினையெச்சமாக மாற்றுக.
அ) விரைந்து மலர்ந்தது - மொட்டு விரிந்து மார்ந்தது
ஆ) வேகமாக வளர்ந்தது - உண்டு வளர்ந்தது
5. விடுபட்ட கட்டங்களை நிரப்புக.
வினைமுற்று பெயரெச்சம் வினையெச்சம்
பார்த்தாள் பார்த்த பார்த்து
வரைந்தான் வரைந்த வரைந்து
படித்தான் படித்த படித்து
6. கீழ்க்காணும் கவிதை அடிகளில் இடம்பெற்றுள்ள எச்சங்களை எடுத்தெழுதுக.
"நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி
நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்
கொஞ்சிக் குலவிகரையை வாட்டிக்
குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி"
(ஓடை- வாணிதாசன்)
விடை -
- வினையெச்சம் - ஊட்டி , ஓட்டி , வாட்டி , கூட்டி
- பெயரெச்சம் - குளிர்ந்த
7. பறவை' என்னும் பெயரைக்கொண்டு மூன்று காலங்களுக்கும் பெயரெச்சத் தொடர்கள் அமைக்க.
இறந்தகாலம் - பறந்த பறவை
எதிர்காலம் - பறக்கும் பறவை
நிகழ்காலம் - பறக்கின்ற பறவ
8. கீழ்க்காணும் தொடர்களிலுள்ள எச்சங்களை எடுத்தெழுதுக.
இயற்கை சீற்றம் கொண்டு பொங்கி எழுந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது. கொண்டு ,பொங்கி, எழுந்து
ஆ) கடலில் விரைந்து வந்த கப்பல் கவிழ்ந்தது.
- வந்த கப்பல்
இ) திரண்டு எழுந்த மேகங்களால் மழை பெய்தது.
- எழுந்த
ஈ) மரங்கள் அனைத்தும் ஒடிந்து விழுந்தன.
- ஒடிந்து
உ) வேகமாக வீசிய காற்று பேரிழப்பை ஏற்படுத்தியது.
- வீசிய காற்று
9. கீழ்க்காணும் கதையைப் பொருத்தமான எச்சங்களைக்கொண்டு நிறைவு செய்க.
ஓர் ஊரில் பரந்த காடு ஒன்று இருந்தது. அக்காட்டில் பல்வேறு விலங்குகள் வாழ்ந்து. வந்தன. ஒரு நாள் புள்ளிமான் ஒன்று நீர் நிரம்பிய குளத்தில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. அதைக் கண்ட. புலி, மானை வேட்டையாடி, உண்ண நினைத்தது.
10. கீழ்க்காணும் தொடர்களில் முற்றெச்சத் தொடரை எடுத்து எழுதுக
அ) படித்து மகிழ்ந்தாள் நிறமி.
ஆ) வியந்தான் பார்த்தனன் அகிலன்.
விடை -
- ஆ) வியந்தான் பார்த்தனன் அகிலன்.
__________________________________________________________________________________
0 Comments:
Post a Comment