> 8th std Tamil Basic quiz 14 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 14 Tamil) ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8th std Tamil Basic quiz 14 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 14 Tamil)

8th std Tamil Basic quiz 14 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 14 Tamil)

1. ) ஐந்தாம், ஏழாம் வேற்றுமைகளில் வேறு வேறு பொருளில் வரும் உருபினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) இல்

ஆ)இன்

இ) அது

ஈ)கண்

விடை: அ ) இல்



2. வேற்றுமை உருபும், சொல்லுருபும் இல்லாத வேற்றுமையினைத் தெரிவு செய்க.

அ) நான்காம் வேற்றுமை

ஆ ) ஐந்தாம் வேற்றுமை

இ ) எட்டாம் வேற்றுமை

ஈ) இரண்டாம் வேற்றுமை

விடை: இ ) எட்டாம் வேற்றுமை



3. உரிய வேற்றுமைகளைக் கூறுக.

அ) இராமன்

விடை: எழுவாய்  வேற்றுமை ( முதல்                                                                   வேற்றுமை ) 

ஆ) இராமா

விடை: விளிவேற்றுமை ( எட்டாம் வேற்றுமை)

 

4. கீழ்க்காணும் தொடர்களில் வேற்றுமை உருபை விரித்து எழுதுக.

அ) தலை வணங்கினான்

விடை: தலையால் வணங்கினான்

ஆ) குளம் வெட்டினான்

விடை : குளத்தை வெட்டினான்

என் கை

விடை - எனது கை



5. கீழ்க்காணும் தொடர்களின் வேறுபாடு கூறுக.

அ) கூலிக்கு வேலை

விடை: நான்காம் வேற்றுமை விரி

ஆ) கூலி வேலை

விடை: நான்காம் வேற்றுமைத் தொகை



6. தொடர்களைப் பொருளோடு பொருத்துக.

                                                         விடை

அ) கம்பரது காப்பியம் - உரிமைப்பொருள்

ஆ) தமிழிற்கு அமுதென்று பேர் - அதுவாதல்

இ) ஊரின்கண் கூடி வாழ்ந்தனர்  - இடப்பொருள்

பாடல் பாடுவதில்  - ஏதுப்பொருள்



7. கோடிட்ட இடங்களை நிரப்புக.

பெரும்பாலான சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள்  பயனிலை ஆகிய மூன்று உறுப்புகள்  இடம் பெற்றிருக்கும். எழுவாயுடன் வேற்றுமை உருபுகள்எதுவும்  இணையாமல் எழுவாய்  தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல்வேற்றுமைஆகும் . இதனை எழுவாய் வேற்றுமை என்றும் கூறுவர்.


8. சரியா? தவறா? என எழுதுக.

அ) வேற்றுமை உருபுகள் கொண்ட வேற்றுமைகளின் எண்ணிக்கை ஆறு.

( சரி )

ஆ) ஐந்தாம் வேற்றுமையைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.

( தவறு )


இ) வேற்றுமை உருபுகளுக்குப் பதிலாகச் சொற்களே உருபுகளாக வருவது
சொல்லுருபுகள் ஆகும்.

( சரி )

9 ) உரைப்பகுதியில் அமைந்துள்ள மரபுப்பிழைகளை எடுத்தெழுதுக.

கூடைபின்னிக் கொண்டிருந்த கண்ணன் காகம் கத்துகின்ற ஒலிகேட்டு
வீட்டை விட்டு வெளியே வந்தான். அம்மா தந்த சோற்றை அதற்குச் சாப்பிட
வைத்தான். காகம் சோற்றைத் தின்றுவிட்டு, அருகிலிருந்த தொட்டியில் நீரைப் பருகியது. மகிழ்ச்சியாய்க் கூவியவாறே பறந்துசென்றது.

விடை:

கூடை பின்னிக் - கூடை முடைதல்

கத்துகின்ற  - கரைகின்ற

தின்றுவிட்டு  - உண்டுவிட்டு

கூவியவாறே  - கரைந்தவாறே

10. கீழே தரப்பட்டுள்ள உரைப்பகுதியில் அமைந்துள்ள வேற்றுமை உருபுகளையும், சொல்லுருபுகளையும் எடுத்தெழுதுக,

குமரன் தன் வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்றான். செல்லும் வழியில்
அவனது தோழன் இராமனுடைய இல்லம் இருந்தது. இராமனை அழைக்கும்
பொருட்டு குமரன் அவன் வீட்டருகே சென்றான். ஆனால், இராமன் பெற்றோருடன்  திருவிழாவில் கலந்துகொள்ள வெளியூர் சென்றுவிட்டதாகத் தோட்டக்காரர்
கூறினார்.

விடை:   வேற்றுமை உருபுகள்

1 ) பள்ளிக்குச் சென்றான் - நான்காம் வேற்றுமை உருபு

2 ) அவனது தோழன் - ஆறாம் வேற்றுமை உருபு 

             சொல்லுருபுகள்

1 ) இராமனுடைய இல்லம் - உடைய

2 ) அழைக்கும் பொருட்டு - பொருட்டு

3 ) சென்றுவிட்டதாக  - ஆக

4 ) பெற்றோருடன் - உடன்
Share:

0 Comments:

Post a Comment