8th std Tamil Basic quiz 5 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 5 Tamil)
1. கீழ்வருவனவற்றுள் வாணிதாசனின் சிறப்புப்பெயர்களில் பொருந்தாததை எழுதுக.
(அ) சிந்துக்குத்தந்தை
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்
ஆ) பாவலர்மணி
ஈ) கவிஞரேறு
விடை: சிந்துக்குத் தந்தை
2. கீழ்வருவனவற்றுள் எதுகை இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க.
(அ) கொஞ்சி - குலவி
இ) நெஞ்சில் -செஞ்சொல்
ஆ) நன்செய் - புன்செய்
ஈ) ஏடு -ஈடு
விடை: கொஞ்சி - குலவி
3. சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க
அ) வாணிதாசன் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் கவிஞர் என்று புகழப்படுபவர்.
ஆ) தமிழகத்தின் கவிஞர் வாணிதாசன் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்.
இ) கவிஞர் வாணிதாசன் என்று புகழப்படுபவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்.
ஈ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
விடை ஈ ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
4. சேர்த்தெழுதுக.
அ) செம்மை +சொல்- செஞ்சொல்
ஆ ) நீளுழைப்பு- நீள் + உழைப்பு
5. சொல்லையும் அதற்கான பொருளையும் பொருத்துக.
விடை
அ) மாதர் -பெண்
ஆ) கவி --அழகு
இ) ஈடு - இணை
ஈ ) ஏடு - நூல்
6. கீழ்க்காணும் பாடலடிகளின் பொருளை உன் சொந்த நடையில் எழுதுக.
நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
நீளுழைப்பைக் கொடையைக் காட்டி'
விடை:
- நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர்வெட்கப்படுமாறு இடையறாது ஓடி தன் உழைப்பைக் கொடையாகத்தருகிறது.
7. உனக்குத் தெரிந்த நீர்நிலைகளின் பெயர்களை எழுதுக.
விடை:
- அருவி, ஓடை, ஏரி, ஆறு, குளம், குட்டை, ஊருணி,கேணி, கிணறு, சுனை, கடல், தடாகம், பொய்கை.
8. பாடலைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.
"ஓடை ஆட உள்ளம் தூண்டுதே-கல்லில்
உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் (ஓடை ஆட)
நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி
நாட்டு மக்கள் வறுமை ஓட்டி"
(ஓடை ஆட)
வினாக்கள்:
அ) பாடலடிகள் எதனைப் பற்றி எழுதப்பட்டுள்ளன?
விடை:
- பாடலடிகள் நீரோடையில் உள்ள நீர்வளத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளன.
ஆ) பாடலில் இடம்பெறும் நிலங்களின் வகைகள் யாவை?
விடை:
- நன்செய், புன்செய்
இ) எது நாட்டு மக்களின் வறுமையைப் போக்குகிறது?
- விடை: நீரோடை
'ஈ ) நன்செய்' - என்னும் சொற்றொடரில் 'செய்' என்பதன் பொருள் என்ன?
விடை:
- செய் - நிலம், வயல்
9. கட்டத்தில் விடுபட்டுள்ள பாடல் வகை, பாடும் சூழலை நிரப்புக.
பாடல்வகை / பாடும் சூழல்
வள்ளைப்பாட்டு/
- நெல்குத்தும்போது பாடுவது.
தாலாட்டு
- குழந்தையைத் தூங்க வைக்கப் பாடுவது.
ஒப்பாரிப்பாட்டு
- மனிதன் இறந்த பிறகு பாடுவது
ஏற்றப்பாட்டு
- நீர் இறைக்கும்போது பாடுவது.
நடவுப்பாட்டு
- நாற்று நடும்போது பாடுவது
10. கீழ்க்காணும் படத்தைப் பார்த்து 'இயற்கை' என்னும் தலைப்பில் நான்கு வரி கவிதை எழுதுக. விடையைக் குறிப்பேட்டில் எழுதுக.
மரத்தடியில் உதிர்ந்து
கிடக்கும் மலர்கள்..!
தன்னை வளர்த்து விட்ட
வேர்களை மரம் பூப்போட்டு
வணங்குகிறதா..?
__________________________________________________________________________________
0 Comments:
Post a Comment