8th Tamil Quiz 1 Answer Key -வினாடி வினா 1 - 2021-2022 Worksheet 1 ( bridge Course)
வினாடி வினா 1
கவிதைப் பேழை - தமிழ்மொழி வாழ்த்து
1. ‘சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க’ - என்னும் பாடலடியில் ‘கலி’ என்பதன் பொருள் என்ன என்பதைக் கண்டறிந்து எழுதுக.
அ) இரவு
ஆ) அறியாமை இருள்
இ) இருட்டு
ஈ ) அறிவுச்சுடர்
விடை : ஆ) அறியாமை இருள்
2. ‘சிந்துக்குத் தந்தை’ எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் யார் எனத் தெரிவுசெய்க.
அ) வாணிதாசன்
ஆ) சுப்புரத்தினதாசன்
இ) பாரதிதாசன்
ஈ ) கவிமணி தேசிகவிநாயகம்
விடை இ) பாரதிதாசன்
3. சரியா? தவறா? என எழுதுக.
அ) ‘இசைகொண்டு வாழியவே’ - இவ்வடியில் ‘இசை’ என்னும் சொல் புகழைக் குறிக்கிறது. ( )
விடை : சரி
ஆ) தொல்லையகன்று - என்பதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது தொல்லை+யகன்று ஆகும். ( )
விடை : தவறு
சரியான விடை : தொல்லை + அகன்று
இ) பாரதியார், தேசபக்திப்பாடல்கள்மூலம் விடுதலை உணர்வினை மக்களிடையேஏற்படுத்தினார். ( )
விடை : சரி
ஈ) மொழி, மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. ( )
விடை : சரி
4. கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ) “வான மளந்தது அனைத்தும் அளந்திடு _____________________ வாழியவே!”
விடை :வண்மொழி
ஆ) ‘வைப்பு’ என்பதன் பொருள் ______________________________ ஆகும்.
விடை :நிலப்பகுதி
5. பொருத்தமான நிறுத்தக்குறியிடுக.
பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார் இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தவாதி விடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்ற வித்தகர் ஆவார்.
விடை:
பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார் . இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் 'பாரதி' என்ற பட்டத்தைப் பெற்றார் . மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தவாதி , விடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்ற வித்தகர் ஆவார்.
6. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.
அ) பாரதியார் நடத்திய இதழ்களின் பெயரினை எழுதுக.
விடை:
- சக்கரவர்த்தினி, கர்மயோகி, பாலபாரத், சுதேசமித்திரன், இந்தியா, விஜயா
ஆ) தமிழ்மொழி வாழ்த்துப்பாடலில் இடம்பெற்றுள்ள தமிழின் சிறப்புகள் இரண்டனைக் கூறுக.
விடை:
(1) எல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே!
(2)ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே!
7. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
அ) பாரதியார் எத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தார்?
விடை:
- கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதியார்.
ஆ) தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டுமெனப் பாரதியார் கூறினார்?
விடை:
- பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க.
8. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
“செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! - முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்”. - து. அரங்கன்
வினாக்கள்
அ) பிரித்து எழுதுக.
செந்தமிழ் - செம்மை + தமிழ்
செங்கரும்பு - செம்மை + கரும்பு
ஆ) தொகைச்சொல்லை விரித்தெழுதுக.
மூவேந்தர் - சேரர் ,சோழர் ,பாண்டியர்
இ) முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவள் யார்?
விடை: தமிழ்
9. நீ அறிந்த கவிஞர் ஒருவரைப் பற்றி அரைப்பக்க அளவில் கட்டுரை வரைக.
(குறிப்பேட்டில் எழுதுக.)
குறிப்புச்சட்டம்
முன்னுரை
பிறப்பும் இளமையும்
விடுதலை வேட்கை
ஒருமைப்பாட்டுணர்வு
மொழிப்பற்று
நாட்டுப்பற்று
படைப்புகள்
முடிவுரை
முன்னுரை:
- இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார். பாட்டுக்கொரு புலவனாய்த் திகழ்ந்த பாரதி தம் பாடல்கள் மூலம் மக்களிடையே தமிழ்ப்பற்று, விடுதலை உணர்வு ஆகியவற்றை வளர்த்தார்.
பிறப்பும் இளமையும்:
- பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமிஇலக்குமி அம்மையார் ஆவார். சிறிய வயதிலேயே கவிதை புனையும் திறமையைப் பெற்றார். தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம் சான்றோர்களால் வழங்கப்பட்டது.
விடுதலை வேட்கை:
- 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்றார். இப்படிப்பட்ட நம் உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதை எண்ணி 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என பாடினார். வெள்ளையரின் அடக்கு முறைக்கு அஞ்சாது விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார்.
ஒருமைப்பாட்டுணர்வு:
- எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் என்றார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார்.
மொழிப்பற்று:
- பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் சிறப்பை எடுத்துரைத்தார்.
நாட்டுப்பற்று:
- பாரதத் தாயின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களைவீறு கொண்டு எழச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேடைகளிலும் வீதிகளிலும் இவருடைய பாடல்களையே பாடினார்கள். சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக் கண்டித்தார்.
படைப்புகள்:
- பாரதியார் எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.
முடிவுரை:
- வளமான, வலிமையான பாரதத்திற்குத் தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை பின்பற்றினால் அவர் கனவு கண்ட பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்.
10. உனக்குத் தெரிந்த பாரதியார் பாடல் ஒன்றனை எழுதுக.
விடை:
ஆசிரியர் : மகாகவி பாரதியார்.
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
__________________________________________________________________________________
0 Comments:
Post a Comment