தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அக்.21, 22 இல் ஆலோசனை..
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அத்துடன் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் ஆலோசனை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்பது, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் செயல்களை ஆராயும் வகையில், பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்த திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது,
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு வரும் 21ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு, வரும் 22ம் தேதியும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பள்ளிகளை ஆய்வு செய்வது கட்டாயம் என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment