> ஒரு வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை – RBI பட்டியல்.. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஒரு வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை – RBI பட்டியல்.. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..

ஒரு வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை – RBI பட்டியல்.. வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..

அக்டோபர் முதல் பாதியில், வங்கிகள் 11 நாட்களுக்கு மூடப்பட்டடிருந்த நிலையில், வரும் வாரத்தில் நாடு முழுவதும் ஆறு நாட்கள் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் மாத வங்கி விடுமுறை பட்டியலை முன்னதாகவே வெளியிட்ருந்தது. . நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை, நீங்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னதாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, வங்கிகள் மதம் சார்ந்த பண்டிகை மற்றும் அரசு விடுமுறை என்று கூடுதலாக விடுமுறையை அறிவித்துள்ளது.

மேலும், சமீபத்தில் இந்தியாவின் தேசிய மாதமாக அக்டோபர் மாதத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சில சிறப்பு பண்டிகைகள் அனைத்தும் அக்டோபர் மாதத்தில் தான் வருகிறது. நாட்டின் பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் பிராந்திய பண்டிகை மற்றும் தேதிகளை பொறுத்து மூடப்படும். மேலும், வங்கி விடுமுறைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேறுபடுகின்றது. வரும் வாரத்தில் பல முக்கிய பண்டிகைகளின் காரணமாக ஆறு நாட்கள் வங்கி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள்:

அக்டோபர் 18: 

கதி பிஹு காரணமாக அசாமின் கவுகாத்தியில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 19: முஹம்மது நபியின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஐடி-இ-மிலாட் விழாவில், புதுடெல்லி, போபால், அகமதாபாத், பெலாப்பூர், சென்னை, டேராடூன், ஹைதராபாத், இம்பால், ஜம்மு, கான்பூர், கொச்சி, வங்கிகள் மூடப்படும். லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்.

அக்டோபர் 20: வால்மீகி ஜெயந்தியையொட்டி பெங்களூரு, சண்டிகர், சிம்லா, கொல்கத்தா மற்றும் அகர்தலாவில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 22: ஈத்-இ-மீலாத்-உல்-நபியைத் தொடர்ந்து ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 23: நான்காவது சனிக்கிழமை என்பதால் இந்தியா முழுவதும் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 24: வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.

Share:

0 Comments:

Post a Comment