CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
இந்தியாவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 – 2022ம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (18.10.2021) முதல் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியாக உள்ளது.
CBSE முதல் பருவத்தேர்வு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறையும் திட்டமிட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட நாடு முழுவதும் பள்ளிகள் திறந்து தற்போது 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஏற்கனவே அச்சத்தால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகவே திறக்கப்பட்டது.
தற்போது இரண்டாம் காலாண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மத்திய கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டு கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக எவ்வித தேர்வுக்கும் நடைபெறவில்லை. கடைசி நேரத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்.
இப்போது வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருவதால் மத்திய கல்வி வாரியம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வை நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கால அட்டவணை அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு கால அட்டவணை cbse.nic.in அல்லது cbseacademic.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment