ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி & முகவரியினை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்
ஆதார் கார்டில் தேவைகேற்ப மாற்ற வேண்டிய விவரங்களை எளிதாக நீங்களே ஆன்லைன் மூலம் மாற்றி கொள்ளலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
ஆதார் கார்டு:
இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக மாறி விட்டது. இந்த ஆதாரில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், வயது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். பான் கார்டு பெற அரசின் நலத்திட்டங்கள், கேஸ் இணைப்பு பெற, மற்ற பிற வேலைகளுக்கும் ஆதார் முக்கிய ஆவணமாக பெறப்படுகிறது. ஆதார் அட்டை முக்கிய இருப்பிட சான்றாக கருதப்படுகிறது. ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண் மற்றும் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அட்டையில் தேவைக்கேற்ப விவரங்களை மாற்றி கொள்ளும் வசதியை ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதார் சேவை மையம் மூலம் ஆதார் அட்டையில் புகைப்படம், மொபைல் எண், முகவரி போன்ற விவரங்களை எளிதாக மாற்றலாம். இந்நிலையில் ஆதார் கார்டில் சில மாற்றங்களை நீங்களே செய்திடும் புதிய மாற்றத்தை ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொழி போன்றவைகளை மாற்ற உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு கட்டண தொகையாக ரூபாய் 50 செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை மாற்றலாம்.
ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை மாற்றும் வழிமுறைகள் :
முதலில் UIDAI இன் https://ssup.uidai.gov.in/ssup/ தளத்திற்குச் செல்ல வேண்டும்.
‘Proceed to update Aadhaar’ கிளிக் செய்து ஆதார் நம்பரை பதிவிட்டு captcha குறியீடை பதிவிட்டு ஒடிபி அனுப்ப வேண்டும்.
உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஒடிபி எண்ணை பதிவிட்டு ஆதாரில் மாற்ற வேண்டிய விவரத்தை தேர்ந்தெடுத்து . அதற்கு தேவையான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு விவரங்களை சரிபார்த்து Submit கொடுக்க வேண்டும். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு 1947 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment