ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - 2021-22ஆம் கல்வியாண்டில் கலாஉத்சவ் போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் செய்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக அனைத்து வகை பள்ளிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலைப் வகுப்பு பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் , வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காண்கலை ( Vocal music Instrumental music , Dance , Visual Arts ) எனும் நான்கு பெருந்தலைப்புகளில் கலாஉத்சவ் போட்டிகள் 2015-16ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது . பார்வை 1 - ன்படி இந்தக்கல்வியாண்டிலும் ( 2021-22 ) இப்போட்டிகளை இணைய வழியாக ( Online ) நடத்திட அனுமதிக்கப்பட்டு அதற்காக ரூ .12,00,000 நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இப்போட்டிகள் யாவும் கீழ்க்கண்ட 9 பிரிவுகளில் மாணவ மாணவியருக்கென தனித்தனியே நடைபெற உள்ளது.
1. வாய்ப்பாட்டு இசை - செவ்வியல் ( classic )
2. வாய்ப்பாட்டிசை - பாரம்பரிய நாட்டுப்புற வகை ( Traditional Folk )
3. கருவி இசை - செவ்வியல்
4. கருவி இசை - பாரம்பரிய நாட்டுப்புற வகை
5. நடனம் - செவ்வியல்
6. நடனம் பாரம்பரிய நாட்டுப்புற வகை
7. காண்கலை ( இருபரிமாணம் )
8. காண்கலை ( மூன்று பரிமாணம் )
9. உள்ளூர் தொன்மை பொம்மைகள் - விளையாட்டுகள்
பள்ளி , மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்டங்களின் வசதிக்கேற்ப Online / Recorded முறையிலோ அல்லது நேரடியாகவோ நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மாநில அளவிலான போட்டிகள் நேரிடையாக சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது . தேசிய அளவிலான போட்டிகளை பொறுத்த வரையில் முழுவதும் Online முறையில் நேரலையாகவே ( live ) நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் பள்ளி , மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்திட ஏதுவாக ( இணைப்பு -1 ன்படி ) ஒரு கல்வி மாவட்டத்திற்கு ரூ .5,000 வீதம் நிதி விடுவிக்கப்படுகிறது . இந்நிதியைக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள கலாஉத்சவ் 2021 வழிகாட்டுதல்கள்படி எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் சிறந்த நடுவர்களை தெரிவு செய்து போட்டிகளை நடத்தி மேற்குறிப்பிட்டபடி 08.11.2021 - ற்குள் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ / மாணவியர் பெயர் பட்டியலை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாநில திட்ட இயக்ககத்திற்கு வழங்கிட அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டவுடனே அதற்காக விடுவிக்கப்பட்ட தொகைக்கான பயனீட்டுச் சான்றிதழை ( UC ) உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கலாஉத்சவ் இந்த ஆண்டு பள்ளி , மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலாஉத்சவ் போட்டிகள் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டு NCERT- யின் அறிவுறுத்தல்படி தேசிய அளவிலான போட்டிகளுக்கான நுழைவு பதிவுகள் ( Entries ) 10.12.2021 க்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்டபடி தேசிய கலாஉத்சவ் போட்டிக்கான நுழைவுப் பதிவை குறித்த தேதிக்குள் சமர்ப்பிக்க ஏதுவாக கீழ்க்கண்ட தேதிகளில் பள்ளி , மாவட்ட , மாநில அளவில் கலாஉத்சவ் போட்டிகளை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் கீழ்கண்ட இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
SPD - Kalautsav Proceedings - Download here
0 Comments:
Post a Comment