> 12th History Lesson 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Text Book Questions and Answers ~ Kalvikavi - Educational Website - Question Paper

12th History Lesson 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Text Book Questions and Answers

12th History Lesson 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Text Book Questions and Answers

Tamilnadu State Board New Syllabus Samacheer Book 12th History Guide Pdf Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Text Book Back Questions and Answers, Notes

Lesson 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

அ) திலகர்

ஆ) கோகலே

இ) W.C. பானர்ஜி

ஈ) M.G. ரானடே

Answer:

ஆ) கோகல

2.தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்

அ) கேதா

ஆ) தண்டி

இ) சம்பரான்

ஈ) பர்தோலி

Answer:

இ) சம்பரான்


3.சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?

அ) சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை

ஆ) சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.

இ) அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை

ஈ) அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை.

Answer:

இ) அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை.


4.இந்தியாவின் மூவர்ணக்கொடி எப்போது ஏற்றப்பட்டது?

அ) டிசம்பர் 31, 1929

ஆ) மார்ச் 12, 1930

இ) ஜனவரி 26, 1930

ஈ) ஜனவரி 26, 1931

Answer:

அ) டிசம்பர் 31, 1929

5.1923இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?

அ) சுயராஜ்யக் கட்சி

ஆ) கதார் கட்சி

இ) சுதந்திராக் கட்சி

ஈ) கம்யூனிஸ்ட் கட்சி

Answer:

அ) சுயராஜ்யக் கட்சி


6.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. நாமசூத்ரா இயக்கம் – 1. வடமேற்கு இந்தியா

ஆ. ஆதிதர்ம இயக்கம் – 2 (தென்னிந்தியா

இ. சத்யசோதக் இயக்கம் – 3. கிழக்கிந்தியா

ஈ. திராவிட இயக்கம் – 4 மேற்கு இந்தியா

Answer:

அ) 3 1 4 2


7.ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.

  1. அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
  2. நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது.
  3. சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
  4. கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.

அ) 2 1 4 3

ஆ) 1,3,2,4

இ) 2,4,1,3

ஈ) 3,2,4,1

Answer:

அ) 2 1 4 3


8.பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை ?

அ) பஞ்சாப் துணை ஆளுநர் – 1. ரெஜினால்டு டையர்

ஆ) தலித் – பகுஜன் இயக்கம் – 2. டாக்டர். அம்பேத்கர்

இ) சுயமரியாதை இயக்கம் – 3. ஈ.வெ.ரா. பெரியார்

ஈ) சத்தியாகிரக சபை – 4. ரௌலட் சட்டம்

Answer:

ஈ) சத்தியாகிரக சபை – 4. ரௌலட் சட்டம்


9.பின்வரும் நிகழ்வுகளைச் சரியான காலவரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

i) கேதா சத்தியாகிரகம்

ii) சம்பரான் இயக்கம்

iii) பிராமணரல்லாதார் இயக்கம்

iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்

அ) ii, iii, i, iv

ஆ) iii, ii, i, iv

இ) ii, i, iv, iii

ஈ) ii, i, iii, iv

Answer:

ஈ) ii, i, iii, iv


10.பின்வருவனவற்றுள் எது, எவை சரியானவை அல்ல.

i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.

ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.

iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.

iv) இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.

அ) iமட்டும்

ஆ) 1 மற்றும் iv|

இ) ii மற்றும் iii

ஈ) iii மட்டும்

Answer:

ஈ) iii மட்டும்

11.ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை.

அ) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல்

ஆ) அரசு வழங்கிய பட்டங்களைத் திருப்பியளித்தல்

இ) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல்

ஈ) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்

அ) அ மற்றும் ஆ

ஆ) ஆ மற்றும் இ

இ) அ மற்றும் ஈ ‘

ஈ) இ மற்றும் ஈ

Answer:

அ) அ மற்றும் ஆ


12.கூற்று : பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.

காரணம் : அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

அ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்று சரி. காரணம் கூற்றை வளக்கவில்லை

இ) கூற்று சரி, காரணம் தவறு.

ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

Answer:

இ) கூ சரி, காரணம் தவறு.

13.கூற்று : 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

காரணம் : இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

இ) கூற்று சரி, காரணம் தவறு.

ஈ) கூற்று தவறு. காரணம் சரி.

Answer:

இ) கூற்று சரி, காரணம் தவறு

14.கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?

அ) ராஜாஜி

ஆ) சித்தரஞ்சன் தாஸ்

இ) மோதிலால் நேரு

ஈ) சத்யமூர்த்தி

Answer:

அ) ராஜாஜி


15.காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு

அ) ஏப்ரல் 6, 1930

ஆ) மார்ச் 6, 1930

இ ) ஏப்ரல் 4, 1939

ஈ) மார்ச் 4, 1930

Answer:

அ) ஏப்ரல் 6, 1930

II. சுருக்கமான விடையளிக்கவும்


1.இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?

Answer:

  • இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921இல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
  • இந்திய மக்களின் விசுவாச உணர்வை வேல்ஸ் இளவரசரின் பயணம் தூண்டும் என்று எதிர்பார்த்த காலனி ஆதிக்க அரசின் கணக்கு தவறாகப் போனது.

2.காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?

Answer:

  • ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார்.


3.இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?

Answer:

  • பல்வேறு சாதி, பிரதேசங்கள், மதங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த இந்தியர்களுக்கு நலப்பணிகளில் பயிற்சி வழங்க “இந்திய பணியாளர் சங்கத்தை” 1905ல் கோபால கிருஷ்ண கோகலே நிறுவினார்.
  • நிவாரணப்பணி, கல்வி அறிவூட்டல் மற்றும் இதர சமூகக் கடமைகளில் உறுப்பினர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

4.பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா குறித்து எழுதுக. (மார்ச் 2020)

Answer:

பகிஷ்கிரித் ஹிதகர்னி :

  • டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. நம்
  • இது தனித்துவிடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பாகும்.
  • இதன் மூலம் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் மீது விதிக்கப்பட்ட திறன் ஆ குறைபாடுகளைக் களைவதற்காக அயராது பாடுபட்டார்.

5.தேசியவாதிகளால் ரௌலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?

Answer:

  • மத்திய சட்டப் பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் மசோதாவை எதிர்த்த நிலையில் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
  • இச்சட்டம் “எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது”.
  • இதனை காந்தியடிகளும் மற்ற தேசியவாதிகள் அனைவரும் எதிர்த்தனர்.

6.பி.ஆர். அம்பேத்கரால் வழி நடத்தப்பட்ட மஹத் சத்தியாகிரகம் பற்றி அறிவது என்ன?

Answer:

மஹத் சத்தியாக்கிரகம்:

  • ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தர வேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத் தர மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

7.காந்தி – இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது எது?

Answer:

  • 1931 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காந்தி விடுதலை செய்யப்பட்டவுடன் ஆங்கில அரசப் பிரதிநிதி இர்வின், காந்திஜியை அழைத்துப் பேசினார். இதன் விளைவாக காந்தி – இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. சத்தியாகிரகம் கைவிடப்பட்டது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு இசைந்தது.

III. குறுகிய விடையளிக்கவும்

1.ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.

Answer:

  • 1919 ஏப்ரல் 13-இல். அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன.
  • சத்தியபால், சாய்புதீன் கிச்லு ஆகியோரைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டக்களத்தில் குழுமியிருந்தனர்.
  • பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல் ஓ டையரும், ராணுவக் கமாண்டராக ஜெனரல் ரெஜினால்டு டையரும் பதவி வகித்தனர்.
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்திற்கு ஒரே ஒரு குறுகிய வாயில் மட்டுமே இருந்தது. அங்கு சிக்கிக் கொண்ட மக்களைக் குறி வைத்து எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுடுமாறு ஜெனரல் டையர் உத்தரவிட்டார்.
  • அரசு தகவல்களின்படி உயிரிழப்புகள் 379 என்ற எண்ணிக்கையில் இருந்த போதிலும் உண்மையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும்.
  • ராணுவச் சட்டம் பஞ்சாப் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரங்களை சந்தித்தனர்.

2.மாகாணங்களில் இரட்டையாட்சி முறை பற்றி எழுதுக.

Answer:

  • 1919 ஆம் ஆண்டு மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம் அரசின் ஒவ்வொரு துறையிலும் அதிக இந்தியர்களைச் சேர்த்தது.
  • படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கும் நோக்கத்துடன் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியது.
  • மாநில அதிகாரங்கள் மாற்றப்பட்ட துறைகள், ஒதுக்கப்பட்ட துறைகள் எனப் பிரிக்கப்பட்டன.

3.பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது? (மார்ச் 2020 )

Answer:

  • 1932 செப்டம்பரில் தாழ்த்தப்பட்ட இனத் தலைவரான டாக்டர் அம்பேத்காரும், காந்திஜியும் பூனாவில் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். இதுவே பூனா ஒப்பந்தம் எனப்படுகிறது.
  • இதன்படி இந்துக்கள் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிட ஒப்புக் கொண்டனர். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.

4.பிராமணரல்லாதார் இயக்க தலைவர்கள் காலனி அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்ககால தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை கையாண்டனர். விவரி.

Answer:

  • இந்தியாவின் கீழ்த்தட்டு மக்கள் விழிப்புணர்வு பெற்ற தேசியவாதிகளால் கூறிய தாராளமய ஜனநாயக கருத்துக்களை அறிந்து கொள்ள முடியவில்லை.
  • சுயமரியாதை இயக்கம், சமூகநீதி சார்ந்து அடிப்படை மாற்றம் கோரும் இயக்கங்கள், பகுஜன் இயக்கம் செயல்பட்டன.
  • இதனை தீவிர தன்மையுடன் அடிப்படை மாற்றம் விழைவோர் இந்த இயக்கங்களை எதிர்த்தனர்.
  • பிரிட்டிஷார், தேசவிரோத சக்திகள் போன்றவற்றிற்கு கைத்தடிகள் என்று இந்த இயக்கங்களைச் சிலர் குறிப்பிட்டனர்.
  • காலனி அரசுக்கு எதிராகப் பூர்வாங்க தேசியவாதத் தலைவர்கள் எந்த மாதிரியான உத்தியைப் பயன்படுத்தினார்களோ அதே மாதிரியான உத்தியைப் பிராமணர் அல்லாத இயக்கத்தின் பூர்வாங்கத் தலைவர்களும் பின்பற்றத் தொடங்கினர்.

5.மாற்றத்தை விரும்புவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் – வேறுபடுத்துக.

Answer:

மாற்றத்தை விரும்புபவர்கள் :

  • சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் தீவிர அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்றும், தேர்தல் அரசியலில் ஈடுபடுவது என்றும் விரும்பினார்கள்.
  • சீர்த்திருத்தம் பெற்ற சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர்.
  • இக்குழு சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் என அழைக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தியும் இணைந்தார்.

மாற்றத்தை விரும்பாதவர்கள் :

  • சட்டப்பேரவை நுழைவை எதிர்த்த மற்றொரு குழு காந்திய வழியை பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
  • இந்த குழுவுக்கு இராஜகோபாலாச்சாரி, வல்லபாய் படேல், இராசேந்திர பிரசாத் ஆகியோர் தலைமை ஏற்றனர். எந்த மாற்றா கா என்று இந்த அணி வலியுறுத்தியது.

6.பிரதம அமைச்சர் ராம்சே மக்டோனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.

Answer:

  • இரண்டாம் வட்டமேசை மாநாட்டின் போது காந்தியடிகள் மற்றும் அம்பேத்கார் இடையே தனித் தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சுக்கள் தோல்வி அடைந்தன.
  • பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு இதில் தலையிட்டு முடிவெடுக்க, 1932 ஆகஸ்டில் வகுப்பு வாரித் 1 தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அம்பேத்காரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

7.மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப்பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?

Answer:

  • வட்டமேசை மாநாடுகளுக்குப் பிற பல போராட்டங்கள் நடைபெற்றன. 1940 காங்கிரஸ் தனிநபர் அறப்போரை அறிவித்தது.
  • 1942ல் இந்திய ராணுவ வீரர்களின் ஆதரவை பெரும்பொருட்டு கிரிப்ஸ் தூதுக்குழு ஒன்று வந்தன.
  • கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையில் டொமினியன் அந்தஸ்து மற்றும் பாகிஸ்தான் பற்றிய செய்தி இடம் பெறாததால் காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையை ஏற்கவில்லை.
  • 1942 காங்கிரஸ் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் துவங்கியது.
  • காந்தியினுடைய கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக “வெள்ளையனே வெளியேறு” ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
  • காந்திஜியும் பிறதலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் சட்ட விரோதமான இயக்கம் என்று தடை செய்யப்பட்டது.

IV. விரிவான விடையளிக்கவும்


1.ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி. (மார்ச் 2020)

Answer:

  1. கிலாபத் மாநாட்டில், காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்டு 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
  2. 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
  4. பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், சட்டப்பேரவைகள், அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், அரசு வழங்கிய பட்டங்களையும் விருதுகளையும் திரும்ப ஒப்படைப்பது ஆகியன ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்க்கப்பட்டன.
  5. தேசியப்பள்ளிகள், பஞ்சாயத்துகள் ஆகியன அமைக்கப்பட்டு சுதேசிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.
  6. வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற பல இயக்கங்களை இந்தப் போராட்டத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
  7. மொழி சார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு ஒரு முக்கியத் தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
  8. இதனால் பெரும் எண்ணிக்கையிலானப் பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.

2.ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்டமறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?

Answer:

ஒத்துழையாமை இயக்கம்:

  • 1920 ஆம் ஆண்டு சாத்வீக முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி தொடங்கினார். இதன்படி மக்கள் பதவிகளை துறக்க வேண்டும்.
  • வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிகளை தவிர்க்க வேண்டும்.
  • பட்டதாரிகள் பட்டங்களை துறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

ஒத்துழையாமை இயக்கத்தின் செயலாக்கம்:

  • அயல் நாட்டு துணிகள் எரிக்கப்பட்டன.
  • நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டன.
  • ஆங்கில அரசால் வழங்கப்பட்ட பட்டங்களையும் கௌரவப் விருதுகளையும் மக்கள் தூக்கி எறிந்தனர்.

சட்டமறுப்பு இயக்கம் :

  • ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து இது மாறுபட்டதாக இருந்தது.
  • சட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க ஆங்கிலேய ஆட்சியாளர் முடிவு செய்தனர்.
  • இதனை எதிர்த்து சட்டமறுப்பு போராட்டத்தை காந்திஜி தொடங்கினார். எ.கா. உப்பு வரி, இயற்கையாக கிடைக்கும் கடல் நீரை காய்ச்சி எடுக்கும் உப்பு உற்பத்தியில் ஆங்கிலேய அரசின் ஏகபோக உரிமை மற்றும் உப்பின் மீது விதித்த வரி ஆகியவற்றை காந்தி எதிர்த்தார்.
  • அரசின் கொள்கைகளை எதிர்க்க சட்டமறுப்பியக்கம் மேற்கொள்ளப்பட்டது.
  • இதன்படி 1930, ஏப்ரல் மாதத்தில் காந்திஜி தலைமையில் தண்டியாத்திரையும் தமிழ்நாட்டில் ராஜாஜியின் தலைமையில் வேதாரண்யம் யாத்திரையும் அடைந்து ஆங்கிலேய உப்பு வரி சட்டத்தை மீறினர்.

3.இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.

Answer:

காந்தியின் பங்கு :

  • இந்திய விடுதலைப் போரில் மூன்றாவது கட்டம் பொருத்தமாகக் காந்தி ஊழி அல்லது சகாபதம் என அழைக்கப்படுகிறது.

மக்கள் இயக்கமாக மாற்றுதல் :

  • மகாத்மா காந்தி தேசிய இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்.
  • அவர் எளிய மனிதர். அவருடைய செயலாற்றும் முறை நடைமுறை வாழ்க்கையில் மற்ற மக்களைத் தன்னைப் பின்பற்றும்படிச் செய்தார்.

இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கும் பாடுபடுதல் :

  • இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட அவர் கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார்.
  • இவை இரண்டையுைம் நம் நாட்டுக்கே உரித்தாக்கினார்.
  • காந்திஜி தன்னுடைய குறிக்கோள்கள் வெற்றியடையப் பட்டினி அறப்போரைக் கடைப்பிடித்த வரியா வெற்றிகளை அடைந்தார்.

அறப்போர் மூலம் வெற்றி:

  • மக்கள் பயன்படுத்தும் மிகச் சாதாரணமான பொருளாகிய உப்புக் கூட அவருக்கு வலியைப் அரசியல் ஆயுதமாயிற்று.
  • அவருடைய உப்பு அறப்போரின் மூலம் அவர் உலகத்திற்கு ஓர் உண்மையை நிரூபித்தார்.

மக்களின் உண்மையான பிரதிநிதி:


  • காந்தி – இர்வின் ஒப்பந்தம் இந்திய வரலாற்றில் இந்திய தேசிய இயக்கத்தில் மற்ற ஆகும் இந்தியப் பாமர மக்களின் உண்மையான பிரதிநிதி என்று அவர் கருதப்பட்டார்.
  • சர்ச்சில் அவரை அரை ஆடை அணிந்த பக்கிரி’ என்று செய்த கேலி எடுபடவில்லை.

சமுதாயச் சீர்திருத்தம் :

  • உலகின் எந்த வல்லமைச் சக்தியும் எவ்வளவு முறை சிறையில் வைத்தும் அவருடைய தீர்க்கமான முடிவுகளை அசைக்க முடியவில்லை. அவர் இந்தியப் பெண்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார். தீண்டாமையை ஒழிக்க அரும்பாடுப்பட்டார்.

4.டாக்டர். அம்பேத்கரின் கல்விப் பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.

Answer:

ஆரம்ப கல்வி :

  • எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912-இல் பட்டதாரி ஆனார்.
  • பரோடா அரசரின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்ட மேற்படிப்புப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
  • சட்டம் மற்றும் பொருளாதார படிப்புக்களுக்காக அவர் லண்டன் சென்றார்.
  • 1916இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு  இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்.
  • இந்திய வாக்காளர்களுக்கு வாக்குரிமை பெற வயது மற்றும் தகுதி பற்றி தகவல் சேகரித்து வந்த சவுத்பொரோ குழுவுடன் கலந்துரையாட வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது.’
  • தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
  • இடஒதுக்கீடு பெறப்பட்ட இடங்களில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தால் அவர்கள் தங்களின் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.
  • வாய் பேச முடியாதவர்களின் தலைவர் (மூக் நாயக்) என்ற பத்திரிக்கை தனது கருத்துகளை வெளிப்படுத்துவதற்காகவும், தனித்துவிடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பு (பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை) என்ற அமைப்பைத் தனது செயல்பாடுகளுக்காகவும் அவர் தொடங்கினார்.
  • ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர “மஹத் சத்தியாகிரகம்” என்ற அமைப்பைத் தொடங்கினார். அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1.காந்தியடிகளின் சகாப்தம் குறித்த நிகழ்வுகளின் காலக்கோடு ஒன்றை உருவாக்கவும்.

Answer:




Share:

0 Comments:

Post a Comment

Popular Posts