> தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய கோரிக்கை மனு ~ Kalvikavi - Educational Website - Question Paper

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய கோரிக்கை மனு

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய கோரிக்கை மனு..

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கும் நகைக்கடைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

நகைக்கடன்:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அதன்படி நகை கடன் தள்ளுபடிகாக அரசு கடன் வாங்கியவர்கள் விவரங்களை கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் வழங்கியதில் பல மோசடிகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை ஆய்வு செய்ய அரசு சார்பில் மாவட்டம் தோறும் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு மாவட்டம் தோறும் ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டது.

இதில் தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றதில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார். தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 35 கிலோ அரிசி வாங்கும் ஏழை மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என தற்போது கூட்டுறவு சங்க அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 35 கிலோ அரிசி வாங்கும் அனைத்து நபர்களுக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்து நகைக் கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய கூட்டுறவு வங்கி செயலாளரிடம் மனு அளித்துள்ளனர்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts