> 7th Tamil Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

7th Tamil Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

7th Tamil Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ….

அ) காது

ஆ) தந்தம்

இ) கண்

ஈ) கால்கள்

Answer:

ஆ) தந்தம்

2.தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் ………..

அ) வேடந்தாங்கல்

ஆ) கோடியக்கரை

இ) முண்டந்துறை

ஈ) கூந்தன்குளம்

Answer:

இ) முண்டந்துறை

3.‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….

அ) காடு + ஆறு

ஆ) காட்டு + ஆறு

இ) காட் + ஆறு

ஈ) காட் + டாறு

Answer:

அ) காடு + ஆறு

4.‘அனைத்துண்ணி ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ……………..

அ) அனைத்து + துண்ணி

ஆ) அனை + உண்ணி

இ) அனைத் + துண்ணி

ஈ) அனைத்து + உண்ணி

Answer:

ஈ) அனைத்து + உண்ணி

5.‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….

அ) நேரமாகி

ஆ) நேராகி

இ) நேரம் ஆகி

ஈ) நேர் ஆகி

Answer:

அ) நேரமாகி

6.‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) வேட்டை ஆடிய

ஆ) வேட்டையாடிய

இ) வேட்டாடிய

ஈ) வேடாடிய

Answer:

ஆ) வேட்டையாடிய

கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.

‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ – என்று அழைக்கப்படும் விலங்கு

Answer:

புலி

Question 2.

யானைக் கூட்டத்திற்கு ஒரு ……….. யானைதான் தலைமை தாங்கும்.

Answer:

பெண்

Question 3.

கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ………

Answer:

அடர்ந்த முடிகள்

குறுவினா

1.காடு – வரையறு.

Answer:

  • வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என் அனைத்தும் நிரம்பியது காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகும்.

2.யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?

Answer:

பொதுவாக யானைகள் மனிதர்களைத் தாக்குவது இல்லை.

யானையின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன.

3.கரடி ‘அனைத்துண்ணி ‘ என அழைக்கப்படுவது ஏன்?

Answer:

கரடி பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் போன்ற வற்றை உணவாக உள்கொள்வதால் அனைத்துண்ணி என அழைக்கப்படுகின்றன.

4.மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.

Answer:

  • இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் என்பவை மானின் வகைகள் ஆகும்.

சிறுவினா

Question 1.

புலிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.

Answer:

  • புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையவை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி
  • மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.
  • கர்ப்பம் அடைந்த புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும் (அல்லது) ஈன்றெடுக்கும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து ஆளாக்கும்.
  • அப்புலிக்குட்டிகள் வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும். புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.
  • புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும்
  • வேட்டையாடுவதில்லை. எனவே இதனைப் பண்புள்ள விலங்கு என்று கூறுவர்.

சிந்தனை வினா

Question 1.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிடுக.

Answer:

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் :

(i) மரங்களை அழிப்பதால் கார்பன்-டை- ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பல உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.

(ii) காடுகளை அழிப்பதன் விளைவாக மழை அளவு குறைகிறது. தட்ப வெப்பநிலை

மாற்றமடைகிறது. மண் அரிமானம் ஏற்படுகிறது.

(iii) புவி வெப்பமடைதல் நடைபெறுகிறது. இதன் விளைவாக தீயன உண்டாகின்றன.

மழைக் காலங்கள் மாறுபடுகின்றன. இயற்கைத் தாவரங்கள், மரங்கள் சட்டத்திற்குப் புறம்பாக அழிக்கப்படுகின்றன.

(iv) காடுகளை அழிப்பதால் காட்டில் வாழும் காட்டு விலங்கினங்கள் நாட்டுக்குள் புகுந்து பயிர்களை அழிக்கின்றன. மேலும் மனித உயிர்களை அச்சுறுத்திக் கொல்லுகின்றன. யானை, காட்டெருமை, புலி போன்ற விலங்குகள் கூட்டமாக உணவிற்காகவும் நீருக்காகவும் விளை நிலங்களுக்குள் வந்து அவற்றை அழிக்கின்றன.

(v) காடுகளை அழிப்பதாலும் மற்ற வெவ்வேறு காரணங்களாலும் பல்வேறு தாவர

இனங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவுக்குத் தள்ளப்படுகின்றன.

Share:

0 Comments:

Post a Comment