7th Tamil Term 1 Chapter 2.4 இந்திய வனமகன்
மதிப்பீடு
1.ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?
Answer:
இயற்கையாக உருவாவது காடு. ஆனால் தனிமனித முயற்சியால் உருவான காட்டைப் பற்றி இங்கு காண்போம்.
பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மணல் தீவில் அமைந்த இந்தக் காடு சற்று வேறுபட்டது. மணல் தீவுகளில் மூங்கில் மட்டுமே வளர வாய்ப்புண்டு. ஆனால் பல்வகை மரங்கள் நிறைந்த இந்தக் காட்டை ஒரு தனி மனிதர் உருவாக்கியுள்ளார்.
ஓர் அடர்ந்த காடு. காட்டின் நடுவில் மூங்கிலினால் அமைந்த வீடு, வீட்டினுள் சிலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். யானைகள் பிளிறும் ஓசை கேட்கிறது. வீட்டின் குடும்பத் தலைவர் தம் குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். யானைகள் மூங்கிலால் கட்டப்பட்ட அவருடைய வீட்டை அடித்து நொறுக்குகின்றன. இச்செயலைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் குடும்பத் தலைவர்.
அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர் விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங் முப்பது ஆண்டுகள் இந்த மிகப் பெரிய தீவில் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கியவர். அந்தக் காட்டிலேயே தன் வாழ்வைக் கழித்துக் கொண்டிருப்பவர். யானைகளின் வருகையை தமது உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகக் கருதுகிறார். ஆண்டு தோறும் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
1979 ஆம் ஆண்டு அது போன்று ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள், மரங்கள் இல்லாத இத்தீவில் கரை ஒதுங்கின. அவற்றுள் சில இறந்து கிடந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அந்தக் காட்சி அவரை மிகவும் பாதித்ததால், ஊருக்குள் சென்று பெரியவர்களிடம் அதைப்பற்றி பேசினார். அவர்கள், ‘தீவில் மரங்கள் இல்லாததால் தான் பாம்புகள் மடிந்தன என்று கூறினார்கள். மரங்கள் இல்லாவிட்டால் மனிதனும் இப்படித்தான் ஒருநாள் இறந்து போவன் என்று நினைத்தார். உடனே இந்தத் தீவு முழுவதும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். இவர் முடிவைக் கண்டு ஊர் மக்கள் கேலி செய்தனர்.
தன் கைகளில் கிடைத்த விதைகளை எடுத்துக் கொண்டு இந்தத் தீவிற்கு வந்தார். அங்கு அவற்றை விதைத்து நாள் தோறும் தண்ணீர் ஊற்றி வந்தார். இருப்பினும் ஒரு விதைக் கூட முளைக்கவில்லை. வனத்துறையினரை அணுகி ஆலோசனை கேட்டதன் பெயரில் மூங்கில் மட்டும் நட்டு வளர்த்து வந்தார்.
அரசு சமூகக் காடுகள் வளர்ப்பு திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியது. அதில் தன்னை இணைத்துக் கொண்டார். தீவு முழுவதும் பல்வேறு மரங்களை நடத்தொடங்கினார். அந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் முடிந்து விட்டது. அனைத்து மரக்கன்றுகளையும் பாதுகாத்து வந்தார். மூங்கில் தவிர வேறு எந்த மரமும் வளரவில்லை அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவரிடம் மரம் வளர்க்கும் திட்டம் பற்றிக் கூறினார். மண்ணின் தன்மையை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும். அதற்கு மண்புழுக்கள் மட்டும் இன்றிச் சிவப்புக் கட்டெறும்புகளும் உதவும் என்று பேராசிரியர் கூறினார்.
மண்ணின் தன்மையை மாற்ற நாள்தோறும் நூற்றுக்கணக்கான எறும்புகளை கொண்டு வந்து விட்டார். மண்ணின் தன்மை மாறத் தொடங்கியது. பசும் புற்கள் முளைக்கத் தொடங்கின. நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன.
கால்நடைகள் வளர்த்தார். அவற்றின் சாணத்தை வீணாக்காமல் இயற்கை உரம் தயாரித்தார். பழத்தின் கொட்டைகளை விதையாகச் சேகரித்தார். அந்த விதைகள்தான் இன்று மரங்களாக காட்சியளிக்கின்றன. என்றார்.
ஆற்றோரம் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை. தாலைவில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதுதான் தனக்குச் சிக்கலாக இருந்ததாகக் கூறினார். அதற்கும் ஒரு வழிக் கண்டுபிடித்து சொட்டு நீர்ப்பாசனம் முறையைப் பின்பற்றினார். இப்படித்தான் மற்ற செடிகளை வளர்த்தார்.
நட்ட செடிகள் முழுவதும் மரங்களாக வளர்ந்தன. அவற்றில் பறவைகள் வந்து தங்கின. பறவைகளின் எச்சத்தால் பரவிய விதைகள் இந்தக்காடு வளர மேலும் துணைபுரிந்தன.
முயல், மான், காட்டு மாடுகள் வரத்துவங்கின. யானைகளும் வரத்துவங்கின பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள் போன்ற காட்டு விலங்குக்கள் வரத் தொடங்கின. ‘காட்டின் வளம்’ என்று குறிக்கப்படும் புலிகளும் வந்து தங்கத் தொடங்கின.
புலிகள் வந்த பிறகுதான் இக்காட்டின் உணவுச் சங்கிலி நிறைவடைந்தது. தன் செயலைக்கண்டு வனக்காவலர்கள் வியந்தனர். இந்தக் காட்டைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் செய்தியாக வெளிவந்தது என்று தன் அனுபவங்களை சொல்லி முடித்தார் ஜாதவ்பயேங்.
கற்பவை கற்றபின்
1.உங்கள் பள்ளியில் அல்லது நீங்கள் வாழும் பகுதியில் மரக்கன்று ஒன்றை நடுங்கள். அதனை நாள்தோறும் பாதுகாத்து வாருங்கள். அதன் விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்யுங்கள்.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
Question 1.
‘இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் ……….
Answer:
ஜாதவ்பயேங்
0 Comments:
إرسال تعليق