7th Tamil Term 1 Chapter 3.2 பாஞ்சை வளம்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.ஊர்வலத்தின் முன்னால்……………….. அசைந்து வந்தது.
அ) தோரணம்
ஆ) வானரம்
இ) வாரணம்
ஈ) சந்தனம்
Answer:
இ) வாரணம்
2.பாஞ்சாலங்குறிச்சியில் ……………. நாயை விரட்டிடும்.
அ) முயல்
ஆ) நரி
இ) பரி
ஈ) புலி
Answer:
அ) முயல்
Question 3.
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ………………
அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
ஈ) மாடி வீடு
Answer:
ஈ) மாடி வீடு
4.‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …
அ) பூட்டு + கதவுகள்
ஆ) பூட்டும் + கதவுகள்
இ) பூட்டின் + கதவுகள்
ஈ) பூட்டிய + கதவுகள்
Answer:
ஆ) பூட்டிய + கதவுகள்
Question 5.
‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) தோரணம் + மேடை
ஆ) தோரண + மேடை
இ) தோரணம் + ஓடை
ஈ) தோரணம் + ஓடை
Answer:
அ) தோரணம் + மேடை
6.வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………
அ) வாசல் அலங்காரம்
ஆ) வாசலங்காரம்
இ) வாசலலங்காரம்
ஈ) வாசலிங்காரம்
Answer:
இ) வாசலலங்காரம்
பொருத்துக
1. பொக்கிஷம் – அழக
2. சாஸ்தி – செல்வம்
3. விஸ்தாரம் – மிகுதி
4. சிங்காரம் – பெரும் பரப்பு
Answer:
1. பொக்கிஷம் – செல்வம்
2. சாஸ்தி – மிகுதி
3. விஸ்தாரம் – பெரும பரப்பு
4. சிங்காரம் – அழகு
குறுவினா
1.பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டைகள் பற்றிக் கூறுக.
Answer:
- பாஞ்சாலங்குறிச்சி நகரில், பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை எல்லாம் மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.
2.பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
Answer:
பூஞ்சோலைகளும் சந்தன மரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும் இயற்கை வளங்களாகும். சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.
சிறுவினா
1.பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
Answer:
- பாஞ்சாலங்குறிச்சியிலுள்ள வீடுகள் தோறும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
- வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்.
- வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும்.
2.பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.
Answer:
- வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டி விடும். பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால் போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
சிந்தனை வினா
1.நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் என்ன?
Answer:
- (i) நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் என்பது வாய்மொழி இலக்கியம் என்று கூறுவர்.
- கட்டபொம்மன் வீரம் பற்றி உலகமே அறியும். நம் நாட்டிலுள்ள அரசர்கள், குறுநில மன்னர்கள் எல்லோரும் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குப் பயந்து வரி
- செலுத்தினார்கள்.
- (ii) ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட மன்னர்கள் சிலருள் கட்டபொம்மனும்
- ஒருவர். அவர் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தாமல் வரி கேட்க வந்தவர்களுடன் விவாதம் செய்து எதிர்த்து நின்றார்.
- (iii) இந்த வீரம்தான் உலகளாவிய தமிழர்கள் கட்டபொம்மனை பெரிதும் மதிக்கக்
- காரணமாகியது. கட்டபொம்மனை புகழ்ந்துப் பாடிய பாடல்தான் கட்டபொம்மன் கதைப் பாடல், ஆங்கிலேயர்களுக்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்த அரசன் என்பதால் அனைவரும் அவரைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.
- (iv) தமிழர்களின் வீரத்தை உலகறிய செய்யும் வகையில் பாடப்பட்டு உள்ளதால்
- கட்டபொம்மன் கதைப் பாடல் பெரிதும் புகழப்படுகிறது
கற்பவை கற்றபின்
1.உங்கள் வீட்டில் உள்ள பெரியோரிடம் நாட்டுப்புறக்கதைப் பாடல்களைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
நாட்டுப்புறக் கதைப் பாடல் :
பாடல் 1:
காட்டுப் பாதையில் ஓரன்பர்
கால்கள் கடுக்க நடந்திட்டார்
மேட்டுப் பகுதியில் ஓரிடத்தில்
மிகவள மாகவே பூசணியின்
கொடியில் பெரும்பெரும் காய்கள் பல
குண்டாய் அழகாய் இருந்தனவாம்
விடிந்தது முதலே நடந்ததனால்
வியர்த்தே அலுத்துப் போனராம்!
ஆல மரத்தின் நிழலினிலே
அயர்ந்தே படுத்துக் கொண்டாராம்
மேலே பார்த்தார் மரத்தினிலே
மெல்லிய சிறுசிறு பழங்களினை
எம்மாம் பெரிய ஆலமரம்
இதிலே சின்னஞ் சிறுபழங்கள்
அம்மாடி பூசணிக் கொடியினிலே
அடடா அளவில் பெரும்பழங்கள்
என்னே இயற்கையின் வஞ்சனைதான்
ஏனோ இந்த மாற்றங்கள்
எண்ணிய படியே தூங்கிவிட்டார்
இயல்பாய் குறட்டையும் விட்டாராம்!
பட்டென எதுவோ மூக்கின் மேல்
பட்டதும் திடுக்கிட் டெழுந்தாராம்!
பட்டது ஆலம் பழமென்று
பார்த்துப் புரிந்தே கொண்டாராம்!
அடடா ! இயற்கையின் அற்புதத்தை
அறியா மல்தான் நினைத்திட்டேன்
உச்சியி லிருந்தே பூசணிதான்
மூக்கில் விழுந்தால் என்னாகும்?
எது? எது? எப்படி எங்கேதான்
இருந்திட இயற்கை வகுத்த நெறி
அதுவே சரியென உணர்ந்தாராம்
எழுந்தே இயற்கையைத் தொழுதாராம்!
பாடல் 2:
பாட்டியின் வீட்டுப் பழம்பானை – அந்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும் – அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா !
உள்ளே புகுந்துநெல் தின்றுதின்று – வயிறு
ஊதிப் புடைத்துப் பருத்ததடா !
மெல்ல வெளியில் வருவதற்கும் – ஓட்டை
மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா!
பானையைக் காலை திறந்தவுடன் – அந்தப்
பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா ! ஓடிப்
போய் அதைக் கவ்வியே சென்றதடா !
கள்ளவழியில் செல்பவரை – எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ளபடியே நடப்பவர்க்குத் – தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!
சொல்லும் பொருளும் :
1. சூரன் – வீரன்
2. வாரணம் – யானை
3. பொக்கிஷம் – செல்வம்
4. பரி – குதிரை
5. சாஸ்தி – மிகுதி
6. சிங்காரம்- அழகு
7. கமுகு – பாக்கு
0 Comments:
إرسال تعليق