7th Tamil Term 1 Unit 1.2 ஒன்றல்ல இரண்டல்ல
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்………
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி
Answer:
இ) பரணி
2.வானில் ………………. கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்
Answer:
ஆ) முகில்
3.‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
Answer:
ஈ) இரண்டு + அல்ல
4.‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
Answer:
அ) தந்து + உதவும்
5.ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………..
அ) ஒப்புமை இல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்பு இல்லாத
Answer:
இ) ஒப்புமையில்லாத
குறுவினா
1.தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
- இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும் எனக் கவிஞர் கூறுகிறார்.
2.‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
Answer:
- முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள் போல் புகழ்பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு பலவாகும்.
சிறுவினா
1.தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
- பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். இசைப்பாடலான பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, வான்புகழ் கொண்ட திருக்குறள். அகம், புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும்.
சிந்தனை வினா
1.தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
Answer:
- “அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே” என்பது தண்டியலங்கார நூற்பா கூறுகிறது. மனிதன் வாழ்க்கையில் அடைய வேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் என்பது இதன் கருத்து. தமிழ்ச் சிந்தனைக்கும் இந்தியப் பொதுச் சிந்தனைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. இந்தியப் பொதுச் சிந்தனை மரபின்படி அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கும் அடைய வேண்டியவை. தமிழ்ச் சிந்தனை மரபில் தொல்காப்பியர் காலந்தொட்டே அறம், பொருள், இன்பம் என்ற கருத்து மட்டுமே உண்டு. வீடு பற்றிய கருத்து கிடையாது.
- இந்திய மொழிகள் எல்லாவற்றையும் விட, தமிழில் தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. நம் தமிழில் சிறந்த அற இலக்கியமாக திகழ்வது திருக்குறள். நம்முடைய மானுடர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும்போது அவற்றை திருத்திக் கொள்ள அறக்கருத்துகளையும் நீதிக் கருத்துகளையும் போதிக்கும் தேவை ஏற்படுகிறது. அதனால் தோன்றிய இலக்கியம்தான் அற இலக்கியமாகும்
கற்பவை கற்றபின்
1.தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
Answer:
- அதியமான் நெடுமான் அஞ்சி (அதியமான்), வேள் ஆய் ஆண்டிரன் (ஆய்), வல்வில் ஓரி ஓரி), மலையமான் திருமுடிக்காரி(காரி, கண்டீரக் கோப்பெருநள்ளி நள்ளி), பாரி, வையாவிக் கோப்பெரும் பேகன் (பேகன்)
(i) அதியமான் : தகடூரை ஆண்ட சங்ககால மன்னர்களுள் ஒருவன். அதியர் என்போர் சங்ககாலக் குடிமக்கள். இவர்களின் தலைமகனாக விளங்கியவர்களை அதியர் கோமகன் என்றனர். கோமான் என்பது “கோமகன்” என்பதன் மரூஉ. அதியமான் என்பது அதியர் கோமான்’ என்பதன் மரூஉ. அஞ்சி என்பது இவரது இயற்பெயர். இவருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. தலைநீர் என்பது ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் ஆகும். ஒளவையாரின் நெருங்கிய நண்பர் ஆவார்.
(ii) ஆய் : பொதிகை மலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ஆயர்குல மன்னன் ஆவான்.
(iii) ஓரி : கடையெழுவள்ளல்களுள் ஒருவரான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பட்டார்.
2.தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
(i) இதிகாசம்
(ii) உரைநடை
(iii) உவமை
(iv) கட்டுரை
(v) கலந்துரையாடல்
(vi) கலை
(vii) கவிதை
(viii) காப்பியம்
(ix) சிறுகதை
(x) தொடர்கதை
(xi) சொலவடை
(xii) நாடகம்
(xiii) பழமொழி
(xiv) பாட்டு
(xv) புனிதம்
(xvi) விடுகதை
சொல்லும் பொருளும் :
1. ஒப்புமை – இணை
2. முகில் – மேகம்
3. அற்புதம் – விந்தை
4. உபகாரி – வள்ளல்
0 Comments:
Post a Comment