> 7th Tamil Term 2 Chapter 3.3 பேசும் ஓவியங்கள் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

7th Tamil Term 2 Chapter 3.3 பேசும் ஓவியங்கள்

7th Tamil Term 2 Chapter 3.3 பேசும் ஓவியங்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.குகை ஓவியங்களில் வண்ண ம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ………….

அ) மண்துகள்

ஆ) நீர் வண்ணம்

இ) எண்ணெய் வண்ணம்

ஈ) கரிக்கோல்

Answer:

அ) மண்துகள்


2.நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் …

அ) குகை ஓவியம்

ஆ) சுவர் ஓவியம்

இ) கண்ணாடி ஓவியம்

ஈ) கேலிச்சித்திரம்

Answer:

ஈ) கேலிச்சித்திரம்

3.‘கோட்டோவியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..

அ) கோடு + ஓவியம்

ஆ) கோட்டு + ஓவியம்

இ) கோட் + டோவியம்

ஈ) கோடி + ஓவியம்

Answer:

அ) கோடு + ஓவியம்

4.‘செப்பேடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………

அ) செப்பு + ஈடு

ஆ) செப்பு + ஓடு

இ) செப்பு + ஏடு

ஈ) செப்பு + யேடு

Answer:

இ) செப்பு + ஏடு

5.எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………

அ) எழுத்து ஆணி

ஆ) எழுத்தாணி

இ) எழுத்துதாணி

ஈ) எழுதாணி

Answer:

ஆ) எழுத்தாணி

கோடிட்ட இடங்களை நிரப்புக

1.கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் ……………..

Answer:

பாரதியார்

2கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது ……………………

Answer:

துணி ஓவியம்

3.மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் ……………… மீது பொறித்துப் பாதுகாத்தனர்.

Answer:

செப்பேடுகளின்

குறுவினா

1.ஓவியங்களின் வகைகள் யாவை?

Answer:

  • ஓவியங்களின் வகைகள் : குகை ஓவியம், சுவர் ஓவியம், துணி ஓவியம், ஓலைச்சுவடி ஓவியம், செப்பேட்டு ஓவியம், தந்த ஓவியம், கண்ணாடி ஓவியம், தாள் ஓவியம், கருத்துப்படம் ஓவியம், நவீன ஓவியம்.


2.குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?

Answer:

  • பழங்கால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தனர். அவர்கள் செய்திகளைப் பிறருக்குத் தெரிவிக்கவே குகை ஓவியங்களை வரையத் தொடங்கினர்.

3.தாள் ஒவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?

Answer:

  • கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் முதலியனவற்றைக் கொண்டு தாள் ஓவியங்கள் வரையப்படுகின்றன.

 4.சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.

Answer:

  • அரண்மனைகள், மண்டபங்கள், கோயில்கள் போன்றவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் சுவர் ஓவியங்களைக் காணலாம்.


 5.செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?

Answer:

  • நீர்நிலைகள்
  • செடி கொடிகள்
  • பறவைகள்
  • விலங்குகள்
  • குறியீடுகள்

சிறுவினா

1.கேலி சித்திரம் என்றால் என்ன?

Answer:

அரசியல் கருத்துகளை எளிமையான படங்களைக் கொண்டு விளக்க உருவாக்கப்பட்டதே கருத்துப்பட ஓவியம் ஆகும்.

கருத்துப்பட ஓவியங்களின் மற்றொரு வடிவமே கேலிச்சித்திரம் எனப்படும்.

தமிழ்நாட்டில் முதன் முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் பாரதியார். ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளை இந்தியா என்னும் இதழில் கேலிச்சித்திரங்களின் மூலம் வெளியிட்டார். இப்பொழுது பெரும்பாலான இதழ்களில் இவை இடம் பெறுகின்றன.

மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை உணர்வு

தோன்றும்படி வரைவதே கேலிச்சித்திரம் ஆகும்.

2.ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.

Answer:

ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும், வண்ணப் பூச்சு ஓவியமாகவும் ஓலைச்சுவடி ஓவியங்கள் வரையப்பட்டன.

இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாகவே இத்தகைய ஓவியங்கள் இடம் பெற்றிருக்கும்.

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் ஓலைச்சுவடி ஓவியங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தற்காலத்தில் ஓலைச்சுவடி ஓவியங்களைக் காண்பது அரிது.

சிந்தனை வினா

1.தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?

Answer:

கேரளா இயற்கையன்னையின் உறைவிடமாக உள்ளது. தொடர்ச்சியான மலைகள், அழகான நீர்நிலைகள் எனக் கொஞ்சும் இயற்கை அமைப்பு. இதனால் இம்மாநிலத்தில் வனவிலங்குகள் பெருகியுள்ளன. யானைகளும் அதிகமாக இரு வனத்துறையினரால் யானைகள் பாதுகாக்கப்படுகின்றன. யானைகள் வாழ்வ சூழல் இருப்பதால் அதிக அளவில் யானைகள் இங்கு இருக்கின்றன. அதனால் தந்தத்தால் ஆன ஓவியங்கள் அதிகம் காணப்படுகின்றன.

கற்பவை கற்றபின்

1.உமக்குப் பிடித்த காட்சியை வரைந்து வண்ணம் தீட்டுக.

Answer:

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

 2.பருவ இதழ்களில் வெளிவந்த பலவகை ஓவியங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.

Answer:

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Share:

0 Comments:

Post a Comment