> 7th Tamil Term 2 Unit 1.1 கலங்கரை விளக்கம் Book Back answer ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

7th Tamil Term 2 Unit 1.1 கலங்கரை விளக்கம் Book Back answer

7th Tamil Term 2 Unit 1.1 கலங்கரை விளக்கம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.வேயாமாடம் எனப்படுவது ………..

அ) வைக்கோலால் வேயப்படுவது

ஆ) சாந்தினால் பூசப்படுவது

இ) ஓலையால் வேயப்படுவது

ஈ) துணியால் மூடப்படுவது

Answer:

ஆ) சாந்தினால் பூசப்படுவது

2.உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) காற்று

ஆ) வானம்

இ) கடல்

ஈ) மலை

Answer:

இ) கடல்

3.கடலில் துறை அறியாமல் கலங்குவன …….

அ) மீன்கள்

ஆ) மரக்கலங்கள்

இ) தூண்க ள்

ஈ) மாடங்கள்

Answer:

ஆ) மரக்கலங்கள்


4.தூண் என்னும் பொருள் தரும் சொல் …..

அ) ஞெகிழி

ஆ) சென்னி

இ) ஏணி

ஈ) மதலை

Answer:

ஈ) மதலை

குறுவினா

1.மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?

Answer:

  • மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது கலங்கரை விளக்கம்.
  • கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன்னை நோக்கி கலங்கரை விளக்கம் அழைப்பதாகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தம் பாடலில் அழகாக சிறப்பித்துக் கூறுகிறார்.

2.கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?

Answer:

  • கலங்கரை விளக்கில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.


சிறுவினா

1.கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.

Answer:

  • கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிப் பிடிக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது.
  • ஏணி கொண்டு ஏற முடியாத அளவிற்கு உயரமாக உள்ளது.
  • திண்மையான அதாவது திடமான கலவைச் சாந்து கொண்டு பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.
  • இந்த கலங்கரை விளக்கத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு , திசை தெரியாமல் தவிக்கும் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைப்பதாக புலவர்தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சிந்தனை வினா

1.கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

Answer:

  • கடலில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன் பிடித்து திரும்பவும் கரை சேரவும் இக்கலங்கரை விளக்கம் பெரிதும் துணை புரிகின்றது.
  • கடற்பயணம் சென்று கரை திரும்பும் பயணிகளுக்கு இக்கலங்கரை விளக்கம் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது.


கற்பவை கற்றபின்

1.கடற்கரைக்குச் சென்று அங்குள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்க.

Answer:

  • நம்முடைய விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் ஒரு முக்கிய இடம் கடற்கரை.
  • பல இயற்கைச் சூழல்கள் கலந்த நம்முடைய நாட்டில் பல மாநிலங்கள் கடற்கரையோடு ஒட்டியுள்ளன.

மெரினா கடற்கரை :

  • தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கிலோ மீட்டராகும்.
  • தமிழகக் கடற்கரைகளிலேயே எல்லா நாள்களிலும் அதிக அளவு மக்கள் கூடும் கடற்கரையாக மெரினா கடற்கரை உள்ளது.
  • இதன் அருகில் அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடம், ஜெயலலிதா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடம் ஆகியவை உள்ளன.

கன்னியாகுமரி கடற்கரை :

  • இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் இந்தக் கடற்கரை அமைந்துள்ளது.
  • உள்ளூர் மட்டுமல்லாது உலகிலுள்ள வெளிநாட்டுப் பயணிகளும் வந்து செல்லும் கடற்கரை இது.
  • இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் இணையும் முக்கடல் சங்கமம் உள்ளது.

  1. கடலுக்குள் பாறையில் அமைந்திருக்கும் விவேகானந்தர் சிலை மற்றும் 133 அடி 6 உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை.

  • இங்கு சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர்.


2.‘கலங்கரை விளக்கம்’ – மாதிரி ஒன்று செய்து வருக.

Answer:

  • மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

3.கடலும் கலங்கரை விளக்கமும் – ஓவியம் வரைந்து வண்ண ம் தீட்டுக.

Answer:


சொல்லும் பொருளும் :

1. மதலை – தூண்

2. சென்னி – உச்சி

3. ஞெகிழி – தீச்சுடர்

4. உரவுநீர் – பெருநீர்ப் பரப்பு

5. அழுவம் – கடல்

6. கரையும் – அழைக்கும்

7. வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது. திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

Share:

0 Comments:

إرسال تعليق