8th Tamil Refresher Course Topic 10 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )
மதிப்பீட்டுச் செயல்பாடு 1
பின்வரும் படங்களிலிருந்து காற்புள்ளி அமையுமாறு தொடர் அமைத்து எழுதுக.
- எனக்குப் பிடித்த காய்கறிகள் பீட்ரூட், காரட், முட்டைக்கோசு, தக்காளி.
- இப்படத்தில் மரம், பறவை, விலங்கு ஆகியன உள்ளன.
மதிப்பீட்டுச் செயல்பாடு - 2
வியப்புக்குறி அமையுமாறு தொடரமைக்க.
- ஆகா! என்ன அழகான கட்டடக்கலை!
- அடடே! மான் வலையில் மாட்டிக்கொண்டதே!
மதிப்பீட்டுச் செயல்பாடு - 3
முற்றுப்புள்ளி, வினாக்குறி, இரட்டை மேற்கோள் குறி அமையுமாறு தொடர்கள் அமைக்க.
- காகம், மானிடம் "எப்படி மாட்டிக்கொண்டாய்?" என்று கேட்டது.
- நரி, "நன்றாக இருக்கிறாயா?" என்று மானிடம் கேட்டது.
மதிப்பீட்டுச் செயல்பாடு - 4
கீழ்க்காணும் தொடர்களில் உரிய நிறுத்தக்குறிகளை இடுக.
1. நான் தண்டமிழைக் கற்று என் வாழ்வில் உயர்ந்தேன் என்று தமிழாசிரியர் கூறினார்
- "நான் தண்டமிழைக் கற்று, என் வாழ்வில் உயர்ந்தேன்" என்று தமிழாசிரியர் கூறினார்.
2. அண்ணா சிந்தி சீர்தூக்கு செயல்படு என்று கூறினார்
- அண்ணா, "சிந்தி, சீர்தூக்கு, செயல்படு" என்று கூறினார்.
3. தமிழ் இலக்கணம் ஐவகைப்படும் அவையாவன எழுத்து சொல் பொருள் யாப்பு அணி
- தமிழ் இலக்கணம் ஐவகைப்படும். அவையாவன : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
4. அடடே ஏனப்பா அழுகிறாய் என்ன வேண்டும் உனக்கு
- அடடே! ஏனப்பா அழுகிறாய்? என்ன வேண்டும் உனக்கு?
5. அனுமனைப் பார்த்து இராவணன் வாலி நலமா என்று கேட்டான்
- அனுமனைப் பார்த்து இராவணன், "வாலி நலமா?" என்று கேட்டான்.
6. இந்தச் சிலையை எங்கே வாங்கினீர்கள் நன்றாக இருக்கிறதே என்று கேட்டார்
- "இந்தச் சிலையை எங்கே வாங்கினீர்கள்? நன்றாக இருக்கிறதே!" என்று கேட்டார்.
0 Comments:
Post a Comment