> 8th Tamil Refresher Course Topic 12 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் ) ~ Kalvikavi - Educational Website - Question Paper

8th Tamil Refresher Course Topic 12 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

8th Tamil Refresher Course Topic 12 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

மதிப்பீட்டுச் செயல்பாடு

பின்வரும் செய்தியைப் படித்து ‘வானொலியில் விளம்பர உரையாடலாக’ எழுதுக.


சென்னை வானொலியில்

உழைப்பாளர் தினச் சிறப்பு நிகழ்ச்சிகள்

சென்னை , மே .1

சென்னை வானொலியில் இன்று (சனிக்கிழமை ) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் ஒலிபரப்பாகின்றன. காலை 7 மணிக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பங்கு பெறும் சிறப்புப் பேட்டி ஒலிபரப்பாகிறது.

அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்குச் சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குநர் , விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. நண்பகல் 12 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில், ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் புகழ் கிராமியப்பாடகி கிடாக்குழி மாரியம்மாள் கலந்து கொள்கிறார் .

பிற்பகல் 2மணிக்கு உழைப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்திய தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இடம்பெறுகிறது.

கலா - மாலா, சென்னை வானொலியில் உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து உனக்குத் தெரியுமா?

மாலா - தெரியுமே. காலை 7 மணிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிறப்புப் பேட்டி ஒலிபரப்பாகிறது.

கலா - அப்படியா, தவறாமல் கேட்க வேண்டும். அடுத்து ...

மாலா - காலை 10 மணிக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி.

கலா - நேற்று தான் பாடப்புத்தகத்தில் அவர் குறித்து படித்தேன். அவசியம் கேட்க வேண்டும். அடுத்து ...

மாலா - நண்பகல் 12 மணிக்கு கிடாக்குழி மாரியம்மாள் நிகழ்ச்சி.

கலா - கிராமியப் பாடகியாச்சே, அருமையாக இருக்கும். அடுத்து...

மாலா - பிற்பகல் 2 மணிக்கு உழைப்பின் மகத்துவம் கூறும் திரைப்படத் தொகுப்பு.

கலா - அத்தனையும் அருமையான நிகழ்ச்சிகள், தவறாமல் கேட்டுவிடுகிறேன். நன்றி.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts