8th Tamil Refresher Course Topic 16 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )
8th Tamil refresher course unit 16 - படிதுப் பொருளுணர்தல்
மதிப்பீட்டுச் செயல்பாடு
கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து விடையளிக்க .
சென்னையின் அடையாளம்
மே தின நினைவாகவும், உழைப்பைப் போற்றும் விதத்திலும் சென்னை , மெரீனாக் கடற்கரையில் நினைவுச்சிலை எழுப்பப்பட்டது. இது, உழைப்பாளர் சிலை என அழைக்கப்படுகிறது. இது சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலர் , தொழிலாளர் பெற்ற உரிமையை நினைவுகூறும் வகையில், சென்னை , மெரீனாக் கடற்கரையில், 1923இல் பொதுக்கூட்டம் நடத்தினார் . இதுவே , மே தினத்தையொட்டி இந்தியாவில் நடந்த முதல் கூட்டமாக மதிக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின் நினைவாக, தமிழக முதல்வராக இருந்த காமராஜர், தன் ஆட்சிக் காலத்தில் ஒரு சிலை எழுப்ப உத்தரவிட்டார் . கடினமான உழைப்பில், நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பது போல் அச்சிலை உருவாக்கப்பட்டது. சென்னை , அரசு கவின்கலைக் கல்லூரி முதல்வராக இருந்த தேவி பிரசாத்ராய் சவுத்திரி அதை வடிவமைத்தார் . கவின்கலைக் கல்லூரியில் அப்போதைய காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு ஆகியோர் சிலைக்கான மாடலாக இருந்தனர். இச்சிலை, கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை, சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆளுநர் பீஷ்னுராம் மேதி, ஜனவரி 25, 1959இல் திறந்து வைத்தார் .
வினாக்கள்
1. உழைப்பாளர் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
உழைப்பாளர் சிலை சென்னை , மெரீனாக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
2. உழைப்பாளர் சிலை எந்த நிகழ்வின் நினைவாக எழுப்பப்பட்டது?
தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலர் , தொழிலாளர் பெற்ற உரிமையை நினைவுகூறும் வகையில், சென்னை , மெரீனாக் கடற்கரையில், 1923இல் பொதுக்கூட்டம் நடத்தினார் . அதன் நினைவாக உழைப்பாளர் சிலை எழுப்பப்பட்டது.
3. இந்தியாவின் முதல் மே தினக் கூட்டம் யாரால் நடத்தப்பட்டது?
பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலரால் நடத்தப்பட்டது.
4. உழைப்பாளர் சிலைக்கு மாதிரிகளாக இடம் பெற்றவர்கள் யாவர்?
கவின்கலைக் கல்லூரியில் அப்போதைய காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு ஆகியோர் சிலைக்கான மாடலாக இருந்தனர்.
5. உழைப்பாளர் சிலை எழுப்ப உத்தரவிட்டவர் யார் ?
தமிழக முதல்வராக இருந்த காமராஜர், தன் ஆட்சிக் காலத்தில் உழைப்பாளர் சிலை எழுப்ப உத்தரவிட்டார் .
0 Comments:
Post a Comment