> 8th Tamil Refresher Course Topic 18 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் ) ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8th Tamil Refresher Course Topic 18 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

8th Tamil Refresher Course Topic 18 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

மதிப்பீட்டுச் செயல்பாடு

கீழக்காணும் துணைப்பாடப் பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

இந்திய வனமகன் (நேர்காணல்) 

கட்டெறும்புகளா ? அவை கடித்தால் உடம்பில் கடுமையான எரிச்சல் ஏற்படுமே ? ஆமாம். ஆனால் என்ன செய்வது? மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமே .அதற்காக நாள் தோறும் நூற்றுக்கணக்கான எறும்புகளைக் கொண்டுவந்து இங்கு விட ஆரம்பித்தேன் . கட்டெறும்புகள் ஊர்ந்து செல்லச்செல்ல மண்ணின் தன்மை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. காடுகளில் ஆங்காங்கே பச்சைப் பசும்புற்கள் தலைகாட்டத் தொடங்கின. அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அதன்பின்பு நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன. இவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு விதைகளும் உரமும் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன? கால்நடைகளை வளர்ப்பதுதான் என்னுடைய வேலை. அவற்றின் சாணத்தை ஒரு துளிகூட வீணாக்காமல் இயற்கை உரம் தயாரிக்கத் தொடங்கினேன் . ஒரு பழம் சாப்பிட்டால் கூட அதன் கொட்டையை வீசி எறியாமல் விதையாகச் சேர்த்து வைப்பேன் .பிறகு மழைக்காலம் தொடங்குவதற்குமுன் விதைகளை எடுத்து இத்தீவில் தூவத் தொடங்கிவிடுவேன் . இப்படி ஒவ்வோர் ஆண்டும் நான் தூவிய விதைகள்தாம் இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இக்காடு. மழை இல்லாத காலங்களில் செடிக்கு எப்படித் தண்ணீர் ஊற்றினீர்கள்? ஆற்றின் கரையோரம் இருந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதில் எனக்குச் சிக்கல் ஏற்படவில்லை . ஆனால் தொலைவில் இருந்த செடிகளுக்கு நீர் ஊற்றுவது சற்றுக் கடினமான செயலாக இருந்தது. அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன் . செடியைச்சுற்றி மூங்கில் குச்சிகளை நட்டுவைத்து அதில் ஒரு பானையைப் பொருத்தினேன் . அதில் ஒரு சிறுதுளை இட்டு, நீர் சொட்டுச் சொட்டாக வடிவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன் . பிறகு அதில் நீர் நிரப்பினால் ஒரு வாரத்திற்குச் சிக்கல் இருக்காது. இப்படித்தான் மற்ற செடிகளை வளர்த்து வந்தேன் .

வினாக்கள்

1. செடிகள், மரங்கள் அதிகம் வளர என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • நீர் ஊற்ற வேண்டும், மனிதர்கள், விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

2. மழையற்ற கோடைக்காலத்தில் தாவரங்களைப் பாதுகாக்க ஏற்ற வழிகளை எழுதுக.

  • சொட்டுநீர்ப் பாசன வசதி செய்ய வேண்டும். 

3. காடுகளால் நன்மை அடைவது மனிதர்களா? வன உயிரினங்களா? – இது சார்ந்து உங்கள் கருத்துகளை எழுதுக.

  • காடுகளால் நன்மை அடைவது மனிதர்களும்தான் வன உயிரினங்களும்தான்.
  • வன உயிரினங்களுக்குக் காடுகளே உறைவிடங்கள்.
  • காடுகளால் மனிதர்களுக்குப் பலவித மூலிகைகள், மரங்கள், தேன், மழை, மண்ணரிப்பைத் தடுத்தல், வன உயிரினங்கள் ஊருக்குள் வராமை போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

Share:

0 Comments:

Post a Comment