> 8th Tamil Refresher Course Topic 4 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் ) ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8th Tamil Refresher Course Topic 4 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

8th Tamil Refresher Course Topic 4 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

மதிப்பீட்டுச் செயல்பாடு

நடிப்புச் சுதேசிகள்

நெஞ்சி லுரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனைசொல்வாரடீ-கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடீ

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்ற லின்றி

நாட்டத்தில் கொள்ளாரடீ -கிளியே

நாளில் மறப்பாரடீ.

- கவிஞர் பாரதியார்

1. மேற்கண்ட பாடலில் இடம்பெறும் மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.

நெஞ்சி  - நேர்மைத் 

ஞ்சனை - வாய்ச்சொல்லில் 

கூட்டத்தில்  - கூவிப் 

நாட்டத்தில்  - நாளில் .

2. மேற்கண்ட பாடலில் இடம்பெறும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

நெஞ்சி  - வஞ்சனை

கூட்டத்தில் - நாட்டத்தில் 

3. மேற்கண்ட பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

நெஞ்சி லுரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனைசொல்வாரடீ-கிளியே

நாட்டத்தில் கொள்ளாரடீ -கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடீ

நாளில் மறப்பாரடீ.

4. மேற்கண்ட பாடலின் தலைப்பு மற்றும் ஆசிரியரின் பெயரை எழுதுக.

பாடலின் தலைப்பு

  • நடிப்புச் சுதேசிகள்

ஆசிரியரின் பெயர்

  • கவிஞர் பாரதியார்

Share:

0 Comments:

Post a Comment