8th Tamil Refresher Course Topic 6 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )
8th Tamil Refresher Unit 6 : செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற் பொருளையும் அறிதல்
மதிப்பீட்டுச்செயல்பாடு - 1
வெற்றி மேல் வெற்றிவர விருதுவர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்.
- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
மேற்கண்ட பாடலின் மையக் கருத்தினை எழுதுக.
மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெற வேண்டும். பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும்.
மதிப்பீட்டுச்செயல்பாடு - 2
பாடலைப் படித்து அதன் சொற்பொருளை எழுதுக.
யாவரும் சமம்
சுற்றம் விலக்கி வாழாதே !
சூதின் பக்கம் போகாதே !
உற்றார் உறவைப் பழிக்காதே !
ஊரார் பழிக்க நடவாதே !
பெற்றோர் நோகப் பேசாதே !
பெரியோர் பாதை விலகாதே !
கற்றோர் நட்பை உதறாதே !
கவசம் அதுவே மறவாதே !
- பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்
சொற் பொருள் எழுதுக.
சுற்றம் - உறவுகள்
சூது - சூதாட்டம்
கவசம் - பாதுகாப்பு
பழி - குற்றம்
கற்றோர் - படித்தோர்
0 Comments:
Post a Comment