8th Tamil Refresher Course Topic 9 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )
8th Tamil Refresher Course Unit 9 : இணையான தமிழ்ச் சொற்கள் , கலைச்சொற்கள் அறிதல்
மதிப்பீட்டுச் செயல்பாடு - 1
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
மகிழன் காலையில் எழுந்தான் . தன் காலைக் கடன்களை முடித்தான் . காலைஉணவு சாப்பிட்டான் . 8.30 மணிக்குப் பள்ளி பேருந்தில் ஸ்கூலுக்குச் சென்றான் . பள்ளியில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டான் . தனது வகுப்பில் டீச்சரிடம் அனைத்துப் பாடங்களையும் சூப்பராகப் படித்தான் . மதியஉணவு இடைவேளையில் பிரண்சுடன் லஞ்ச் சாப்பிட்டான் . மதியம் கணிதப் பாடவேளையில் ஆசிரியர் கொடுத்த ஆக்டிவிட்டி செய்தான் . ஈவினிங் 4.30 மணிக்கு ஸ்கூல்பெல் ஒலித்தது. பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்குச் செல்லும் வழியில் ரோட்டில் செல்லும் பஸ், கார் , லாரி, மிதிவண்டி போன்ற வாகனங்களைக் கண்டு இரசித்தான் . வீட்டிற்குச் சென்றவுடன் யுனிபார்மை மாற்றிக் கை , கால்களைக் கழுவினான் . மம்மி கொடுத்த ஸ்நாக்சைச் சாப்பிட்டுவிட்டு தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றான் .
ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொற்கள்
- ஸ்கூலுக்கு பள்ளிக்கூடத்திற்கு
- டீச்சரிடம் ஆசிரியரிடம்
- சூப்பராக சிறப்பாக
- பிரண்சுடன் நண்பர்களுடன்
- ஆக்டிவிட்டி செயல்பாடு
- ஈவினிங் மாலை
- ஸ்கூல்பெல் பள்ளி மணி
- ரோட்டில் சாலையில்
- பஸ் பேருந்து
- கார் மகிழுந்து
- லாரி சரக்குந்து
- யுனிபார்ம் சீருடை
- மம்மி அம்மா
- ஸ்நாக்ஸ் நொறுக்குத்தீனி
மதிப்பீட்டுச் செயல்பாடு - 2
படத்தைப் பார்த்து ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
மதிப்பீட்டுச் செயல்பாடு - 3
- ஆபூர்வம் புதுமை
- நஷ்டம் இழப்பு
- ஆராதனை வழிபாடு
- உத்தியோகம் பணி
- கஜானா கருவூலம்
- நிபுணர் அறிஞர்
- நாஷ்டா சிற்றுண்டி
- உபயோகம் பயன்பாடு
- உத்தரவு ஆணை
0 Comments:
Post a Comment