9th Tamil Book Chapter 2.2 பட்டமரம் Book back Answer
கற்பவை கற்றபின்
ஏழை விவசாயி : எங்க அப்பா காலத்திலிருந்து நெல் கரும்பு போட்டோம். அப்ப வந்தது. இப்ப……. வெண்டை , புடலை கூட வரமாட்டேங்குது.
அழகு : என்ன போட்டு என்ன ஆச்சு? மழையில்லானா என்ன பண்ண முடியும்? (மனை விற்பனையாளர்)
ஏழை விவசாயி : அழகு…. பக்கத்திலிருக்கிற வயலெல்லாம் பிளாட் போட்டுட்டாங்க.
எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல்லே! மழையும் இல்ல, கிணத்துல
தண்ணியில்லே!
அழகு : நான் சொல்ற வழிக்கு வரமாட்டங்கிற… வித்து பணத்த பேங்க்ல போட்டுட்டு நிம்மதியா சாப்பிட்டுட்டு தூங்கு.
ஏழை விவசாயி : பூமித்தாய விக்கச் சொல்ற… வித்தா அப்பார்ட் மெண்ட் கட்றங்கிறீங்க.. என்ன ஆகப் போதுன்னு எனக்குத் தெரியல!
அழகு : மழையில்ல தண்ணியில் வீடு கட்டி நூறு ஜனங்க பொழக்கட்டுமே! வயல் வரப்ப வச்சிருந்து என்ன பண்ணப் போறீங்க? வித்தா மகளுக்கு கல்யாணம்; மகனைப் படிக்க வைக்க…. எல்லாம் உன் நன்மைக்கே சொல்றேன்.
ஏழை விவசாயி : பால் தர்ற பசுமாட்ட மடி அறுத்துப் பால் குடிக்கிறதா? விளை நிலத்தைப் பூரா விலை நிலமா ஆக்கிட்டீங்க அழகு.
அழகு : இனி வரப்போற நாளில் வீடுதான் முக்கியம். குடியிருக்க வேண்டாமா?
ஏழை விவசாயி : உங்க மாதிரி ஆளுகளால தான் கொசு தொந்தரவு நிறைய ஆகிருச்சு. குளங்குட்டையெல்லா பிரிச்சுப் போட்டு வித்தாச்சு தவளை இருந்தா கொசுவப் பிடிக்கும் இப்ப அதுக்கும் வழியில்ல
அழகு : ஒன்னும் வேணாங்க உங்க புள்ளங்க இந்தக் குடிசையில் இருக்குமா?
கேட்டுச் சொல்லுங்க….
ஏழை விவசாயி : உனக்குப் பணம் முக்கியம் எனக்குப் பயிர் முக்கியம். நிலத்தால் சோறு போடுறவன் ஏழையாகிறான். நிலத்தைக் கூறுபோடுறவன் பணக்காரனாகிறான்.
3.பட்டணத்துப் பறவைகளும் ஊர்ப் பறவைகளும் என்ற தலைப்பில் பறவைகள் கூறுவன போலச் சிறு சிறு கவிதைகள் படைக்க.
Answer:
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.‘மிசை’ – என்பதன் எதிர்ச்சொல் என்ன?
அ) கீழே
ஆ) மேலே
இ) இசை
ஈ) வசை
Answer:
அ) கீழே
சிறுவினா
1.பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?
Answer:
கவிஞர் தமிழ் ஒளியின் கருத்துகள்:
“தினந்தோறும் மொட்டைக்கிளையோடு நின்று பெருமூச்சு விடும் மரமே!
நம்மை வெட்டும் நாள் ஒன்றுவரும் என்று துன்பப்பட்டாயோ?
நிழலில் அமர. வாசனை தரும் மலர்களையும் இலைகளையும் கூரையாக விரித்த மரமே!
வெம்பிக் கருகிட இந்த நிறம் வர வாடிக் குமைந்தனவோ?
கொடுந்துயர் உற்று கட்டை என்னும் பெயர் பெற்று கொடுந்துயர் பட்டுக் கருகினையோ?
உன் உடையாகிய பட்டை இற்றுப்போய்க் கிழிந்து உன் அழகு முழுதும் இழந்தனையோ? சீறிவரும் காலப் புயலில் எதிர்க்கக் கலங்கும் ஒரு மனிதன்
ஓலமிட்டுக் கரம் நீட்டியதுபோல துன்பப்பட்டு வருந்தி நிற்கிறாய்”.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.‘விசனம்’ சொல் தரும் பொருள்
அ) வேதனை
ஆ) மகிழ்ச்சி
இ) ஏக்கம்
ஈ) கவலை
Answer:
ஈ) கவலை
2.பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
அ) மிசை – மேல்
ஆ) கந்தம் – மணம்
இ) வெம்பல் – வாடல்
ஈ) குந்த – வருந்த
Answer:
குந்த – வருந்த
நிரப்புக
3. கவிஞர் தமிழ் ஒளி வாழ்ந்த காலம் …………..
Answer:
1924 – 1965
4. ‘பட்டமரம்’ கவிதை இடம் பெற்ற நூல் ……….
Answer:
தமிழ் ஒளியின் கவிதைகள்
5. பாரதியார் வழித்தோன்றல் – பாரதிதாசனின் மாணவர்……….
Answer:
கவிஞர் தமிழ்ஒளி
குறுவினா
1.கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் யாவை?
Asnwer:
- நிலைபெற்ற சிலை, வீராயி கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலியன ஆகும்.
பாடலின் பொருள் :
- இலைகள், துளிர்கள் எதுவும் இன்றி வறண்ட மொட்டைக் கிளைகளோடு நின்று. தினம் தினம் தன் நிலையை எண்ணிபெருமூச்சுவிட்டுக் கொண்டு ஏக்கத்துடன் திகழும் பட்ட மரமே, உன்னையும் ஒருவன் வெட்டும் நாள் விரைவில் வரும் என்று எண்ணி மனக்குமுறல் அடைந்தாயோ?
- அமர்வதற்கு நிழல் தந்து, வாசனை பொருந்திய மலர்களை மலரச் செய்து, இலைகளால் கூரை விரித்திருந்த மரமே. வெப்பத்தால் வெந்து, கருகி இந்த நிறம் வந்ததே என்று வருந்துகிறாயோ!
- மரம் என்னும் பெயர் மாறி, கட்டை என்னும் பெயர் உற்று கொடுந்துயர் கொண்டனையோ! உன் மரப்பட்டை என்னும் உடல் வெப்பமுற்று, கிழிந்துவிட முற்றும் இழந்த நிலை அடைந்தாயோ!
- காலம் என்னும் புயல் சீறிவர, கலங்கும் மனிதன் உதவி கேட்டு, ஓலமிட்டு கரம் நீட்டி தவிப்பது போல நீயும் துன்பத்தில் உழல்கிறாயோ!
- பாடும் பறவைகள் உன்னில் கூடி வாழ்ந்து, உனக்கு ஒரு பாடல் புனைந்ததும் மூடு பனித்திரை உனக்கு மோகம் கொடுத்ததும், ஆடும் கிளைகளில் சிறுவர்கள் ஏறிநின்று குதிரை ஓட்டி விளையாடியதும் ஏட்டில் நின்ற பெருங்கதையாய் ஒரு கதையாய் முடிந்தனவே.
- அவையாவும் வெறுங்கனவாய் ஆனதே என்று, பட்ட மரம் ஒன்று தன் நிலையை எண்ணி குமைவதாக எழுதியுள்ளார் கவிஞர் தமிழ் ஒளி அவர்கள்.
சொல்லும் பொருளும்
- விசனம் – துன்பம், கவலை
- குந்த – உட்கார
- கந்தம் – வாசனை
- இற்று – அழிந்து (இத்துப் போச்சு கொச்சை வழக்கு)
- எழில் – அழகு
- மிசை – மேல்
- ஓலம் – அலறல்
இலக்கணக் குறிப்பு :
- வெந்து, வெம்பி, எய்தி – வினையெச்சங்கள்
- மூடுபனி – வினைத்தொகைகள்
- ஆடுங்கிளை – பெயரெச்சத் தொடர்
- வெறுங்கனவு – பண்புத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம் :
1. விரித்த – விரி + த் + த் + அ
விரி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
2. குமைந்தனை – குமை + த்(ந்) + த் + அன் + ஐ
குமை – பகுதி
த்(ந்) – த் ‘ந்’ ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன்- சாரியை
ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
3. அடைந்தனை – அடை + த்(ந்) + த் + அன் + ஐ
அடை – பகுதி
த்(ந்) – த்’ந்’ ஆனாது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
4. கருகினை – கருகு + இன் + ஐ
கருகு – பகுதி,
இன் – இறந்தகால இடைநிலை
ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்
5. இழந்தனை – இழ + த்(ந்) + த் + அன் + ஐ
இழ – பகுதி
த்(ந்) – த்’ந்’ ஆனாது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஐ – – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
6. உழன்றனை – உழ + ல்(ன்) + ற் + அன் + ஐ
உழல் – பகுதி,
ல்(ன்) – ல்’ன்’ ஆனாது விகாரம்
ற் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஐ – முன்னிலை ஒருமை
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.2 பட்டமரம்
7. புனைந்தது – புனை + த்(ந்) + த் + அ + து
- புனை – பகுதி,
- த்(ந்) – த்’ந்’ ஆனாது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- அ – சாரியை
- து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
8. கொடுத்தது – கொடு + த் + த் + அ + து
- கொடு – பகுதி,
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- அ – சாரியை
- து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
0 Comments:
Post a Comment