> TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வு தேதி 2021 வெளியீடு? தேர்வர்கள் கவனத்திற்கு.. ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வு தேதி 2021 வெளியீடு? தேர்வர்கள் கவனத்திற்கு..

TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வு தேதி 2021 வெளியீடு? தேர்வர்கள் கவனத்திற்கு..



தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல போட்டித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலைமையை சரி செய்ய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஒரு சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.


இந்நிலையில், தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இதனை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து,தேர்வாணையம் சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தற்போது பல இடங்களில் உள்ளாட்சி தேர்வுகள் நடைபெற்று வருவதால் சில தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் TNPSC குரூப் தேர்வுகளை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாததால் பெரிய அளவிலான காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

0 Comments:

Post a Comment