தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் ‘தமிழ்’ பாடத்தாள் கட்டாயம், 100% வேலைவாய்ப்பு – அரசாணை வெளியீடு..
தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் இனி தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. தவிர தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100% வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணிபுரிவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டியது அவசியமாகும். அந்த வகையில் அரசுத்துறைகளில் இருக்கும் ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றபடி குரூப் 1 முதல் குரூப் 4 வரையுள்ள அனைத்து போட்டித்தேர்வுகளையும் TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் TNPSC குரூப் தேர்வுகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு இனி தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என சட்டமன்ற பேரவையின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
TNPSC தமிழ் பாடத்தாள்
தவிர இந்த TNPSC குரூப் தேர்வுகளில் நடத்தப்படும் தமிழ் பாடத்தாளில், தேர்வர்கள் குறைந்தபட்சமாக 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும், இந்த மதிப்பெண்களை பெறும் போட்டியாளர்களுக்கு மட்டுமே மற்ற தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் குரூப் 1, 2 மற்றும் 2A ஆகிய இரு நிலைகளை கொண்ட தேர்வுகளுக்கு தமிழ் மொழி தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையிலும், குரூப் 3 மற்றும் 4 ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தமிழ் முக்கியம்
இப்போது, TNPSC நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என மனிதவள மேலாண்மைத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் கீழ், ஆசிரியர், மருத்துவ பணியாளர் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நிதித்துறை வெளியிட்டுள்ளது. அதே போல TNPSC போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment