7th Tamil Unit 1 - Refresher Course Answer Key
மதிப்பீட்டுச் செயல்பாடு
மேலே கற்றவற்றை அடிப்படையாகக்கொண்டு பின்வரும் செயல்பாடுகளைச் செய்வோமா?
1. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
நான் கடைக்குச் சென்றேன்.
நாங்கள் கடைக்குச் சென்றோம். (நாங்கள் / யான்)
2. இடப்பெயர்களின் வகைகளை வட்டமிடுக.
பெயரெச்சம், தன்மை, படர்க்கை, ஓடினான் , வினையெச்சம், முன்னிலை
3. அடிக்கோடிட்டச் சொல்லின் இடப்பெயரை எழுதுக.
நீங்கள் நேற்று கோயிலுக்குச் சென்றீர்களா?
நீங்கள் - முன்னிலை
4, கோடிட்ட இடத்தை நிரப்புக.
ராணி பள்ளிக்கு வந்தாள். அவள் தோழிகளுடன் விளையாடினாள்.
- இத்தொடரில் அவள் என்பது படர்க்கை
இடத்தைக் குறிக்கிறது.
5. ஒருமைக்கேற்ற பன்மையுடன் பொருத்துக.
அ. நான் - நாங்கள்
ஆ ) நீ - நீங்கள்
இ ) அது - அவை
6 . பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களைப் பொருத்தமான கட்டத்தில் எழுதுக.
1. தாய் தந்தையரை நாம் மதித்து வாழவேண்டும்.
2. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
3. தாயே நீ அருள் புரிவாய்.
4. அவர்கள் சமாதானத்தின் முன்னோடிகள்.
5. அவர் சிறந்த பாடகர்.
6. அவள் நற்குணம் உடையவள்.
7. நீங்கள் பாட்டுப்பாடி ஆடுங்கள்.
8. நான் ஒரு சமாதானப் பிரியன்.
9. நீவிர் கடமையைச் சரியாக செய்வீர்கள்.
10. நீர் வீட்டிற்குச் சென்று மாலையில் என்ன செய்வீர்?
தன்மை - நான் , நாம் , யாம்
முன்னிலை - நீ , நீர் , நீவிர் , நீங்கள்
படர்க்கை - அவள் , அவர் , அவர்கள்
0 Comments:
إرسال تعليق