8th Std Social Science Term 1 Guide | Lesson.4 மக்களின் புரட்சி - Book Back Answer
lesson .4 மக்களின் புரட்சி
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
a. 1519
b. 1520
c. 1529
d. 1530
விடை : 1529
2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
a. பூலித்தேவன்
b. யூசுப்கான்
c. கட்டபொம்மன்
d. மருது சகோதரர்கள்
விடை : பூலித்தேவன்
3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்
a. மதுரை
b. திருநெல்வேலி
c. இராமநாதபுரம்
d. தூத்துக்குடி
விடை : இராமநாதபுரம்
4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?
a. பாஞ்சாலங்குறிச்சி
b. சிவகங்கை
c. திருப்பத்தூர்
d. கயத்தாறு
விடை : கயத்தாறு
5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
அ) நாகலாபுரம் ஆ) சிவகிரி
இ) சிவகங்கை ஈ) விருப்பாச்சி
விடை : சிவகங்கை
6. ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.
a. மருது பாண்டியர்கள்
b. கிருஷ்ணப்ப நாயக்கர்
c. வேலு நாச்சியார்
d. தீரன் சின்னமலை
விடை : மருது பாண்டியர்கள்
7. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
a. திண்டுக்கல்
b. நாகலாபுரம்
c. புதுக்கோட்டை
d. ஓடாநிலை
விடை : ஓடாநிலை
8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
a. மத்திய இந்தியா
b. டெல்லி
c. கான்பூர்
d. பரெய்லி
விடை : மத்திய இந்தியா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. கிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
விடை : கட்டபொம்மன்
2. விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் _______ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்.
விடை : அரியநாதர்
3. கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள்.
விடை : ஆந்திரா
4. _______ தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்.
விடை : வேலுநாச்சியார்
5. _______ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்.
விடை : சின்னமருது
6. 1857 புரட்சியை _______ என்பவர் ‘முதல் இந்திய சுதந்திரப் போர்’ என விவரிக்கிறார்.
விடை : வி.டி.சவார்க்கர்
III.பொருத்துக
1. டெல்லி - கன்வர் சிங்
2. கான்பூர் - கான் பகதூர் கான்
3. ஜான்சி - நானா சாகிப்
4. பரெய்லி - லட்சுமி பாய்
5. பீகார் - இரண்டாம் பகதூர்ஷா
விடை : 1 – உ, 2 – இ, 3 – ஈ, 4 – ஆ, 5 – இ
IV. சரியா, தவறா?
1. விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.
விடை : சரி
2. சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்
விடை : தவறு
3. 1799 அக்டோபர் 17 ம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
விடை : சரி
4. திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார்
விடை : சரி
V. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்யவும்
I. வேலூர் புரட்சி 1801 ஆம் ஆண்டு ஏற்பட்டது.
II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.
III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக
இருந்தார்.
IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.
I & II சரி
II & IV சரி
II & III சரி
I, II, & IV சரி
விடை : II & III சரி
அ) தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்
a. மருது பாண்டியர் – எட்டயபுரம்
b. கோபால நாயக்கர் – திண்டுக்கல்
c. கேரளவர்மன் – மலபார்
d. துண்டாஜி – மைசூர்
விடை : மருது பாண்டியர் – எட்டயபுரம்
ஆ ) மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி
கட்டபொம்மன், ஊமத்துரை, செவத்தையா, திப்பு சுல்தான்
விடை : திப்பு சுல்தான்
VI. பின்வரும் வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வரிகளில் விடையளி.
1. பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக?
• விஸ்வநாத நாயக்கர் பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார்
• அதன்மூலம் நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு
பாளையமும் ஒரு பாளையக்காரரின் கீழ் கொண்டுவரப்பட்டது.
பாளையக்காரர்கள் சிலர்
- பூலித்தேவர்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- ஊமைத்துரை
- மருது சகோதரர்கள்
- தீரன் சின்னமலை
2. பாளையக்கார புரட்சியில் வேலு நாச்சியாரின் பங்கு என்ன?
• இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் (இந்தியப்) பெண்ணரசி ஆவார்.
• இவர் தமிழர்களால் ‘வீரமங்கை’ எனவும் ’தென்னிந்தியாவின் ஜான்சி ராணி’ எனவும் அறியப்படுகிறார்
3. தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?
• சிவகங்கையின் மருது சகோதரர்கள்
• திண்டுக்கல்லின் கோபால நாயக்கர்
• மலபாரின் கேரளவர்மன்
• மைேரின் கிருஷ்ணப்ப நாக்கர் மற்றம் துண்டாஜி
4. ’திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின்’ முக்கியத்துவம் யாது?
• ஜூன் 1801ல் மருது சகோதரர்கள் ’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ என்றழைக்கப்பட்ட ‘சுதந்திரப் பிரகடனம்’ ஒன்றை வெளியிட்டனர்.
• இதன் மூலம் மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களுக்கெதிரான எதிர்ப்புணர்ச்சியை நாடெங்கும் பரப்பினர்.
• 1801 பிரகடனமே ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பாக இருந்தது.
5. வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?
• புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
• முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
• வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
6. 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான உடனடிக் காரணம் என்ன?
• இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டுரக துப்பாக்கியே உடனடிக் காரணமாக இருந்தது.
• இந்த வகைத் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவதற்கு முன் அதன் மேலுறையைபற்களால் கடித்து நீக்கவேண்டும்.
• அதன் மேலுறையில் பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது. எனவே இதனை இந்திய சிப்பாய்கள் (இந்து, முஸ்லீம்) தங்கள் மத உணர்வை புண்படுத்துவதாக கருதினர்.
• ஏனெனில் இந்துக்கள் பசுவை புனிதமாகக் கருதுபவர்களாகவும். முஸ்லீம்கள் பன்றியை வெறுப்பவர்களாகவும் இருந்தனர்.
• இவ்வாறு கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் புரட்சிக்கு அடிப்படை மற்றும் உடனடிக் காரணமாயிற்று.
தணம்
ردحذفதணம்
ردحذف