> Flash News : PGTRB - தேர்வு நடைபெறும் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Flash News : PGTRB - தேர்வு நடைபெறும் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

PGTRB - Exam Date TRB Announcement 


PGTRB 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020 21 காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் .01 / 2021 , நாள் 09.09.2021 மற்றும் திருத்திய அறிவிக்கைகள் எண் . 01 A / 2021 , நாள் 17.09.2021 மற்றும் 01 B / 2021 , நாள் 21.10.2021 ஆகிய தினங்களில் வெளியிடப்பட்டன.

 இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 18.09.2021 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 14.11.2021 மாலை 05.00 மணி வரை கால அவகாசம் வழங்ப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.


தற்பொழுது , 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை , தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availability of Examination Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

 விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment