12th Basic Auto Mobile Engineering Unit 1 (AM ) Book back Answer Guide
- வகுப்பு 12
- இயல் – 1
- Unit 1 : சக்தி கடத்தும் அமைப்பு
- Preapred By : Chandra sekaran
- NSVV Boys higher secondary school ,Pattiveeranpatti
- அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல்
பயிற்சித் தாள் – 1
I. பலவுள் தெரிவு வினாக்கள்:
1.ஆட்டோமொபைல் வாகனங்களில் என்ஜின் எனும் மூல ஆதாரம் பொருத்தப்பட்டு அதனிலிருந்து உருவாகும் சக்தியை எந்த பாகங்களுக்கு கடத்தினால் தான் வாகனம் நகர்ந்து செல்ல முடியும்
அ) பம்புக்கு
ஆ) அச்சிற்கு
இ) வாகனத்தின் பாடிக்கு
ஈ) வீல்களுக்கு
Answer : ஈ) வீல்களுக்கு
2.ஆட்டோமொபைல் வாகனங்களில் என்ஜினிலிருந்து கிடைக்கும் சக்தி
அ) சுழல் சக்தி
ஆ) முன்பின் நகரும் சக்தி
இ) எக்சன்ட்ரிக் சக்தி
ஈ) வெப்ப கடத்தும் சக்தி
Answer : அ) சுழல் சக்தி
3.சக்தி கடத்தும் போது, சக்தி கடத்தும் அமைப்பு கடத்தும் விதம்
அ) மென்மையாக சத்தமின்றி
ஆ) அதிக சத்தத்துடன்
இ) மெதுவான உராய்வுடன்
ஈ) அதிக உராய்வுடன்
Answer : அ) மென்மையாக சத்தமின்றி
4.முன்புற என்ஜின் பின்சக்கர இயக்கம் ___________ வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது
அ) ஒரு சில
ஆ) பெரும்பாலான
இ) வெவ்வேறு
ஈ) மிகவும் சில
Answer : ஆ) பெரும்பாலான
5.முன்புற என்ஜின் முன்சக்கர இயக்கத்தில் என்ஜினின் சக்தி கிளட்ச், கியர் பாக்ஸ், டிபரன்சியல் மற்றும் சிறிய அச்சு மூலம் எதற்கு கடத்தப்படுகிறது
அ) பின் சக்கரத்திற்கு
ஆ) முன் சக்கரத்திற்கு
இ) முன்புறம் வலது சக்கரத்திற்கு
ஈ) பின்புறம் இடது சக்கரத்திற்கு
Answer : ஆ) முன் சக்கரத்திற்கு
6.முன்புற என்ஜின் முன்சக்கர இயக்கம் _____ தன்மை அதிகம் உடையது
அ) சாலை பிடிப்பு
ஆ) சாலையில் வழுக்கல்
இ) வேகமாக செல்லும்
ஈ) நிற்கும்
Answer : அ) சாலை பிடிப்பு
7.முன்புற என்ஜின் முன் சக்கர இயக்கத்தில் பராமரிப்பு செலவு ______
அ) அதிகமாக இருக்கும்
ஆ) குறைவாக இருக்கும்
இ) மிகக் குறைவாக இருக்கும்
ஈ) இல்லை
Answer : அ) அதிகமாக இருக்கும்
8.மேற்கூடு நீங்கலாக பிற பாகங்களைக் கொண்ட தொகுப்பின் பெயர்
அ) சேஸிஸ்
ஆ) பிரேம்
இ) வாகனம்
ஈ) சஸ்பென்சன் அமைப்பு
Answer : அ) சேஸிஸ்
9.என்ஜின் சக்தியை நான்கு சக்கரங்களுக்கும் ஒரே சமயத்தில் செலுத்துகிற இயக்கத்தின் பெயர்
அ) நான்கு சக்கர இயக்கம்
ஆ) இரண்டு சக்கர இயக்கம்
இ) ஒரு சக்கர இயக்கம்
ஈ) மூன்று சக்கர இயக்கம்
Answer : அ) நான்கு சக்கர இயக்கம்
10.முன்புற என்ஜின் நான்கு சக்கர இயக்கத்தில் எத்தனை டிபரன்சியல் இருக்கும்
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
Answer : ஆ) இரண்டு
11.முன்புற என்ஜின் நான்கு சக்கர இயக்கத்திற்கு ______ அதிகம்
அ) இழுதிறன்
ஆ) தள்ளுதிறன்
இ) அழுத்தும் திறன்
ஈ) நிறுத்தும் திறன்
Answer : அ) இழுதிறன்
12.பின்புற என்ஜின் பின்சக்கர இயக்கத்தில் _____ வழி அமைப்பது எளிது
அ) ஆயில் வெளியேறும்
ஆ) காற்று வெளியேறும்
இ) என்ஜின் புகை வெளியேறும்
ஈ) எரிபொருள் வெளியேறும்
Answer : இ) என்ஜின் புகை வெளியேறும்
13.காற்று எதிர்ப்புத் தடையின் சூத்திரம்
அ) KaAV2
ஆ) PaBV2
இ) Ka=AV
ஈ) K2a=AV
Answer : இ) Ka=AV
14.சாய்வுத் தடையின் சூத்திரம்
அ) Rg = W
ஆ) Rg = W
இ) Rg = W
ஈ) Rg = W
Answer : இ) Rg = W
15.உருளும் தடையின் சூத்திரம்
அ) Rr = KW
ஆ) Rr = KW cos
இ) Rr = Kw sin
ஈ) Rr = KW2
Answer ; அ) Rr = KW
16.டிராக்டிவ் எஃபோர்ட்டை நழுவவிடாமல் கடத்துவதற்கு பெயர்
அ) டிராக்சன்
ஆ) ஆக்சன்
இ) ரியாக்சன்
ஈ) ஆப்போசிட் ரியாக்சன்
Answer : அ) டிராக்சன்
17.பிரேம் என்பது இரு நீண்ட சட்டங்கள், பல குறுக்கு சட்டங்களுடன் ____ மூலம் உறுதியாக இணைக்கப்பட்டிருக்கும்
அ) போல்ட்
ஆ) ரிவட்
இ) வெல்டு
ஈ) பிரேசிங்
Answer : ஆ) ரிவட்
18.புரொபல்லர் ஷாப்ட் மற்றும் யுனிவர்சல் ஜாயிண்ட் என்பது _______க்கும் டிபரன்சியலுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கும்
அ) கியர்பாக்ஸ்
ஆ) என்ஜின்
இ) மோட்டார்
ஈ) கம்ப்ரஸர்
Answer : அ) கியர்பாக்ஸ்
10.சாலைகளில் வாகனத்தைக் கட்டுப்பாட்டுடன் செலுத்தவும், முன் சக்கரத்தை சாலைகளின் வளைவுகளுக்கு ஏற்ப திருப்ப உதவும் அமைப்பு
அ) வால்வு
ஆ) கிளட்ச்
இ) கியர்பாக்ஸ்
ஈ) ஸ்டியரிங் அமைப்பு
Answer : ஈ) ஸ்டியரிங் அமைப்பு
20.பிரேக் என்பது கார்களில் ________ சக்கரத்தில் பொருத்தப்பட்டிருக்கும்
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
Answer : ) நான்கு
பயிற்சித் தாள் – 2
II. குறுவினாக்கள்
1.சக்தி கடத்தும் அமைப்பு என்றால் என்ன?
- ஆட்டோமொபைல் வாகனங்களில் என்ஜினிலிருந்து சுழல் சக்தி கிடைக்கிறது. இந்த சுழல் சக்தி சாலையில் ஓடும் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. அவ்வாறு கடத்தும் பணியில் என்ஜினுக்கும் சாலையில் ஓடும் சக்கரங்களுக்கும் இடையே உள்ள அனைத்து பாகங்களின் தொகுப்பிற்கு சக்தி கடத்தும் அமைப்பு என்று பெயர்
2.சக்தி கடத்தும் அமைப்பின் வகைகள் யாவை?
- முன்புற என்ஜின் பின்சக்கர இயக்கம்
- முன்புற என்ஜின் முன்சக்கர இயக்கம்
- முன்புற என்ஜின் நான்கு சக்கர இயக்கம்
- பின்புற என்ஜின் பின்சக்கர இயக்கம்
3.பிரேம் என்றால் என்ன?
- இரு நீண்ட சட்டங்கள், பல குறுக்கு சட்டங்களுடன் ரிவட் மூலம் உறுதியாக இணைக்கப்பட்டிருக்கும். இந்த பிரேம் வாகனத்தின் முழு எடையையும் தாங்கும் பொருட்டு தரமான எஃகு இரும்பினால் தயாரிக்கப்படுகிறது. சேஸிஸ் பிரேம் என்பது வாகனத்தின் முதுகெலும்பு போன்றதாகும்
4.கிளட்ச் என்றால் என்ன?
- என்ஜின் திறனை தேவையான போது என்ஜின் திறனை தேவையான போது கடத்தவும், துண்டிக்கவும் பயன்படும் கிளட்ச் என்ஜினுக்கும் கியர் பாக்ஸ்க்கும் இடையில் பொருத்தப்பட்டுள்ளது
5.கியர்பாக்ஸ் என்றால் என்ன?
- கியர்பாக்ஸ் பற்சக்கரப் பெட்டி என்று அழைக்கப்படுகிறது.வெவ்வேறு வேகநிலையில் இயங்கக் கூடிய கியர்களை கொண்ட பெட்டியாகும். வாகனத்தின் எடை, சாலையின் அமைப்பு ஆகியவற்றுக்கேற்ப வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியும்
6.புரொபல்லர் ஷாப்ட் மற்றும் யுனிவர்சல் ஜாயிண்ட் என்றால் என்ன?
- புரொபல்லர் ஷாப்ட் மற்றும் யுனிவர்சல் ஜாயிண்ட் ஒரு நீண்ட ஹாலோ ஷாப்ட் ஆகும். இது கியர்பாக்ஸிற்கும் டிபரன்சிலுக்கும் இடையி அமைக்கப்பட்டு இருக்கும். கியர்பாக்ஸிலிருந்து திறனை பெற்று யுனிவர்சல் ஜாயிண்ட் வழியாக டிபரன்சியலுக்கு இறக்க கோணத்தில் சுழல் சக்தியை கடத்த உதவுகிறது
7.ஸ்டியரிங் அமைப்பு என்றால் என்ன?
8.பிரேக் என்றால் என்ன?
9.மின்சார அமைப்பு என்றால் என்ன?
10சக்கரங்கள் மற்றும் டயர்கள் எதற்கு பயன்படுகின்றன?
பயிற்சித் தாள் – 3
III. சிறுவினாக்கள்
சக்தி கடத்தும் அமைப்பின் பாகங்கள் யாவை?
சக்தி கடத்தும் அமைப்பின் தேவைகள் யாவை?
முன்புற என்ஜின் பின்சக்கர இயக்கத்தின் படத்தை வரைக.
முன்புற என்ஜின் முன்சக்கர இயக்கத்தின் படத்தை வரைக.
முன்புற என்ஜின் நான்குசக்கர இயக்கத்தின் நிறைகள் மற்றும் குறைகள் யாவை?
காற்று எதிர்ப்பு தடை பற்றி சிறுகுறிப்பு வரைக.
உருளும் தடை பற்றி சிறுகுறிப்பு வரைக
சாய்வுத்தடை பற்றி சிறுகுறிப்பு வரைக.
தானியங்கி வாகன அடிப்படுகையின் பாகங்கள் ஐந்தினை கூறுக.
தானியங்கி வாகன அடிப்படுகையின் படம் வரைக.
பயிற்சித் தாள் – 4
IV. நெடுவினாக்கள்
முன்புற என்ஜின் முன்சக்கர இயக்கத்தைப் பற்றி படம் வரைந்து விளக்குக.
முன்புற என்ஜின் நான்கு சக்கர இயக்கத்தின் வேலை செய்யும் விததை படத்துடன் விளக்குக.
பின்புற என்ஜின் பின்சக்கர இயக்கத்தின் செயல்பாட்டை படத்துடன் விளக்குக.
தானியங்கி வாகன அடிப்படுகையின் ஏதேனும் ஐந்து பாகங்களைப் பற்றி விரிவான குறிப்பு வரைக..
0 Comments:
Post a Comment