> 12th Tamil First Revision Important Questions ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil First Revision Important Questions

12th Tamil Revision Important 2 Mark Questions


Important 2 marks ( செய்யுள்,உரைநடை) 

1.அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?

  • தண்டியலங்காரம்
  • மாறனலங்காரம்
  • குவலயானந்தம்

2. அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?

  • தொல்காப்பியம், 
  • வீரசோழியம், 
  • இலக்கண விளக்கம், 
  • தொன்னூல் விளக்கம், 
  • முத்து வீரியம் .

3.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தினைக் குறிப்பிடுக

  • நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
  • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.

"ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை

வெண்பா நடகத்தே கலி"

  • என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

4.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

  •  செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களை வியந்நு பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி

5.நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக.

  • மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது.
  • திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
  • சில மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.

6.புக்கில், தன்மனை சிறு குறிப்பு வரைக.

 புக்கில் :

  • ‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.

தன்மனை :

  •  பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ என அழைக்கப்பட்டது

7.நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?

  • நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்.

“என் பொய்யான உலகப்பற்று அழிந்தது;

 என் பிறவி ஒழிந்தது” 

  • என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறாள்.

8.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

  • ஆனந்தம், 
  • மனச்சோர்வு, 
  • அற்பத்தனம், 
  • விழிப்புணர்வு 

. இவைகளை நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்.

மொழித்திறன் பயிற்சி Important 2 Marks ( 7 )

2 marks:

1. விடியல் ,வனப்பு இரு சொற்களையும் இணைத்து ஒரே தொடர் அமைக்க :-

விடை :

  • காலை விடியலின் வனப்பு கண்களைக் கவரும். 
2.திருவளர்செல்வன்,திருவளர்ச்செல்வன் சரியான தொடர் எது ? அதற்க்கான காரணத்தை கூறுக.
விடை : 

  • சரியான தொடர் : திருவளர்செல்வன்
  • காரணம் : வினைத்தொகையில் வல்லினம் மிகாது

பக்க எண் 20

உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

1.தாமரை இலை நீர் போல – பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்.

Answer:

இவ்வுலக ஆசைகளின் மீது தாமரை இலை நீர் போல பற்று இல்லாமல் இருத்தல் வேண்டும்.

2.கிணற்றுத் தவளை போல – வெளி உலகம் தெரியாத நிலை.

Answer:

இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர்.

 3.எலியும் பூனையும் போல – எதிரிகளாக.

Answer:

ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.

4.அச்சாணி இல்லாத தேர் போல – சரியான வழிகாட்டி.

Answer:

நாட்டை வழி நடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்.

5.உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படையாக, தெளிவாக.

Answer:

தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது.

  • பக்க எண் 21

குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.

1. தமிழறிஞர் : முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.

2. தாய்மொழி : ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தரும்.

3. சிறுகதை ஆசிரியர் : முதல் பாதி நவீனம்

4. முன்னெழுத்து அரசன் : பின்னெழுத்து தமிழ் மாதம்

Answer:

1. மறைமலை அடிகள்

2. தமிழ் ஒளி

3. புதுமைப்பித்தன்

4. கோதை

  • பக்க எண் 44

  • பக்க எண் 46
  • பக்க எண் 70
  • பக்க எண் 72

புணர்ச்சி:

வானமெல்லாம்

விடை : 

  • வானம் + எல்லாம்

விதி : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே

அருங்கானம்,

விடை : 

  • அருமை + கானம்

விதி : ஈறுபோதல்

இனநிரை,

விடை : 

  • இனம் + நிரை

விதி : மவ்வீறு ஒற்றழிந்நு உயிரீறு ஒப்பவும்

செல்லிடத்து

விடை : 

  • செல் + இடத்து

விதி 1 : தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்

செல் (ல் + இ) டத்து

விதி 2 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே

பகுபதம்

வியந்து 

விடை : 

விய + த் (ந்) + த் + உ

  • விய - பகுதி
  • த். - சந்தி ( ந் ஆனது விகாரம் )
  • த் - இறந்தகால இடைநிலை
  • உ - வினையெச்ச விகுதி

விம்முகின்ற 

விடை - விம்மு + கின்று + அ

  • விம்மு - பகுதி 
  • கின்று - நிகழ்கால இடைநிலை 
  • அ - பெயரெச்ச விகுதி

  • பக்க எண் : 97
இலக்கணக்குறிப்பு தருக

திருக்குறள் வினாக்கள் படித்துக்கொள்ளவும் 


Share:

1 Comments:

  1. Sir.neenga konjom pdf a sent panna ungaluku punniyamaaaa.... pogum.....

    ReplyDelete