> 7th Social Term 3 - History Lesson 3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள் - Answer Guide ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

7th Social Term 3 - History Lesson 3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள் - Answer Guide

Lesson.3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

7th Social Term 3 - History Lesson 3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள் - Answer Guide

Lesson.3 தமிழகத்தில் சமணம் பெளத்தம் ஆசீவகத் தத்துவங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?

அ.பாடலிபுத்திரம்

ஆ.வல்லபி

இ.மதுரா

ஈ.காஞ்சிபுரம்

விடை : பாடலிபுத்திரம்

2. ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன?

அ.அர்த்த-மகதி பிராகிருதம்

ஆ.இந்தி

இ.சமஸ்கிருதம்

ஈ.பாலி

விடை :  அர்த்த-மகதி பிராகிருதம்

3. கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது ?

அ.புத்தமதம்

ஆ.சமணமதம்

இ.ஆசீவகம்

ஈ.இந்து மதம்

விடை : சமணமதம்

4. தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?

அ.வேலூர்

ஆ.காஞ்சிபுரம்

இ.சித்தன்னவாசல்

ஈ.மதுரை

விடை :  வேலூர்

5. கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?

அ.மகேந்திரவர்மன்

ஆ.பராந்தக நெடுஞ்சடையான்

இ.பராந்தக வீரநாராயண பாண்டியன்

ஈ.இரண்டாம் ஹரிஹரர்

விடை : பராந்தக நெடுஞ்சடையான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ______________

விடை : நேமிநாதர்

2. புத்த சரிதத்தை எழுதியவர் ______________ ஆவார்

விடை : அஸ்வகோஷர்

3. ______________ நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.

விடை : கி.பி. ஏழாம்

4. பெளத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என ______________ எடுத்துரைக்கின்றது

விடை : மகேந்திர வர்மனின் மத்த விலாச பிரகாசனம் எழும் நூல்

5. மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ______________ ஆதரித்தனர்.

விடை : ஆசீவர்களை

III. பொருத்துக

1. கல்ப சூத்ராதிருத்தக்கத் தேவர்

2. சீவகசிந்தாமணிமதுரை

3. நேமிநாதர்நாகசேனர்

4. மிலிந்தபன்காபத்ரபாகு

5. கீழக் குயில் குடி22வது தீர்த்தங்கரர்

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – இ, 5 – ஆ

IV. கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளி

1. பொருந்தாததைக் காண்

அ.திருப்பருத்திக் குன்றம்

ஆ.கீழக் குயில் குடி

இ.கழுகுமலை

ஈ.நாகப்பட்டினம்

விடை : நாகப்பட்டினம்

2. கூற்று : பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.

காரணம் : துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.

அ.கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

ஆ.கூற்று சரி , காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

இ.கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

ஈ.கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

விடை : கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

3. சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்

i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.

ii) ‘பள்ளி’ என்பது புத்தமதத்தாரின் கல்வி மையமாகும்.

iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.

iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து செயல்பட்டது.

அ.(i) மற்றும் (iii) சரி

ஆ.(i, ii) மற்றும் (iv) சரி

இ.(i) மற்றும் (ii) சரி

ஈ.(ii, iii) மற்றும் (iv) சரி

விடை : (i) மற்றும் (iii) சரி

4. தவறான இணையைக் காண்க

1.பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்

2.மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு

3.விசுத்திமக்கா – புத்தகோசா

4.புத்தர் – எண்வகை வழிகள்

விடை : விஜய நகர /  நாயக்கர் காலம்

V. சரியா? தவறா? காண்

1. 12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறத

விடை : சரி

2.  வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்கமுறையைச் சந்திக்க நேர்ந்தது.

விடை : சரி

3. சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது.

விடை : சரி

4. நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த புனிதத்தலங்களாயின.

விடை : தவறு

5. தாதாபுரம் சோழர்காலம் முதலாகவே பெளத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.

விடை : தவறு

VI. கீழ்க்காண்பனவற்றுக்கு விடையளி

1. சமணத்தின் ஐம்பெரும் உறுதி மொழிகளைப் பட்டியலிடுக.

  • 1.எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமலிருப்பது – அகிம்சை
  • 2.உண்மை– சத்யா
  • 3.திருடாமை – அசௌர்யா
  • 4.திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா;
  • 5.பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா

2. புத்தரின் நான்கு பேருண்மைகளைக் கூறுக?

  • வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
  • ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்
  • ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப்பெறலாம்

3. திரிபிடகாவின் மூன்று பிரிவுகளை விளக்குக.

  • வினய பிடகா
  • சுத்த பிடகா
  • அபிதம்ம பிடகா

4. சித்தன்னவாசலின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்க.

  • புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது.
  • இதன் ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையாக அமைந்த குகையும், மற்றொரு முனையில் ஒரு குடைவரைக் கோவிலும் உள்ளன.
  • வேலி அமைக்கப்பட்டுள்ள குகையின் பின்னே தரையில் 17 சமணப்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இத்துறவிகளின் கற்படுக்கைகளில் அளவில் பெரிதாக இருக்கும் ஒன்றில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ளது கோவிலின் முகப்பு எளிமையானதாக கல்லில் செதுக்கப்பட்ட நான்கு தூண்களைக் கொண்டுள்ளது.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவிலின் முன்பகுதியில் அர்த்த மண்டபமும் பின்பகுதியில் கருவறையும் (கர்ப்பகிரகம்) உள்ளன.

Share:

0 Comments:

Post a Comment