> 7th Social Term 3 - History Lesson.4 கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா - Answer Guide ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

7th Social Term 3 - History Lesson.4 கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா - Answer Guide

Lesson.4 கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

7th Social Term 3 - History Lesson 4 கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா - Answer Guide

பாடம்.4 கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. வட அமெரிக்காவையும் ஆசியாவையும் _______________ பிரிக்கிறது.

அ.பேரிங் நீர் சந்தி

ஆ.பாக் நீர் சந்தி

இ.மலாக்கா நீர் சந்தி

ஈ.ஜிப்ரால்டர் நீர் சந்தி

விடை : பேரிங் நீர் சந்தி

2. _______ உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது.

அ.மெக்ஸிகோ

ஆ.அமெரிக்கா

இ.கனடா

ஈ.கியூபா

விடை : கியூபா

3. _________ வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும்.

அ.மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி

ஆ.மெக்கென்ஸி ஆறு

இ.புனித லாரன்சு ஆறு

ஈ.கொலரடோ ஆறு

விடை : மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி

4. உலகின் மிக நீண்ட மலைத்தொடர் _______________.

அ.ஆன்டிஸ்

ஆ.ராக்கி

இ.இமயமலை

ஈ.ஆல்ப்ஸ்

விடை : ஆன்டிஸ்

5. பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் _________ வடிநிலப் படுகை தினந்தோரும் மழை பெறுகிறது.

அ.மெக்கென்ஸி

ஆ.ஒரினாகோ

இ.அமேசான்

ஈ.பரானா

விடை : அமேசான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ________ கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது.

விடை : மரண பள்ளதாக்கு

2. உலகின் தலைசிறந்த மீன்பிடித் தளமாக ________ விளங்குகிறது.

விடை : கிரண்ட் பேங்க

3. சிலி அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ள ______ ஆண்டிஸ் மலைத் தொடரின் உயரமான சிகரமாகும்.

விடை : அகான்காகுவா சிகரம்

4. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ____________ உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

விடை : அமேசான் காடுகள்

5. ________ற்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு.

விடை : பிரேசில்

III. பொருத்துக

1. மெக்கென்லீ சிகரம் வெப்ப மண்டல காடுகள்

2. கிராண்ட் கேன்யான் பறக்க இயலாத பறவை

3. எபோனி கொலரடோ ஆறு

4. நான்கு மணி கடிகார மழை 6194 மீ

5. ரியா பூமத்திய ரேகை பகுதி

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

IV. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை டிக் செய்யவும்

1. கூற்று (A) : வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது.

காரணம் (R) : மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன.

அ.கூற்றும் காரணமும் சரி.

ஆ.கூற்று சரி. காரணம் தவறு.

இ.காரணம் தவறு. கூற்று சரி.

ஈ.காரணம் மற்றும் கூற்று தவறு.

விடை : கூற்றும் காரணமும் சரி.

2. கூற்று : தென் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன.

காரணம் : தொழில்மயமாவதற்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக போக்குவரத்து வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.

அ.கூற்றும் காரணமும் சரி.

ஆ.கூற்று சரி. காரணம் தவறு.

இ.கூற்று தவறு. காரணம் சரி.

ஈ.காரணம் மற்றும் கூற்று தவறு.

விடை : கூற்று தவறு. காரணம் சரி.

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

1. வட அமெரிக்காவின் எல்லைகளை கூறுக.

  • மேற்கில் பசிபிக் பெருங்கடலையும்
  • கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும்
  • வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலையும்
  • தெற்கில் தென் அமெரிக்காவையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

2. மெக்கன்சி ஆறு பற்றி குறிப்பு வரைக.

  • வட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய ஆற்றுப்படுகையாக இருப்பது மெக்கன்ஸி ஆறு.
  • இது கிரேட் ஸ்லேவ் ஏரியில் ஆரம்பித்து ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

3. வட அமெரிக்காவில் விளையும் பழங்களின் வகைகள் யாவை? அவற்றில் சில பழங்களைப் பட்டியலிடுக.

  • வட அமெரிக்காவில் கிரான்பெரீஸ், ப்ளூபெர்ரி, கான்கார்ட் திராட்சைகள், ஸ்ட்ராபெரி, நெல்லிக்கனி மற்றும் பிற பழவகைகள், முக்கிய பழங்களாக விளைவிக்கப்படுகின்றன.

4. எஸ்கிமோவின் வாழ்க்கை முறை பற்றி குறிப்பு வரைக.

  • எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும் வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் எங்கு மீன்கள் அதிகம் கிடைக்கிறதோ, அங்கு வாழ்கிறார்கள்.
  • விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்தி இஃலூக்களில் வாழ்கிறார்கள்.

5. வட அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் யாவை?

  • வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகள், கிரேட் ஏரி பகுதி, மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி அதிகமாக காணப்படுகிறது

6. தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகளை எழுதுக.

  • அமேசான் படுகை
  • கிழக்கு உயர்நிலங்கள்,
  • கிராண்ட் சாக்கோ
  • ஆன்டஸ் மலைச்சரிவுகள்.

7. 4 மணி ’கடிகார மழை’ என்றால் என்ன?

  • பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பச்சலன மழை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது. இது பொதுவாக மாலை 4 மணிக்கு நிகழ்கிறது, அதனால்தான் இது 4 மணி ’கடிகார மழை’ என்று அழைக்கப்படுகிறது.

8. தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பட்டியலிடுக.

i) தாவரங்கள்:

  • ரப்பர், மஹோகனி, கருங்காலி, லாக்வுட், பிரேசில் கொட்டைகள் மற்றும் சீபா.

ii) விலங்குகள்:

  • அனகோண்டா, அர்மடிலோ, பிரன்ஹா, குரங்கு, பாம்பு, முதலை மற்றும் கிளிகள்.

9. எஸ்டான்சியா என்றால் என்ன?

  • கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் எஸ்ட்டென்ஷன் என அழைக்கப்படுகின்றன. இவை சிறிய புல்வெளி தளங்களாக பிரிக்கப்படுகின்றன. இவை மேலும் பராமரிப்பு தளங்களாக பிரிக்கப்பட்டு இங்கு கால்நடைகள் தரம் பிரித்து முத்திரை இடப்படுகின்றன. ‘எஸ்டான்சியாரே’ எனப்படும் எஸ்டான்சியா பராமரிப்பாளரின் கீழ் ‘கவ்சோ’ எனப்படும் வேலையாட்கள் வேலை செய்கின்றனர்.

10. தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிகளை கூறுக.

  • தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிகள் பெரும்பாலும் சர்க்கரை, காபி, கொக்கோ புகையிலை, மாட்டிறைச்சி, சோளம், கோதுமை, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ஆளி விதை, பருத்தி, இரும்பு தாது, தகரம் மற்றும் தாமிரம் போன்ற முதன்மை பொருட்களாகும். தென் அமெரிக்காவின் தயாரிப்புகளில் பெரும்பாலும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

V. பத்தியளவில் விடையளி.

1. வட அமெரிக்காவின் காலநிலை பற்றி விளக்குக.

  • அட்சக்கோடுகளின் அடிப்படையில் வெப்பமண்டல பகுதி முதல் தூந்திர பகுதி வரை பரவியுள்ள வட அமெரிக்கக் கண்டத்தில் ஆசியாவை போலவே பல தரப்பட்ட காலநிலைகள் காணப்படுகின்றன.
  • இந்தியாவின் இமயமலைகள் போலில்லாமல் ராக்கி மலைத்தொடர் வடக்கு தெற்காக அமைந்திருப்பதால், இது ஆர்டிக் பகுதியில் இருந்து வீசும் கடுங்குளிர் காற்றினை தடுக்கும் அரணாக செயல்படவில்லை.
  • மத்திய சமவெளிகளில் ஊடுருவும் குளிர் காற்றினால் வட அமெரிக்காவில் நீண்ட கடுங் குளிர்காலமும் குறுகிய வெப்பமான கோடைக் காலமும்காணப்படுகிறது.
  • சூறாவளி புயல்களினால் இங்கு மழைப்பொழிவு உண்டாகிறது.
  • ஆர்டிக் பகுதி குளிர்ந்தும் வறண்டும் காணப்படுகிறது.
  • இங்கும் குளிர் காலங்கள் நீண்டு கடும் குளிரோடும் கோடை காலங்கள் குறுகி இருக்கின்றன.
  • வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லச்செல்ல கோடைகாலம் வெப்பமானதாகவும், குளிர்காலம் மிகுந்த குளிரோடும் காணப்படுகின்றன.
  • மத்திய சமவெளிகளில் உறைபனியோடு கூடிய குளிர்காலமும் வெப்ப மண்டலம் போன்ற அதிக வெப்பமுடைய கோடை காலமும் காணப்படுகின்றது.
  • வட அமெரிக்கக் கண்டத்தின்  தெற்குப்பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது.
  • மிஸிஸிப்பி மிஸ்செளரி ஆறுகளின் முகத்துவார பகுதிகளும் வளைகுடா கடற்கரை பகுதிகளும் கோடை காலங்களில் வீசும் வடகிழக்கு பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன.
  • சூடான ஈரப்பதம் மிகுந்த தென்மேற்குப் பருவக் காற்றுகள் வட அமெரிக்காவின் வட மேற்குப் பகுதிகளுக்கு மழை பொழிவை தருவதோடு இல்லாமல் அப்பகுதி வெப்பமாக இருக்கவும் உதவுகிறது.
  • வடமேற்கு கடற்கரை பகுதியில் நகரும் அலாஸ்கா வெப்ப நீரோட்டம் அப்பகுதியில் பனி உறையாமல் இருப்பதற்கு காரணமாகிறது.
  • ஈரப்பதம் மிக்க குளிர் காலத்தையும் வறண்ட கோடை காலத்தையும் உள்ளடக்கிய மத்திய தரைக்கடல் காலநிலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காணப்படுகிறது.

2. வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற் சாலை பற்றி எழுதுக.

  • கனமான மற்றும் பருமனான மூலப்பொருட்களைக் கொண்டு பெருமளவிலான எரிபொருள், மூலதனம் மற்றும் போக்குவரத்து செலவினங்களை பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை கனரக பொறியியல் தொழிற் சாலைகள் என அழைக்கப்படுகின்றன.
  • இவை இரும்பு எஃகு தொழிற்சாலைகளை சார்ந்துள்ளன.
  • ஆட்டோமொபைல் தொழிற்சாலை, வான் ஊர்தி தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை, இரயில்பெட்டி தொழிற்சாலை மற்றும் விவசாய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியவை முக்கிய கனரக தொழிற்சாலைகள் ஆகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆட்டோமொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது.
  • வட அமெரிக்காவின் டெட்ராய்ட், சிக்காகோ, பஃபலோ, இண்டியானாபோலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், செயின்ட் லூயிஸ், பிலடெல்பியா, நியூயார்க், பால்டிமோர் மற்றும் அட்லாண்டா ஆகியவையும், கனடாவின் வின்ஸரும் முக்கிய கனரக தொழில் மையங்களாக திகழ்கின்றன.

3. தென் அமெரிக்காவின் ஆறுகள் பற்றி விவரிக்கவும்.

  • ஆன்டஸ் மலைத்தொடரின் அமைவு காரணமாக இக்கண்டத்தின் முக்கிய ஆறுகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. குறுகிய மற்றும் விரைவான ஆறுகள் பசிபிக் பெருங்கடலில் கலக்கின்றன.
  • பெரு நாட்டின் கடற்கரையோரத்திலுள்ள சில ஆறுகள் நீர் பாசனத்திற்கும். நீர் மின்சாரம் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  • தென் அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு அமேசான் ஆறு (6,450 கிலோ மீட்டர்) ஆகும். இது உலகின் மிகப்பெரிய நதியமைப்பு ஆகும்.
  • அமேசான் ஆறு ஆயிரக்கணக்கான கிளை நதிகளை கொண்டது.
  • ரியோ, நீக்ரோ, மதீரா மற்றும் தாபாஜோஸ் ஆகியவை மிக முக்கிய கிளை நதிகள் ஆகும்.
  • இக்கிளை நதிகள் கடலில் கலக்கும் இடத்தில் விரிவாகவும் வேகமாகவும் கலப்பதால் கடலுக்குள் 80 கிலோமீட்டர் வரை நன்னீர் கிடைக்கிறது.
  • ஒரினாகோ ஆறு கயானா உயர் நிலங்களில் ஆரம்பித்து மேற்கு நோக்கி பாய்ந்து கரீபியன் கடலில் கலக்கிறது.
  • பரானா மற்றும் உருகுவே ஆறுகள் வரலாற்றின் முக்கிய கிளை நதிகள் ஆகும். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஆற்றுப் படுகை என அழைக்கப்படுகிறது.
  • கடலில் சேரும் இடத்தில் இருந்து உள்நோக்கி குறிப்பிட்ட தூரம் வரை அனைத்து ஆறுகளும் போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளன.

4. தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள் பற்றி எழுதுக.

  • உலகின் பலதரப்பட்ட கலவையான மக்கள் தொகையை கொண்டது தென் அமெரிக்கா.
  • தென் அமெரிக்காவின் பெரும்பாலான மக்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வருகை புரிந்த ஐரோப்பியர்களான ஸ்பானியர் மற்றும் போர்ச்சுக்கீசியரின் வம்சாவளியினர் ஆவர்.
  • ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக கொண்டு வந்ததன் விளைவாக ஆப்பிரிக்க வம்சாவளியினரும் இங்கு இருக்கின்றனர்.
  • பூர்வகுடி மக்கள் இன்றும் மலைகளிலும் மழைக்காடுகளிலும் அவர்களது சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
  • அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர் என மூன்று முக்கிய இனங்கள் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.
  • பூர்வ குடிமக்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கலப்பினம் “மெஸ்டிஜோ” என அழைக்கப்படுகின்றது.
  • ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் முலாடோ என அழைக்கப்படுகிறது.
  • பூர்வ குடிமக்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் ஸாம்போ என அழைக்கப்படுகின்றது.
  • தென் அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 42,91,15,060 அதாவது 42.91 கோடி ஆகும். சதுர கிலோ மீட்டருக்கு 21 நபர்கள் என்பது தென் அமெரிக்காவின் மக்களடர்த்தி ஆகும்.
  • உலகில் மக்கள் தொகையில் ஐந்தாம் இடத்தில் தென் அமெரிக்கா இருக்கிறது

Share:

0 Comments:

Post a Comment