பாடம்.5 நிலவரைபடத்தை கற்றறிதல்
பாடம்.5 நிலவரைபடத்தை கற்றறிதல்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு என அழைக்கப்படுகிறது________
அ. புவியியல் (ஜியோகிராஃபி)
ஆ. கார்டோகிராஃப்ட்
இ. பிஸியோகிராபி
ஈ.பௌதீக புவியியல்
விடை : கார்டோகிராஃப்ட்
2. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும் ___________ திசைகள் ஆகும்.
அ. முக்கியமான
ஆ. புவியியல்
இ. அட்சரேகை
ஈ.கோணங்கள்
விடை : முக்கியமான
3. கலாச்சார நிலவரை படங்கள் என்பன ________________ அமைப்புகளைக் காட்டுகின்றன.
அ) இயற்கையான
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட
இ) செயற்கையான
ஈ) சுற்றுச்சூழல்
விடை : மனிதனால் உருவாக்கப்பட்ட
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக ___________ அமைகிறது.
விடை : நிலவரைபடங்கள்
2. முதன்மை திசைகளுக்கு இடையே உள்ள திசைகள் இடைநிலை ___________ எனப்படும்.
விடை : திசைகள்
3. நிலவரைபடத்தில் உள்ள ___________ வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் மற்றும் சின்னங்களை விளக்குகிறது.
விடை : குறியீடுகள்
4. காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள் ___________ என அழைக்கப்படுகின்றன
விடை : கிராமம் மற்றும் நகரங்களின் வரைபடம்
5. சிறிய அளவை நிலவரைபடங்கள் ___________ மற்றும் ___________ போன்ற அதிக பரப்பளவு இடங்களைக் காட்ட உதவுகின்றன.
விடை : கண்டங்கள் மற்றும் நாடுகள்
III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக.
1. வடகிழக்கு, அளவை, வடமேற்கு மற்றும் கிழக்கு.
விடை : அளவை
2. வெண்மை, பனி, உயர்நிலம் மற்றும் சமவெளி.
விடை : சமவெளி
3. நில அமைப்பு நிலவரைபடம், மண் நிலவரைபடம், இயற்கை அமைப்பு நிலவரைபடம் மற்றும் நிலவரைபட நூல்.
விடை : நிலவரைபட நூல்
4. வானிலை முன்னறிவிப்பு, காலநிலை, மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை.
விடை : காலநிலை
IV. பொருத்துக
1. மேல் வலது மூலை - அடர்த்தி மற்றும் வளர்ச்சி
2. குறிப்பு - மாவட்டம் அல்லது நகரம்
3. பெரிய அளவை நிலவரைபடம் - இயற்கை நில அமைப்பு
4. இயற்கை அமைப்பு வரைபடம் - வண்ணங்கள் மற்றும் சின்னங்கள்
5. மக்கள் தொகை - வரைபடம்‘N’ எழுத்து
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ
V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க.
1. i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட தொகுதி ஆகும்.
ii. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன.
iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
அ. i மற்றும் iii சரி
ஆ. ii மற்றும் iii சரி
இ. i மற்றும் ii சரி
ஈ.i, ii மற்றும் iii சரி.
விடை : i, ii மற்றும் iii சரி.
2. கூற்று 1 : உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி.
கூற்று 2 : இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.
அ. கூற்று 1 சரி, 2 தவறு
ஆ. கூற்று 1 தவறு, 2 சரி
இ. இரண்டும் சரி
ஈ.இரண்டும் தவறு
விடை : கூற்று 1 சரி, 2 தவறு
VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக.
1. தட்டையான பரப்பில் பூமியைக் குறிப்பது.
- நிலவரைபடங்கள்
2. நிலவரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் நிலத்தில் உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம்.
- அளவை
3. தரைவழி மற்றும் சாலைவழி போக்குவரத்தினைக் காட்ட உதவும் குறியீடு.
- சாலை வழி – இரயில் வழி
4. வேறுபட்ட நிலவரைபடங்களை உள்ளடங்கிய புத்தகம்.
- நில வரைபட நூல்
5. நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலவரைபடம்.
- அரசியல் நிலவரைப்படம்
VII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1. நிலவரைபடம் என்றால் என்ன?
- புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக நிலவரைபடம் அமைகிறது.
- நிலவரைபடம் என்பது புவியின் முழு பகுதி அல்லது ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும
2. கார்டோகிராஃபி என்றால் என்ன?
- நிலவரைபட த்தை உருவாக்கும் அறிவியல் என்பது கார்ட்டோகிராஃபி என அழைக்கப்படுகிறது.
3. முதன்மை திசைகள் யாவை?
- கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு
4. நிலவரைபட நூல் என்பது என்ன?
- நிலவரைபட நூல் என்பது பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் ஆகும்.
- இவை அதிக பரப்பளவிலான கண்டங்கள் மற்றும் நாடுகளைக் காட்டும் சிறிய அளவை வரைபடங்களைக் கொண்டது.
- மலைகள், பிரதான சாலைகள், இரயில்பாதைகள் மற்றும் முக்கிய நகரங்களை நிலவரைபட நூல் வரைபடங்களில் முதன்மையாகக் காட்டப்படுகின்றன.
- அதிக பரப்பின் புவியியல் கூறுகள் குறித்து அறிந்துகொள்ள நிலவரைபட நூல் உதவுகிறது.
5. நிலவரைபட நூலின் வகைகளைக் குறிப்பிடுக.
- பள்ளி நிலவரைபட நூல்
- மேம்படுத்தப்பட்ட நிலவரைபட நூல்
- பிராந்திய நிலவரைபட நூல்
- தேசிய நிலவரைபட நூல்
6. நிலவரைபடத்தின் பயன்கள் யாவை?
- 1.ஒரு இடத்தினை நேரில் சென்று பார்க்காமல் நிலத்தோற்றம் மற்றும் நில அமைப்புகளின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.
- 2.நிலவரைபடங்கள் இராணுவத்தின் திட்டமிடல் பணியில் மகத்தான செயல்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
- 3.விமானங்கள் குறிப்பிட்ட இடத்தை சேரவும், கப்பல் கடலில் பாதுகாப்பாக செல்லவும் உதவுகின்றது.
- 4.நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.
VIII. விரிவான விடையளிக்க.
1. நில வரைபடத்தின் முக்கிய கூறுகள் யாவை? அவற்றைப் பற்றி எழுதுக?
- நிலவரைபடம் அதிக தகவல்களை வழங்குகிறது. நிலவரைபடத்தினை எப்படி வாசித்து விளக்கமளிக்க வேண்டுமென ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில அம்சங்களுடன் வழங்கப்படும் நிலவரைபடமானது அதில் அடங்கியுள்ள தகவல்களை அறிய உதவும் கருவியாக செயல்படுகிறது. தலைப்பு, திசை, அளவை, குறிப்பு அல்லது சின்னங்களின் விளக்கங்கள் போன்றவை நிலவரைபடத்தின் அடிப்படைக் கூறுகள் ஆகும்.
தலைப்பு
- நிலவரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விவரிக்கும் தலைப்பினை ஒவ்வொரு நிலவரைபடமும் கொண்டிருக்கும்.
- உதாரணமாக, இந்திய நதிகள் என்னும் தலைப்பு கொண்ட நிலவரைபடமானது இந்திய நதிகளைப் பற்றி விளக்குவதாகும்.
திசைகள்
- பொதுவாக வரைபடங்கள் வடக்கு நோக்கிய நிலையில் வரையப்படுகிறது.
- நிலவரைபடத்தில் மற்ற திசைகளான கிழக்கு, மேற்கு, மற்றும் தெற்கு திசையை கண்டறிய உதவுகிறது.
- வடக்குக் குறியீட்டிற்குக் கூடுதலாக அட்சரேகைகள் மற்றும் தீர்க்க ரேகைகள் விளிம்புகளில் வரையப்படுகிறது.
- வடக்கு என்பது ‘N’ எனும் எழுத்தால் அம்புக்குறியீட்டுடன் குறிக்கப்படுகிறது.
அளவை
- நிலவரைபடத்தின் அளவை என்பது நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்திற்கும் நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் ஆகும்.
- உதாரணமாக குறிக்கப்படும் அளவையானது 1 செ.மீ. = 10 கி.மீ அதாவது, நிலவரைபடத்தில் 1 செ.மீ. என்பது நிலத்தில் 10 கி.மீ.க்கு சமம். இது நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள தூரத்தை கண்டறிய உதவுகிறது.
குறிப்பு
- குறிப்பு என்பது நிலவரைபடத்தில் வேறுபட்ட இயற்கை மற்றும் கலாச்சார அம்சங்களைக் காட்ட பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் மற்றும் குறியீடுகளைக் குறித்து விளக்குவதாகும்.
- நிலவரைபடத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான சின்னம் மற்றும் குறியீடுகள், தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும். அவை மரபுக்குறியீட்டுகளின் சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன.
- ஒவ்வொரு நிலவரைபடம் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணம் மற்றும் சின்னங்களை விளக்கும் குறிப்பினைப் பெற்றுள்ளன.
- நிலவரைபடத்தில் குடியிருப்புகள், பாலங்கள், தபால்நிலையங்கள், இரயில்வே பாதைகள் மற்றும் காடுகள் போன்றவற்றின் உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது கடினம்.
- அவைகளைக் குறிப்பிட்ட சில வண்ணங்கள், சின்னங்கள் அல்லது எழுத்துக்களால் சித்தரித்துக் காட்டப்படுகின்றன
2. கருத்தின் அடிப்படையில் வரைபடத்தை வகைப்படுத்தவும்?
இயற்கை அமைப்பு நிலவரைபடம்
- நிலத்தோற்றம் (மலை) பாறையில் மண், வடிகால், வானிலை கூறுகள் மற்றும் தாவரங்கள் போன்ற இயற்கை அமைப்புகளைக் காட்டுகிறது.
நிலத்தோற்ற வரைபடம்
- பொதுவான நில அமைப்புகளான மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், பீடபூமிகள் மற்றும் நதிகளைக் பற்றிக் காட்டக்கூடியது.
புவியியல் வரைபடம்
- புவியியல் கட்டமைப்புகள், பாறைகள் மற்றும் தாதுக்களைக் குறித்து வரையப்படுகிறது.
காலநிலை வரைப்படங்கள்
- வெப்பநிலை பரவல், மழையளவு, மேகமூட்டம் ஒப்பு ஈரப்பதம், காற்று வீசும் திசை, வேகம் மற்றும் சில வானிலை கூறுகளைக் குறித்து காட்டுகின்றன.
மண் நிலவரைபடங்கள்
- வெவ்வேறு வகையான மண் மற்றும் அதன் பண்புகள் குறித்துக்காட்ட வரையப்படுவனவாகும்.
கலாச்சார நிலவரைபடங்கள்
- கலாச்சார நிலவரைபடங்கள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளைக் காட்டுவது ஆகும்.
அரசியல் நிலவரைபடங்கள்
- ஒரு நாட்டின் மாநிலம் அல்லது மாவட்டத்தின் நிர்வாக பிரிவுகளைக் காட்டுவதாகும். சம்பந்தப்பட்ட நிர்வாகப் பிரிவுகளில் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை எளிதாக்க இந்த வரைபடம் உதவுகிறது.
மக்கள் தொகை நிலவரைபடங்கள்
- மக்கள் தொகை பரவல், அடர்த்தி மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு அமைப்பு மற்றும் படித்தோர் குறித்துக்காட்டுவது ஆகும்.
பொருளாதார நிலவரைபடங்கள்
- வெவ்வேறு வகைப்பட்ட பயிர்வகைகள், தாதுக்கள், தொழிற்சாலை அமைவிடங்கள், வாணிப வழிகள், பொருள்களை எடுத்து செல்லும் வழிகளைப் பற்றி விளக்குவது ஆகும்.
போக்குவரத்து நிலவரைபடங்கள்
- சாலைகள், இருப்புபாதை, இரயில்வே நிலையம், விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றைக் காட்டுகின்றன.
கருத்து நிலவரைபடங்கள்
- அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அம்சம் அல்லது கருத்தின் பரவலைக் கொண்டும், இடத்திற்கு இடம் மாறுபடுதலைக் குறித்தும் குறிப்பிடுகின்றன
3. நில வரைபடம் மற்றும் புவி மாதிரிகளை வேறுபடுத்தி எழுதுக?
4. அளவையின் அடிப்படையில் நில வரைபடத்தின் வகைகளை விரிவாக எழுது?
பெரிய அளவை வரைபடங்கள் :
பெரிய அளவை நிலைவரைபடம்: குறைந்த பரப்பளவிலான இடங்களைக் குறித்து அதிக விவரங்களைக் கொடுக்கக் கூடியது பெரிய அளவை நிலவரைபடம் ஆகும். ஏனெனில் அவை ஒப்பீட்டளவில் பெரிய பகுதிகளில் வரையப்படுகிறது.
நிலஅளவைப் படங்கள்
நிலஅளவைப் படங்கள் (Cadastral) என்பது கிராமம் மற்றும் நகர்ப்புறங்களின் வரைபடமாகும். அவை நிலம் மற்றும் வீடு இருப்பிடம் (sides) குறித்து விளக்குகின்றன.
தல வரைபடம்
தல வரைபடம் (Topographical) சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்களைத் தருவனவாகும். இவை இந்தியாவின் நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது. இவ்வகை பெரிய அளவை நிலவரைபடங்கள் இயற்கை அமைப்புக்களான குன்றுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் குறித்தும், கலாச்சார அமைப்புக்களான மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள், சாலைகள், மற்றும் கால்வாய்களை குறித்தும் விளக்குகின்றன.
சிறிய அளவை வரைபடங்கள் :
கண்டங்கள் அல்லது நாடுகள் போன்ற பெரிய அளவிலான பகுதிகளை சிறிய அளவுகளைக் கொண்டு வரையப்படும் வரைபடம் சிறிய அளவு வரைபடமாகும். இவ்வகை வரைபடம் 1 செ.மீ = 1000 கி.மீ. ஆகும்.
சுவர் வரைபடங்கள்
சுவர் வரைபடங்கள் என்பது அதிக பரப்பளவை காட்டும் சிறிய அளவை படங்களாகும். இவை வகுப்பறையில் மணவர்களுக்கும் மற்றும் அலுவலகங்களிலும் பயன்படுகிறது. சிறிய அளவை வரைபடமானது அதிக பரப்பளவிலான இடங்களுக்கு குறைந்த அளவு விவரங்களைக் கொடுக்கக் கூடியது.
நிலவரைபட நூல்
நிலவரைபட நூல் என்பது பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் ஆகும். இவை அதிக பரப்பளவிலான கண்டங்கள் மற்றும் நாடுகளைக் காட்டும் சிறிய அளவை வரைபடங்களைக் கொண்டது. மலைகள், பிரதான சாலைகள், இரயில்பாதைகள் மற்றும் முக்கிய நகரங்களை நிலவரைபட நூல் வரைபடங்களில் முதன்மையாகக் காட்டப்படுகின்றன. அதிக பரப்பின் புவியியல் கூறுகள் குறித்து அறிந்து கொள்ள நிலவரைபட நூல் உதவுகிறது.
0 Comments:
Post a Comment