> 7th Social Term 3 - History Lesson.6 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் - Answer Guide ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

7th Social Term 3 - History Lesson.6 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் - Answer Guide

Lesson.6 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

7th Social Term 3 - History Lesson.6 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் - Answer Guide

Lesson.6 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Bokk back Question and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பொருட்சேதம், உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி _____________.

அ.இடர்

ஆ.பேரிடர்

இ.மீட்பு

ஈ.அ மற்றும் ஆ

விடை : அ மற்றும் ஆ

2. பேரிடரின் விளைவைக்குறைக்கும் செயல்பாடுகள்.

அ.தயார்நிலை

ஆ.பதில்

இ.மட்டுப்படுத்தல்

ஈ.மீட்பு நிலை

விடை : மட்டுப்படுத்தல்

3. ஒரு திடீர் நகர்வு அல்லது புவி மேலோட்டின் திடீர் நடுக்கம் _____________ என அழைக்கப்படுகிறது.

அ.சுனாமி

ஆ.புவி அதிர்ச்சி

இ.நெருப்பு

ஈ.சூறாவளி

விடை : புவி அதிர்ச்சி

4. கன மழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல் _____________ என அழைக்கப்படுகிறது.

அ.வெள்ளம்

ஆ.சூறாவளி

இ.வறட்சி

ஈ.பருவ காலங்கள்

விடை : வெள்ளம்

5. _____________ வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.

அ.ரேஷன் அட்டை

ஆ.ஓட்டுநர் உரிமம்

இ.அனுமதி

ஈ.ஆவணங்கள்

விடை : ஓட்டுநர் உரிமம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  மனிதனுக்கும், அவனுடைய உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு _______________.

விடை : இடர்

2. பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் ____________என அழைக்கப்படுகிறது.

விடை : பேரிடர் மேலாண்மை

3. மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை ஏற்படுத்தும் நீரின் இடப்பெயர்வு ______________ எனப்படும்.

விடை : சுனாமி

4. தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண் _____________.

விடை : 101

5. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கக்கூடிய பேரிடரின் போது மனித வாழ்க்கை மற்றும் உடைமைகளை __________ பேரிடர் மேலாண்மை எனப்படுகிறது.

விடை : பாதுகாப்பது

III.பொருத்துக

1. புவிஅதிர்ச்சி - இராட்சத அலைகள்

2. சூறாவளி - பிளவு

3. சுனாமி - சமமற்ற மழை

4. தொழிற்சாலை விபத்து -  புயலின் கண்

5. வறட்சி - கவனமின்மை

விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – இ

IV. பின்வரும் வாக்கியங்களை கருத்திற் கொண்டு சரியான விடையை செய்க.

1. கூற்று (A) : நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது

காரணம் (R) : மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடை மற்றும் பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அ.கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.

ஆ.கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை

இ.கூற்று தவறு; காரணம் சரி.

ஈ.கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை : கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை

2. கூற்று (A) : திடீர் நுகர்வு அல்லது பூமியின் மேலேட்டில் ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி ஆகும்

கூற்று (R) : டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, ஜனநெருக்கடி, பிளவு போன்றவை புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன

அ.கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.

ஆ.கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை

இ.கூற்று தவறு; காரணம் சரி.

ஈ.கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை : கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை

V. சுருக்கமாக விடையளிக்க

1. இடர் வரையறு:

  • இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு, மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும் நிலை, காயம், பொருட்சேதம், சொத்துக்கள் சேதமடைதல், வேலையிழப்பு, சுகாதார பாதிப்புகள், வாழ்வாதார இழப்பு, சமூக, பொருளாதார இடையூறு மற்றும் சுற்றுச்சூழல் சேதம் போன்றவையாகும்.
2. பேரிடர் என்றால் என்ன்?

  • பேரிடர் என்பது பொதுவாக “சமூகத்தில் ஒரு கடுமையான இடையூறு, பரவலான பொருள், பொருளாதார, சமூக அல்லது சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்துகிறது, இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனை மீறுகிறது”.

3. பேரிடர் மேலாண்மை சுழற்சியின் ஆறு நிலைகள் யவை?

  • தயார் நிலை
  • மட்டுப்படுத்துதல்
  • கட்டுப்படுத்துதல்
  • துலங்கல்
  • மீட்டல்
  • முன்னேற்றம்

4. தமிழ்நாட்டில் உள்ள எச்சரிக்கை அமைப்பு சார்ந்த இரண்டு நிறுவனங்கள் எவை?

  • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA)
  • மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA)
  • தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை (SDRF)

5. வெள்ளத்தினால் எற்படும் மூன்று விளைவுகள் பற்றி எழுதுக.

  • சொத்து மற்றும் உயிரிழப்பு
  • மக்கள் இடப்பெயர்வு
  • காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.

6. இரயில் நிலையத்தில் பின்பற்றப்பட வேண்டிய நான்கு நடவடிக்கைகள் குறித்து எழுதுக.

  • இரயில் பாதுகாப்பு ஆலோசனைகளை தெரிந்து கொண்டு அதன்படி பின்பற்ற வேண்டும். இரயில் எந்த நேரமும், எந்த திசையிலும் வரக்கூடும்.
  • இரயில் நிலைய மேடையின் ஓரங்களில் அமரக்கூடாது.
  • தண்டவாளங்களைக் கடந்து செல்ல கூடாது.
  • நடைமேடையை பயன்படுத்தவும்.

VI. வேறுபடுத்துக.

1. புவி அதிர்ச்சி மற்றும் ஆழி பேரலை (சுனாமி).

புவி அதிர்ச்சி

  • ஒரு திடீர் நகர்வு (அல்லது) புவி மேலோட்டில் ஏற்படும் நடுக்கத்தை நில நடுக்கம் என அழைக்கின்றோம்.
  • புவித்தட்டுகளின் நகர்வு, நிலச்சரிவு, மற்றும் மேற்பரப்பு பிளவு போன்றவை நில நடுக்கத்திற்கு காரணமாகின்றன.
  • அதிகப்படியான நில நடுக்கத்தால் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் அணைக்கட்டுகள் இடிந்து சேதமடைகிறது.
  • நிலநடுக்கத்தால், வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு, தீ, மின்சாரம் துண்டிக்கப்படுதல் மற்றும் நீர் குழாய்கள் உடைதல் போன்றவை நிகழ்கின்றன.
  • இது ஆற்றின் பாதையைக் கூட மாற்றியமைக்கிறது.

ஆழி பேரலை

  • நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் மிகபெரிய அலைகளே ஆழிப் பேரலையாகும்.
  • கடல் அலைகள் பல மீட்டர்கள் உயர எழுந்து சில நிமிடங்களில் கடற்கரையை அடைகிறது.
  • வெள்ளப்பெருக்கு, போக்குவரத்து இடையூறு, மின்சாரம், தகவல் தொடர்பு, தண்ணீர் விநியோகம் போன்றவற்றைப் பாதிக்கின்றது.

2. வெள்ளம் மற்றும் சூறாவளி.

வெள்ளம்

  • கனமழை, புயல், பனி உருகுதல், ஆழிப்பேரலை (சுனாமி) அல்லது அணைக்கட்டு உடைதல் போன்றவற்றால் திடீரென ஏற்படும் அதிக அளவிலான நீர் வெளியேறுகிறது.

சூறாவளி

  • உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று “சூறாவளி” என அழைக்கப்படுகிறது.

3. இடர் மற்றும் பேரிடர்.

இடர்

  • பொதுவாக இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு, மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும் நிலை, காயம், பொருட்சேதம், சொத்துக்கள் சேதமடைதல், வேலையிழப்பு, சுகாதார பாதிப்புகள், வாழ்வாதார இழப்பு, சமூக, பொருளாதார இடையூறு மற்றும் சுற்றுச்சூழல் சேதம் போன்றவையாகும்.
  • இயற்கை இடர்கள் என்பது இயற்கை நிகழ்வுகளையும், மற்றும் சுற்றுச்சூழல் மேல் ஏற்படும் எதிர்மறைத் தாக்குதலாகும்.

பேரிடர்.

  • ஒரு பேரிடர் என்பது பொதுவாக “சமூகத்தில் ஒரு கடுமையான இடையூறு, பரவலான பொருள், பொருளாதார, சமூக அல்லது சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்துகிறது, இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனை மீறுகிறது”.
  • பேரழிவுகள் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்டவை.

VII. விரிவான விடையளி.

1. பேரிடர் மேலாண்மை சுழற்சி பற்றி விளக்குக.

  1. பேரிடர்மேலாண்மை சுழற்சி (அ) பேரிடர் சுழற்சி
  2. பேரிடர் மேலாண்மை நிலைகள் ஆறு படிநிலைகளாகக் கொண்டு பேரிடர் சுழற்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  3. பேரிடருக்கு முந்தைய நிலை
  4. கட்டுப்படுத்துதல் மற்றும் மட்டுப்படுத்துதல்

  • எதிர்கால பேரழிவு அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைத்தல் ஆகியவை அடங்கும்.
  • பேரழிவைக் குறைத்தல் என்பது தாக்கத்தின் அளவை குறைப்பதாகும். மட்டுப்படுத்துதல் என்பது ஆபத்தை குறைப்பது மற்றும் பாதிக்கக்கூடிய நிலைமைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகும்.
  • இந்த இயற்பியல் காரணிகளுக்கும் கூடுதலாக, தீமை, மற்றும் பாதிப்பிற்கு அடிப்படைக்காரணங்களும் மற்றும் அச்சுறுத்தக்கூடிய உடல் ரீதியான, பொருளாதார, சமூகத் தீமைகளைக் குறைப்பதும் மட்டுப்படுத்தலின் முக்கிய குறிக்கோளாக அமைகிறது.
  • எனவே மட்டுப்படுத்தல் என்பது நில உரிமை, குத்தகை உரிமைகள், வளங்கள் பரவல், புவி அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய கட்டட குறியீடுகள் செயல்படுத்த இன்னும் பல இது போன்ற பிரச்சனைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும்.

தயார்நிலை

  • இந்த படிநிலையானது அரசாங்கம், சமூகங்கள் மற்றும் தனி ஒரு மனிதன் பேரிடர் சூழ்நிலைகளை திறம்பட சமாளிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும்.
  • உதாரணமாக, அரசின் அவசரநிலை திட்டங்கள், எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல், சரக்குகளின் பராமரிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு, கல்வி மற்றும் தனிநபர் பயிற்சி போன்றவை அடங்கும்.
  • தொடர் பேரழிவின் ஆபத்தில் உள்ள பகுதிகளுக்கான மீட்பு நடவடிக்கைகளைக் கண்டறிவதுடன் திட்டங்களை வெளியேற்றவும் இதில் அடங்கும் அனைத்துவகை தயார்நிலை திட்டங்களும் உரிய பொறுப்பு மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகளும் கூடிய சட்ட விதி மற்றும் ஒழுங்குமுறைகளினாலும் ஆதரிக்கப்பட வேண்டும்.

ஆரம்பகால எச்சரிக்கை

  • பேரிடர் ஆரம்பிக்கும் நிலையில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ள பகுதிகளைப் பார்வை இடுவது மற்றும் பேரிடர் தொடங்க உள்ளது என்ற செய்தியினை மக்களுக்கு பாதிப்பில்லாத வழியில் தெரிவிப்பது போன்றவை ஆரம்ப கால எச்சரிக்கையாகும். பயனுள்ளதாக அமைய, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அளிக்கப்படும் எச்சரிக்கை நிகழ்வுகள் மக்கள் கல்வி மற்றும் பயிற்சியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

பேரிடரின் தாக்கம்

  • பேரிடரின் தாக்கம் என்பது பேரிடர் நிகழும் கால அளவு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் குறிக்கும். பேரிடர் நிகழும் கால அளவு என்பது அச்சுறுத்தலின் வகையைப் பொறுத்து அமையும். புவி அதிர்ச்சியின்போது நில நடுக்கமானது சில நொடிகள் நிகழும். அதுவே, ஆழிப்பேரலை ஏற்பட ஒரு காரணமாகிறது.

பேரிடரின் போது

துலங்கல்

  • கட்டுப்பாட்டு அறைகளை அமைத்தல், தற்செயல் திட்டத்தை செயல்படுத்துதல், எச்சரிக்கை விடுதல், வெளியேற்றுவதற்கான நடவடிக்கை, மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது, தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதல், ஒரே நேரத்தில் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட எந்தவொரு பேரிடருக்கும் இது முதல் கட்ட பதிலைக் குறிக்கிறது
  • வீடு இழந்தோருக்கு உணவு, உடை, குடிநீர் மற்றும் நிவாரணம் வழங்குதல், தகவல் தொடர்பு மறு சீரமைத்தல், பணமாகவோ அல்லது கருணையாகவோ உதவி வழங்குதலும் அடங்கும். பேரிடரின்போதோ, பேரிடரினைத் தொடர்ந்தோ அவசர கால நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • இதில் நிவாரணம் வழங்குதல், மீட்பு, சேதார மதிப்பீடு, மற்றும் தேவையற்ற குப்பைகளை நீக்குதலும் அடங்கும்.


Share:

0 Comments:

Post a Comment