> 7th Tamil Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

7th Tamil Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

7th Tamil Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் பரி’ என்பதன் பொருள் ……………………

அ) யானை

ஆ) குதிரை

இ) மான்

ஈ) மாடு

Answer:

ஆ) குதிரை

2.பொருந்தாத ஓசை உடைய சொல் …………………….

அ) பாய்கையால்

ஆ) மேன்மையால்

இ) திரும்புகையில்

ஈ) அடிக்கையால்

Answer:

இ) திரும்புகையில்

3.‘வண்கீரை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………

அ) வண் + கீரை

ஆ) வண்ண ம் + கீரை

இ) வளம் + கீரை

ஈ) வண்மை + கீரை

Answer:

ஈ) வண்மை + கீரை

4கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….

அ) கட்டியிடுத்தல்

ஆ) கட்டியடித்தல்

இ) கட்டி அடித்தல்

ஈ) கட்டு அடித்தல்

Answer:

ஆ) கட்டியடித்தல்

சிறுவினா

1.கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?

Answer:

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.2 கீரைப்பாத்தியும் குதிரையும் - 1

இக்காரணங்களால் கீரைப்பாத்தியும் ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

சிந்தனை வினா

நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?

Answer:

நான் காளைமாடு, ஆறு ஆகியவற்றை குதிரையோடு ஒப்பிடுவேன்.

ஆறும் குதிரையும் :

ஆறு – வேகமாக ஓடும். மெதுவாகப் பாய்ந்து வயலை வளப்படுத்தும்.

குதிரை – வேகமாக ஓடும். பகைவரைத் தாக்கும். அன்புடன் தலை சாய்க்கும்.

காளையும் குதிரையும் :

காளை – வேகமாக ஓடும். வண்டி இழுக்கும் உரிமையாளரிடம் அன்போடு பழகும்.

குதிரை – வேகமாக ஓடும். வண்டி இழுக்கும் உரிமையாளரிடம் அன்போடு அமைதியாக நிற்கும்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. வண்கீரை – வளமான கீரை

2. முட்டப் போய் – முழுதாகச் சென்று

3. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்) எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்

4. பரி – குதிரை

5. கால் – வாய்க்கால், குதிரையின் கால்

நிரப்புக.

 1.ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது ………….. எனப்படும்.

Answer:

இரட்டுற மொழிதல்

2.இரட்டுற மொழிதலை ……………. என்றும் கூறுவர்.

Answer:

சிலேடை

 3.பரி என்பதன் பொருள் ……………….

Answer:

குதிரை

 4.வண்கீரை என்பதன் பொருள்

Answer:

வளமான கீரை

 5.காளமேகப்புலவரின் இயற்பெயர் ……

Answer:

வரதன்

 6.கீரைப்பாத்தியும் குதிரையும் ……………. என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.

Answer:

தனிப்பாடல் திரட்டு

விடையளி :

 1.இரட்டுற மொழிதல் என்றால் என்ன?

Answer:

ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் பாடல் இரட்டுறமொழிதல் ஆகும்.

 2.காளமேகப்புலவர் எழுதிய நூல்கள் யாவை?

Answer:

திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களைக் காளமேகப்புலவர் எழுதியுள்ளார்.

பாடலின் பொருள்

கீரைப்பாத்தியில்

மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

குதிரை

வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும், கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும் ; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.

Share:

0 Comments:

Post a Comment